என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia Ukraine war"

    • பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்காவும், அதிபர் டிரம்ப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுத்து வருகின்றன.
    • ரஷிய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது.

    ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக டிரம்ப் 28 அம்சங்களை கொண்ட அமைதி ஒப்பந்தத்தை வெளியிட்டார்.

    இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமைதி ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று உக்ரைனும், அந்நாட்டுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தின. இதையடுத்து அமைதி ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த முதலீட்டு மன்ற நிகழ்ச்சியில் புதின் பங்கேற்று பேசியதாவது:-

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஐரோப்பிய அரசாங்கங்கள் ரஷியாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்காவும், அதிபர் டிரம்ப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுத்து வருகின்றன.

    நாங்கள் ஐரோப்பாவுடன் போருக்குச் செல்லத் திட்டமிடவில்லை. ஆனால் ஐரோப்பா விரும்பினால், போரை தொடங்கினால் நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம். அவர்கள் போரின் பக்கம் இருக்கிறார்கள். ஐரோப்பிய தலைவர்கள் அமைதியான அணுகுமுறையைக் கை விட்டு உக்ரைனில் தொடர்ந்து விரோதப் போக்கை ஆதரித்து வருகிறார்கள்.

    ரஷிய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இது ஒரு கடற்கொள்ளையாகும். இதற்கு பதிலடியாக உக்ரைன் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படும். இந்த தாக்குதலை தடுக்க கடலில் இருந்து உக்ரைனை துண்டிக்க வேண்டும் என்றார். 

    • போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் ஜெலன்ஸ்கி மேற்கொண்டு வருகிறார்.
    • புதிய முயற்சியாக துருக்கில் அமெரிக்க சிறப்பு தூதரை சந்திக்க இருக்கிறார்.

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியா உக்ரைனில் உள்ள எனர்ஜி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா தாக்குதலை முறியடித்து உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதேவேளையில் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்டு வருகிறார். ரஷியாவை எதிர்ப்பதற்கு ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று ஸ்பெயினில் இருக்கும் ஜெலன்ஸ்கி நாளை, துருக்கி செல்கிறார்.

    துருக்கி செல்லும் அவர் அமெரிக்காவின் சிறப்பு தூதராக ஸ்டீவ் விட்காஃவை சந்திக்க இருக்கிறார். அப்போது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய முயற்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்துப்படக்கூடும் எனத் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை ரஷியா யாரையும் அனுப்பவில்லை. துருக்கி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    துருக்கி இந்த வருடம் தொடக்கத்தில் உக்ரைன்- ரஷியா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இந்த பேச்சுவார்த்தையும் போர் நிறுத்தம் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேவேளையில் இரு நாடுகளுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

    பேச்சுவார்த்தைகள் மீண்டும் புத்துயிர் பெற நாங்கள் தயாராகி வருகிறோம். மேலும் எங்கள் கூட்டாளர்களுக்கு முன்மொழியும் தீர்வுகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். போரை முடிவுக்கு கொண்டு வர முடிந்த அனைத்தையும் செய்வது உக்ரைனின் முதன்மையான முன்னுரிமையாகும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் பரிந்துரைகளை ரஷியா நிராகரித்ததால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.
    • எண்ணெய் கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.

    ரஷியாவின் கருங்கடல் துறைமுகமான துவாப்சை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த எண்ணை கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணை கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் துறைமுகம் மற்றும் எண்ணை கப்பல் கடும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துறைமுகத்தின் கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துவாப்ஸ் துறைமுகம் ரஷியாவின் கச்சா எண்ணை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இந்த தாக்குதலால் ரஷியாவின் கச்சா எண்ணை விநியோகம் பாதிக்கப்படும்.

    துவாப்ஸ் துறைமுகத்தில் உள்ள எண்ணை முனையம், ரஷியாவின் மிகப்பெரிய எண்ணை நிறுவனமான ரோஸ்நெப்ட்டுக்கு சொந்தமானது. சமீபத்தில் இந்த நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே துவாப்ஸ் அருகே உள்ள சோஸ்னோவி கிராமத்திலும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்தது. மேலும் துவாப்சில் உள்ள ரெயில் நிலையத்திலும் சிறிது சேதங்கள் ஏற்பட்டது.

    • ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்களை இந்தியா வாங்குவதை அமெரிக்க உயர் அதிகாரிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
    • இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள்.

