search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "UAE"

  • நான் வெளிப்படையாக கூறினாலும் நம்ப மறுக்கின்றனர் என்றார் ஷாருக்
  • எனக்கு மேற்கத்திய திரைத்துறையில் நண்பர்கள் உள்ளனர் என்றார் ஷாருக்

  1992ல் "தீவானா" எனும் தனது முதல் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் கால்பதித்தவர் ஷாருக் கான் (58).

  30 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரையுலகில் பல வெற்றிப்படங்களை வழங்கி, சக முன்னணி கதாநாயகர்களான சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோரில், "கிங் கான்" (King Khan) என அழைக்கப்படும் ஷாருக், சில தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த 2023ல், ஜவான், பதான், மற்றும் டன்கி என 3 தொடர் வெற்றிப்படங்களை அளித்தார்.

  இந்நிலையில், பிப்ரவரி 14 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) துபாய் நகரில், உலக அரசுகளின் உச்சி மாநாடு (World Governments Summit 2024) நடந்தது.

  இதில் கலந்து கொண்டு உரையாடிய ஷாருக் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

  அப்போது அவரிடம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்காதது ஏன் என கேட்கப்பட்டது. 


  அதற்கு ஷாருக் பதிலளித்ததாவது:

  நான் வெளிப்படையாக பலமுறை இதற்கு பதிலளித்து விட்டேன். ஆனால், என்னை எவரும் நம்ப மறுக்கின்றனர். இருந்தும் மீண்டும் சொல்கிறேன்.

  எனக்கு இந்தியாவிலிருந்து வெளியே ஹாலிவுட் உட்பட எந்த அன்னிய மொழி படங்களிலும் நடிக்க அழைப்பு வரவில்லை.

  மேற்கத்திய திரைப்பட துறையை சார்ந்த பலருடன் நான் பழகியுள்ளேன். எனக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைத்துறையை சார்ந்த பல திறமையானவர்களுடன் நல்ல நட்பும் உண்டு.

  ஆனால், என்னை எவரும் ஒரு நல்ல வேடத்திற்காக இதுவரை அங்கிருந்து அழைத்ததில்லை.

  என்னை ஏற்று கொள்ள கூடிய பார்வையாளர்களுக்கு பிடித்தமான படங்கள் அளிக்க நான் இன்னும் கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என நினைக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் புறப்பட்டுச் சென்றார்.
  • யுபிஐ ரூபே கார்டு திட்டத்தை இரு நாட்டு தலைவர்களும் இணைந்து அறிமுகப்படுத்தினர்.

  அபுதாபி:

  பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  இந்நிலையில், அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மேலும் யுபிஐ ரூபே கார்டு திட்டத்தை இருவரும் இணைந்து அறிமுகப்படுத்தினர்.

  பிரதமர் மோடி துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் மற்றும் அதன் வளாகத்தை நாளை திறந்துவைக்கிறார்.

  2015-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேற்கொள்ளும் 7-வது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • 700 நடன கலைஞர்கள் தயாராகி வருகின்றனர்.

  பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அபுதாபியில் இந்திய சமூகத்தினர் கலந்து கொள்ளும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  "அஹ்லன் மோடி" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இதில் கலந்து கொள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினர் விருப்பம் தெரிவித்து, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து இருந்தனர்.

   


  எனினும், நேற்றிரவு ஏற்பட்ட வானிலை இடர்பாடுகளால் அஹ்லன் மோடி நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 500 பேர் மட்டுமே கலந்து கொள்வர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக 700 நடன கலைஞர்கள் தயாராகி வருகின்றனர்.

  அபுதாபியில் வசிப்பவரும், அஹ்லன் மோடி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வேத் பிரகாஷ் குப்தா இது குறித்து பேசும் போது, "இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள உறவில் இது மிகப்பெரிய மைல்கல் ஆகும். இதற்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 1500 பேர் குழுவாக இணைந்து பணியாற்றி வருகிறோம்."

  "நேற்று கனமழை பெய்தது, ஆனால் இன்று வானிலை தெளிவாகவே உள்ளது. எல்லோரும் பிரதமர் மோடிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தியர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம்..," என்று தெரிவித்தார்.


  • மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.
  • இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

  புதுடெல்லி:

  பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்கு செல்லும் அவர் இன்று மாலை 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார்.

  அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மாலை நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

  கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்க்கிறார். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.

  அவர் நாளை மதியம் துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அமீரக அதிபர், ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

  தொடர்ந்து மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

  கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

  2015-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேற்கொள்ளும் ஏழாவது பயணம் இதுவாகும். கடந்த 8 மாதங்களில் இது மூன்றாவது முறையாகும்.

  • மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.
  • அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது

  புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அமீரகம் செல்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்கு செல்லும் அவர் இன்று மாலை 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மாலை நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

  கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்க்கிறார். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.

  அவர் நாளை (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அமீரக அதிபர், ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது.

  தொடர்ந்து அன்று மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் மற்றும் அதன் வளாகத்தை மோடி திறந்து வைக்கிறார். கோவில் மட்டும் தரைத்தளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

  தொடர்ந்து பிரதமர் மோடி அன்று இரவே அமீரக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து அபுதாபியில் இருந்து இந்தியா புறப்படுகிறார்.

