என் மலர்
நீங்கள் தேடியது "Indian"
- கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பீகார் மாநிலம் பெருசு ராய் மாவட்டம் கிசான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்சர்மா (40). இவர் ஈரோடு, நசியனூர் ரோடு கைகாட்டிவலசில் உள்ள கிளாஸ் கம்பெனியில் கார்பென்டராக வேலை பார்த்து அங்கேயே தங்கியிருந்து வந்தார். சுனில் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் ரோட்டோரம் இருந்த கல் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சுனில் சர்மா நிலைதடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் மூச்சு திணறி, பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனில்சர்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்புக்கு இடையே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது கமல்ஹாசனை நோக்கி, செருப்பு, கல், முட்டை வீசப்பட்டது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று கமல்ஹாசன் சூலூரில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் ‘பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்துக்கு நன்றி. இதோ என்னுடைய பரப்புரை காண...’ என்று தலைப்பிட்டு தனது டுவிட்டர் பதிவில், 3 நிமிடம் 26 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில் ஆக்ரோஷமாக பேசிய கமல்ஹாசன், நிறைவாக ‘மாற்ற வேண்டியவர்களை மாற்றி விட்டால், இந்த நாடே மாறிவிடும்’ என்று கூறுகிறார்.
இதனிடையே தன் மீதான சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, கமல்ஹாசன் டுவிட்டரில் நேற்று மாலை மீண்டும் ஒரு பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறது மத்திய-மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. ஆழ்வார்களோ, நாயன்மார்களே, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.
முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை.
நாம் ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக அரசியல் மற்றும் ஆன்மிக ரீதியாக பிழையான தேர்வாகும்.
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கிறோம். ‘கோடி’ன்ன உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! ‘தமிழா’ நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 17, 2019
இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 253 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இலங்கை ராணுவமும், போலீஸ் படைகளும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையும், இரவு நேர ஊரடங்கு உத்தரவும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இலங்கைக்கு பயணம் செய்வதை பாதிப்பதாக உள்ளது. எனவே அங்கு தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இலங்கைக்கு அத்தியாவசிய தேவைக்காகவும், அவசரம் கருதியும் பயணம் செய்யும் இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், கண்டியில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் ஹம்பன்தோட்டா, யாழ்ப்பாணம் தூதரக அதிகாரிகளை எந்த உதவிக்கும் தொடர்புகொள்ளலாம்.
இந்திய தூதரகங்களின் தொலைபேசி எண்களை இந்திய வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SriLankablasts #Easterblasts #colomboblasts #SriLankablaststoll
சர்வதேச முகவாண்மை நிறுவனமான ‘பி.டபிள்யூ.சி.’ உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது. உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன்படி நடப்பு 2019-ம் ஆண்டில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 7-வது இடத்தில் இருந்த இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதன்மூலம் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் 6-வது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்தும், பிரான்சும் முறையே 5 மற்றும் 6-வது இடத்தில் இருந்தன. தற்போது ‘பிரக்ஸிட்’ பிரச்சனையில் இங்கிலாந்து உள்ளது. இதனால் பவுண்டு மற்றும் யூரோ நாணயங்களுக்கு இடையேயான மதிப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
2 நாடுகளுமே சமமான மக்கள் தொகையை கொண்டது. இருந்தாலும் நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக இங்கிலாந்தை 7-வது இடத்துக்கு தள்ளிவிட்டு 6-வது இடத்திலேயே பிரான்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.
பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-வது இடத்திலும், ஜப்பான், ஜெர்மனி தலா 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளன. #india #Richest
தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இது தொடர்பாக அமலாக்க துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அதிகாரிகள் மூலமாக இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் நடந்து வந்தது. இங்கிலாந்து கோர்ட்டு நேற்று முன்தினம் அளித்த பரபரப்பு தீர்ப்பில், விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை மத்திய மந்திரி அருண் ஜெட்லி, பா.ஜ.க. தேசிய செயலாளர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பெருமை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும்” என பாராட்டு தெரிவித்தார்.