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந் தேதி அமலுக்கு வந்தது.

    அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. எனவே, இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு நேற்று முதல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இதனிடையே, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்களை இந்தியா வாங்குவதை அமெரிக்க உயர் அதிகாரிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், உக்ரைனில் நடைபெறும் மோதலை 'மோடியின் போர்' என்றும் இந்தியர்கள் திமிர்பிடித்தவர்கள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் ஆலோசகர், பீட்டர் நவேரா கூறியுள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பீட்டர் நவேரா, உக்ரைனில் நடைபெறும் மோதல் 'மோடியின் போர்'. இந்தியா குறைந்த விலையில் ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவது அந்நாட்டின் ஆக்கிரமிப்பை தூண்டிவிடுவதோடு, அமெரிக்க வரி செலுத்துவோர் மீது சுமையை அதிகரித்துள்ளது. எங்களது வலியுறுத்தலை ஏற்று ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியில் 25 சதவிகிதத்தை குறைப்போம். இந்தியர்கள் இந்த விவகாரத்தில் மிகவும் திமிர்பிடித்தவர்களாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. அவர்கள், எங்களிடம் அதிக வரிகள் இல்லை. இது எங்கள் இறையாண்மை. நாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்கலாம் என்று கூறுகிறார்கள். இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதன் மூலம், தனக்குக் கிடைக்கும் பணத்தை ரஷியா அதன் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்கிறது. உக்ரேனியர்களைக் கொல்கிறது. இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள். மோடியின் போரால் அமெரிக்கா வணிகம், நுகர்வோர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்திக்கிறது என்று கூறியுள்ளார்.

    நவரே, இந்தியா மீது குற்றம்சாட்டுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக அவர் இந்தியாவை 'வரிதழ்களின் மகாராஜா' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரஷியா, உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டை கடந்துள்ளது.
    • இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனா்.

    கீவ்:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனா். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், இருநாடுகளும் போரை நிறுத்தால் தொடர்ந்து தாக்கி வருகின்றனா்.

    இந்நிலையில், ரஷியாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ராஜினாமா கடிதத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஏற்ற அதிபர் ஜெலன்ஸ்கி புதிய பிரதமராக யூலியா ஸ்வைரிடென்கோவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

    உக்ரைன் பிரதமர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உக்ரைன் மீது ரஷியா ஏவிய டிரோன் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
    • ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.

    கீவ்:

    உக்ரைன் மீது மொத்தம் 69 ஏவுகணைகள் மற்றும் 298 டிரோன்களை ரஷியா நள்ளிரவில் ஏவி மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    ரஷியா உடனான போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என அந்நாட்டு விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ரஷியாவின் டிரோன் தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி டெலிகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷியாவின் இதுபோன்ற ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலும் அந்நாட்டுக்கு எதிரான புதிய தடைகளுக்கு போதுமான காரணமாகும். ரஷியா இந்தப் போரை இழுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொலைகளைத் தொடர்கிறது.

    உலகம் விடுமுறையில் செல்லலாம், ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் வார நாட்கள் இருந்தபோதிலும் போர் தொடர்கிறது. இதைப் புறக்கணிக்க முடியாது.

    அமெரிக்காவின் மவுனமும், உலகில் உள்ள மற்றவர்களின் மவுனமும் புதினை ஊக்குவிக்கிறது என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

    • நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
    • தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து ஏவப்பட்ட டிரோன்களும் அழிக்கப்பட்டன.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்தது.

    ஆனால் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியது. தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த டிரோன்களை நடுவானில் இடைமறித்து ரஷியா அழித்தது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும் போது, இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 உக்ரைன் டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டது. மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் 4 மணி நேரத்திற்குள் 95 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து ஏவப்பட்ட டிரோன்களும் அழிக்கப்பட்டன. மத்திய நகரமான துலாவிலும், மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ட்வெர் நகரத்திலும் வான் பாதுகாப்பு பிரிவுகள் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது என்று தெரிவித்தது.

    மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் கூறும்போது, தலைநகருக்கு அருகில் 11 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்றார்.

    • ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
    • ரஷிய ராணுவத்துடன் இணைந்து சில நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    மாஸ்கோ:

    உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது.

    அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த சண்டையில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து சில நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ரஷியா வடகொரியா வீரர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி புகார் கூறினார்.


