என் மலர்
நீங்கள் தேடியது "ukraine russia war"
- இரு நாடுகளும் அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்துகின்றனர்.
- உக்ரைன் ராணுவம் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
ரஷியா-உக்ரைன் போர் 20 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைன் பெரும் தோல்வியை சந்தித்தது. பின்னர் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளால் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. அதிலும் சமீப காலமாக இரு நாடுகளும் அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்துகின்றனர்.
அந்தவகையில் ரஷியாவின் பெல்கொரோட் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் ராணுவம் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 9 உராகன் எம்.எல்.ஆர்.எஸ். டிரோன்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதன்மூலம் உக்ரைனின் தாக்குதல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார்.
- அங்கு அவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் வரவேற்றார்.
ஒட்டாவா:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கி ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் வரவேற்றார்.
அதன்பின், அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது:
நேட்டோ உள்ளிட்ட நமது கூட்டாளிகளுடன் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.
உக்ரைனுக்கு அடுத்த வருடமும் தொடர்ந்து கனடா அரசு பொருளாதார உதவிகளை வழங்கும். ஆனால் நாங்கள் விரும்புவது உக்ரைனுக்கு நீண்ட காலத்திற்கு ராணுவ உதவிகளோ அல்லது பொருளாதார உதவிகளோ தேவைப்படாத வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது தான்.
நிரந்தரமான அமைதி என்பது ராணுவத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல் அண்டை நாடுகளின் எல்லைகளை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
உக்ரைன் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்றார்.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.
- வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21-ம் தேதி அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெள்ளை மாளிகை வந்தார். அவரை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவின் போர் எங்களுடன் நிற்கப்போவதில்லை என ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருந்தார்
- ரஷியா போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு கனடா ஆதரவு தெரிவித்து வருகிறது
ஐ.நா. சபையின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்பு கவுன்சிலில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
ரஷியா எரிசக்தி மற்றும் உணவை ஆயுதமாக்கி வருகிறது. மில்லியன் கணக்கான மக்கள் உணவு தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர். பசி மற்றும் பட்டினியால் வாடுகின்றனர். மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதில் கனடா அர்ப்பணிப்புடன் உள்ளது.
உக்ரைன்- நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் உலகளாவிய முன்னேற்றம் ஆகிவற்றிற்கு இடையேயான ஆதரவை முடிவு செய்வதை நாங்கள் நம்பவில்லை. உண்மையிலே, ஒரே பொறுப்பு இரண்டையும் தேர்வு செய்வதுதான். ஒற்றுமை மற்றும் நிதி அர்ப்பணிப்புடன் அதை செய்து கொண்டிருக்கிறோம். ரஷியா முற்றிலுமாக, உடனடியாக உக்ரைனில் இருந்து துருப்புகளை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
- ரஷியாவுக்கு வடகொரியா முழு ஆதரவு தெரிவிப்பு
- கடந்த சில நாட்களாக ரஷியாவின் ஆயுதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் கிம் ஜாங் உன்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அங்கு சென்றுள்ள அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
அதன்பிறகு ரஷியாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டு வருகிறார். ஏற்கனவே கிம் ஜாங் உன் பயணம் குறித்து தென்கொரியா கவலை தெரிவித்திருந்தது. ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷியா வழங்கக்கூடும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ரஷியாவின் கிழக்குப்பகுதியில் தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் கிம் ஜாங் உன், இன்று விளாடிவோஸ்டோக்கில் அணுஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை ஆய்வு செய்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.
புதின்- கிம் ஜாங் உன் கடந்த புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, ரஷியாவிற்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்குவதற்குப் பதிலாக, ரஷியாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வடகொரியா ரஷியாவிடம் கேட்பது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அடுத்ததாக ரஷியாவின் கப்பற்படைக்கு சென்று கிம் ஜாங் உன் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது. இதில் இருந்து ரஷியாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்க இருப்பதும், ரஷியாவின் தொழில்நுட்பத்தை வடகொரிய பயன்படுத்த வாய்ப்புள்ளதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் பொரில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை செலவழித்துள்ள ரஷியாவுக்கு தற்போது ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவின் உதவியை நாடியுள்ளது. வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில், அமெரிக்காவுக்கு இணயைாக ரஷியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
- அண்டை நாடான கியூபாவில் சட்ட விரோதமாக ஆட்களை சேர்க்க முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹவானா:
உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா கடந்த ஆண்டு போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ரஷியாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகளான சீன, வடகொரியா போன்றவை செயல்படுகின்றன.