அதே சமயம் தீர்ப்பு குறித்து விஜய் மல்லையா கூறுகையில், “இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மேல்முறையீடு செய்ய எங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் தரப்பட்டு உள்ளது” என்றார்.
இதனிடையே இந்த தீர்ப்பு குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக இங்கிலாந்து கோர்ட்டு அளித்த தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இந்த வழக்கில் உதவிய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு எங்களுடைய பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.
மிக விரைவில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் மல்லையாவுக்கு எதிரான கடன் மோசடி வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கோர்ட்டில் விஜய் மல்லையாவின் வக்கீல் நேற்று ஆஜராகி, தேடப்படும் குற்றவாளி என அறிவிக்க கோரும் அமலாக்க துறையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் வாதிடுகையில், “அமலாக்க துறை கூறுவது போல விஜய் மல்லையா இந்தியாவை விட்டு ரகசியமாக தப்பவில்லை. அவர் வெளிநாடு வாழ் இந்தியர். லண்டனில் அவர் தங்கியிருக்கும் இடம் அனைவருக்கும் தெரியும்” என்றார். #VijayMallya #VijayMallyaextradition
உலக அளவில் செல்பி மோகத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. செல்பியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பலரும் விளக்கி வந்தாலும் பலரும் அதன் ஆபத்தை உணரவில்லை. செல்பியின் மோகத்தினால், இந்திய தம்பதி தங்கள் உயிரையே பறிகொடுத்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் பகுதியில் எல்லைப்பகுதியில் நேற்று இந்திய ராணுவத்தினர் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய நிலைகளை நோக்கி திடீரென துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவித காயமோ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 11-ந் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய வீரர் ஒருவர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. #India #Pakistan #JammuKashmir
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் கொள்ளப்படும்.
இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி காலேவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 35.1 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சமாரி அட்டப்பட்டு 33 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் மன்சி ஜோஷி 3 விக்கெட்டுகளும், கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இந்தியா 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 73 ரன்கள் (76 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது. #IndiavsSriLanka
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ‘பிக் டிக்கெட்’ லாட்டரி குலுக்கல் நடந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ என்பவருக்கு முதல் பரிசுத்தொகையான 12 மில்லியன் திர்காம் கிடைத்தது.
இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்மாத்யூ வாங்கிய 175342 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு இந்த பரிசுதொகை கிடைத்துள்ளது.
இந்த லாட்டரியில் மேலும் 6 இந்தியர்களுக்கும் பரிசுதொகை விழுந்துள்ளது. அண்மை காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பல இந்தியர்களுக்கு லாட்டரியில் பரிசுகள் கிடைத்து உள்ளன.
கேரளாவை சேர்ந்த தாடுஜா மாத்யூவுக்கு கடந்த ஜுலையில் முதல் பரிசு தொகையான ரூ.13 கோடியே 65 லட்சம் கிடைத்தது. அதற்கு முன்பு ஏப்ரலில் துபாயில் வசிக்கும் இந்திய டிரைவருக்கு ரூ.23 கோடி முதல் பரிசு விழுந்தது.
கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் கேரளாவை சேர்ந்த மற்றொருவருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்தது. #UAElottery
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் யூசுப் கான் ரஷித் கான் என்பவர் தான் தங்கியிருந்த இடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி போலீசார் அவரது உடலை மீட்டு, அவரது உறவினர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இறந்த யூசுப் கானின் உடலை பெற யாரும் முன்வராததால், அங்கு உள்ள இந்தியர்களின் சங்கத்தின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். யூசுப் கானின் விசாவில் இருந்த இந்திய முகவரி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் அவரது உறவினர்கள் இல்லை. இதனால், 4 மாதங்களாக பிண அறையில் இறந்தவரின் உடல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், அவரது பாஸ்போர்ட்டை வைத்து ஆராய்ந்ததில், யூசுப் கானின் உறவினர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவரது மரணம் குறித்து தகவல் அளிக்கப்பட்டனர். இந்த தகவலை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான பணம் எங்களிடம் இல்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முழு செலவையும் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரூப் சித்து ஏற்றுக்கொண்ட நிலையில், இறந்தவரின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. #UAE