    இந்த நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா படை வீரர்களும் களம் இறங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரஷிய தலைமை ராணுவ கண்காணிப்பாளர் வலேரி ஜெராசிமோஸ் கூறியதாவது:-

    வடகொரிய வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்து போரிட்டனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் இந்த போரில் வடகொரியா வீரர்கள் எத்தனை பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் உயிர் இழந்தவர்கள் விவரம் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்க வில்லை.

    ஆனால் ஆயிரக்கணக்கான வீரர்கள் ரஷிய படையுடன் இணைந்து போரிட்டு வருவதாக தென் கொரியா உளவுத்துறை தெரிவித்து இருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் போரில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக கூறி இருந்தார். தற்போது இது நிரூபணம் ஆகி உள்ளது.

    • குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படையினா் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டு விட்டனா்.
    • குர்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளதை உக்ரைன் மறுத்து உள்ளது.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

    இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருந்த போதிலும் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அதே போல் உக்ரைனும் தாக்குதல் நடத்துகிறது.

    இப்போரில் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமாா் 1,300 கி.மீ. நிலப்பரப்பை உக்ரைன் ராணுவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது. இப்பகுதியை மீட்க ரஷிய ராணுவம் தீவிரமாக சண்டையிட்டது.

    இந்த நிலையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டு அப்பகுதியை முழுமையாக மீட்டு விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.

    இது குறித்து ரஷிய அதிபா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறும்போது,

    குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படையினா் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டு விட்டனா். இந்தத் தகவலை அதிபா் புதினிடம் ரஷிய முப்படை தளபதி வேலரி கெராஸி மொவ் தெரியப்படுத்தினாா் என்றார்.

    இதையடுத்து குர்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக மீட்டதற்காக ரஷிய படையினருக்கு புதின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அந்தப் பிராந்தியத்தில் ஊடுருவி, ரஷியாவை அடிபணிய வைக்கும் உக்ரைனின் திட்டம் படுதோல்வி அடைந்ததாக புதின் தெரிவித்தார்.

    ஆனால் குர்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளதை உக்ரைன் மறுத்து உள்ளது.

    இது குறித்து உக்ரைன் ராணுவம் கூறும்போது, குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படையினரின் முன்னேற்றத்தை எங்களது ராணுவம் தொடா்ந்து தடுத்து நிறுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளது.

    • கீவ் மீதான ரஷியாவின் தாக்குதல் எனக்கு வருத்தம் அளிக்கிறது.
    • இது தேவையில்லாதது. மேலும் மிகவும் மோசமான நேரம்.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 3 வருடங்கள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா, தற்போது உக்ரைனுடன் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தற்போது 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா பயங்கர வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

    சமீபத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் கீவ் மீதான தாக்குதலை தொடர்ந்து புதினை டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

    கீவ் மீதான ரஷியாவின் தாக்குதல் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது தேவையில்லாதது. மேலும் மிகவும் மோசமான நேரம். புதின், நிறுத்துங்கள்..! வாரத்திற்கு 5 ஆயிரம் வீரர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிக்கலாம்..!

    இவ்வாறு டிரம்ப் தனது TRUTH சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்கா சமீப காலமாக தீவிரம் காட்டி வருகிறது. அதன் பேரில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாட்டு அதிபர்களிடம் பேசியதன் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷியா குறுகிய கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதன்படி இருநாடுகள் இடையே 30 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வரவுள்ளது. இருநாடுகளும் மற்றவரின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என்று ஒப்புக் கொள்ள செய்வதில் தான், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.

    அதிபர் புதினுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, இருநாட்டு தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த வார இறுதியில் சவுதி அரேபியாவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இருநாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா "எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள்" என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும், இத்துடன் ரெயில்வே மற்றும் துறைமுகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது.

    அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதள பக்கத்தில், "போரை முடிவுக்குக் கொண்டுவரும் முதல் படியாக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவது தான் இருக்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு தான் எப்போது போர் நிறுத்த ஒப்ந்தம் அமலுக்கு வரும் என்று தெரியவரும்.

    • சர்வதேச அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார்.

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சி சர்வதேச அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.

    முன்னதாக சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் கூறும் போது சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ள நிலையிலும் ரஷியா போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லை. ஒருப்பக்கம் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பும் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனுடன் விரைவான போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

    இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ரஷிய அதிபர் புதின் இந்த வாரம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×