இந்தநிலையில் ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி அண்டை நாடான கியூபாவில் சட்ட விரோதமாக ஆட்களை சேர்க்க முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அந்த நாட்டின் தூதர் ஜூலியோ அன்டோனியோ கார்மென்டியா பெனா கூறுகையில், `கியூபா நாட்டவர்கள் ரஷிய ராணுவத்தில் சட்டப்பூர்வமாக சேர்ந்து பணியாற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் இந்த நெருக்கடியை பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிக்கின்றனர். எனவே இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது' என அவர் தெரிவித்தார்.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார்.
- வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21ம் தேதி அமெரிக்கா வருகிறார். வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்கிறார். அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- கப்பல் கட்டும் தளம் தீப்பிடித்து எரிந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
- கருங்கடல் கடற்படையில் உள்ள கப்பல்களின் பழுதுகள் சரி செய்யப்படுகின்றன.
ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா தீபகற்பத்தில் துறைமுக நகரமான செவஸ்டோபோலில் கப்பல் கட்டும் தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் கட்டும் தளம் தீப்பிடித்து எரிந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் 24 பேர் காயம் அடைந்தனர். தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த கப்பல் கட்டும் தளம் ரஷியாவுக்கு மிகவும் முக்கியமானது. இங்கு கருங்கடல் கடற்படையில் உள்ள கப்பல்களின் பழுதுகள் சரி செய்யப்படுகின்றன.
- உக்ரைன், ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்தது.
வாஷிங்டன்:
உக்ரைன், ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இவை உக்ரேனிய படைகள் ரஷிய படைகளின் முன் பகுதியை தாக்க உதவியாக இருக்கும்.
இந்த தொகுப்பில் ரஷிய விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளுக்கு எதிராக செயல்படக்கூடிய வான் ஏவுகணைகள், ஜாவெலின் எதிர்ப்பு கவச ராக்கெட்டுகள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
- ரஷியாவுக்கு ராணுவ உதவி செய்ய வடகொரியா ஒப்புக் கொண்டதாக தகவல்
- ஈரான், சீனா போன்ற நாடுகள் ரஷியாவுக்கு மறைமுகமாக உதவி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது
உக்ரைன் மீது 18 மாதங்களுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வருகிறது. அதேபோன்று மேற்கத்திய நாடுகளும் உதவி புரிந்து வருகின்றன. இதனால் உக்ரைன் எதிர்தாக்குல் நடத்தி வருகிறது.
அதேவேளையில் ரஷியாவிற்கு ஈரான், வடகொரியா, சீனா ஆகியவை உதவி புரிந்து வருகின்றன. ஆனால், வெளிப்படையாக உதவி செய்வதாக கூறவில்லை. இந்த மூன்று நாடுகளுக்கும் அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே சமீபத்தில் வடகொரிய ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. ரஷியா தாக்குதல் தொடங்கிய பிறகு வெளிப்படையாக இந்த செய்தி உலா வருகிறது. இதற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்தை வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ''உக்ரைனுக்கு எதிராக சண்டையிடும் வகையில் வடகொரியா, ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்கினால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்'' எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கொரியா தீபகற்பத்தில் அணுஆயுத கப்பலை அமெரிக்கா நிலைநிறுத்திய விவகாரத்தில் வடகொரியாவுக்கும் அமெரிக்கா-தென்கொரியாவுக்கும் (கூட்டு) இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது.
எப்போது வேண்டுமென்றாலும் வடகொரிய மீது தாக்குதல் சதி நடத்தப்பட வாய்ப்புள்ளதால், தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்தை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அவ்வப்போது ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.