என் மலர்
இந்தியா

இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்
- ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது.
- இந்திய இளைஞர்களை வலுகட்டடாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்த்ததாக தகவல் வெளியானது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போர் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதலில் அதிவேகமாக ரஷியா உக்ரைன் பகுதிக்குள் முன்னேறியது. அதன்பின் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்தன. இதனால் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது.
இதனால் ரஷிய ராணுவம் பின்வாங்க தொடங்கியது. மேலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்தது. இதனால் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களை அதிக சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவத்தில் இணைத்தது.
அப்படி இந்தியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவரை ராணுவத்தில் சேர்த்து உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஈடுபடுத்தியது ரஷியா. உக்ரைனுக்கு எதிரான சண்டையில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும், ரஷிய ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்கவேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.