  • லாகூரில் பிஎம்2.5 எனும் மாசு காரணிகள் அபாய எல்லையை விட 66 மடங்கு அதிகம் உள்ளது
  • அமீரக நிபுணர்கள் வானில் 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலை முன்னெடுத்தனர்

  உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பாகிஸ்தான் 3-வது நாடாகவும் அந்நாட்டின் பஞ்சாப் பிராந்திய லாகூர் நகரம் முதலிடத்திலும் உள்ளது.

  நுரையீரல் வழியாக ரத்தத்தில் கலந்து புற்று நோயை உண்டாக்க கூடிய மாசுப்பொருட்களில் பிஎம்2.5 (PM2.5) எனும் மாசு காரணிகள் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கும் அளவை காட்டிலும் 66 மடங்கு அதிகமாக லாகூர் நகர காற்று மண்டலத்தில் இருப்பதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்து வந்தன.

  தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் அமில வாயுக்கள், செங்கல் சூளைகளிலிருந்து வரும் புகை, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, வயல்வெளிகளில் வைக்கோல் எரிப்பால் கிளம்பும் புகை என பல்வேறு காரணங்களால் பஞ்சாப் பிராந்தியம் முழுவதும் காற்று மாசு அதிகரித்தல் தொடர்கதையாகி வருகிறது.

  காற்று மாசுபடுதல் அதிகரிப்பதால் அந்நகரில் கடந்த சில வாரங்களாக பல வணிக நிறுவனங்கள் வேலை நேரத்தை குறைத்து விட்டன; பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.

  பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் பெரும் பொருட்செலவில் இதனை தடுக்க அந்நாட்டு அரசாங்கத்தால் இயலவில்லை.

  இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உதவிட அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) முன் வந்தது. வறண்ட பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை மழைப்பொழிவு உண்டாக்குதல் வழக்கமான ஒன்று. சில்வர் ஐயோடைட் (silver iodide) எனும் மஞ்சள் உப்பு, அசிடோன் (acetone) எனும் ரசாயன கலவையுடன் கலக்கப்பட்டு வானில் மேகங்களில் பல முறை எரிக்கப்படும். இதன் மூலம் மழை மேகங்கள் உருவாகி மழைப்பொழிவு தூண்டப்படும்.

  குறைந்தளவு மழைப்பொழிவு கூட காற்றில் உள்ள மாசு காரணிகளை சில நாட்களுக்கு கட்டுப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

  அதிகளவு அசுத்தமடைந்த காற்றினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் க்ளவுட் சீடிங் (cloud seeding) அல்லது ப்ளூ ஸ்கையிங் (blueskying) எனப்படும் செயற்கை மழைகளை வரவழைக்கும் ரசாயனங்களை கொண்ட உபகரணங்களுடன் விமானங்கள் அந்நகரை வலம் வந்தன.

  2 விமானங்களில் செயற்கை மழையை பெய்விக்கும் விஞ்ஞானத்தில் தேர்ந்த ஐக்கிய அரபு நிபுணர்கள் லாகூரில் முயற்சிகளை முன்னெடுத்தனர். 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலில் ஈடுபட்டார்கள்.

  இதன் பயனாக லாகூர் நகரின் 10 இடங்களில் மழைத்தூறல் விழுந்ததாகவும், 15 கிலோமீட்டர் பரப்பளவில் அதன் தாக்கம் கண்காணிக்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில காபந்து முதல்வர் மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.

  காற்று மாசுபாட்டினால் ஏற்படும் எதிர்மறை உடல்நல சீர்கேடு ஓவ்வொரு மனிதனின் வாழ்நாளில் 5 வருடங்கள் குறைத்து விடும் சாத்தியக்கூறு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

  கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகரித்து வருவதும், அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றமே டெல்லி மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

  • ஐக்கிய அரபு அமரீகத்தை சாராத முதல் வெற்றியாளர் நடராஜன்.
  • கல்வி கற்கும் போது எனக்கு பலர் உதவி செய்திருக்கின்றனர்.

  ஆம்பூரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் மகேஷ் குமார் நடராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜாக்பாட் வென்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் தொகை வழங்கப்பட இருக்கிறது.

  49 வயதான நடராஜன் எமிரேட்ஸ் டிராவின் ஃபாஸ்ட் 5 பம்ப்பர் பரிசை வென்று இருக்கிறார். இதில் அவருக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் DH (மாதம் ரூ. 5.6 லட்சம்) தொகை 25 ஆண்டுகளுக்கு பரிசு தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஐக்கிய அரபு அமரீகத்தை சாராத முதல் வெற்றியாளர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

  "வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்தித்து இருக்கிறேன். நான் கல்வி கற்கும் போது எனக்கு பலர் உதவி செய்திருக்கின்றனர். தற்போது சமூகத்திற்கு எனது பங்களிப்பை வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. சமூகத்தில் தேவையானோருக்கு என் சார்பில் நிச்சயம் உதவிகளை செய்வேன்," என்று பம்ப்பர் பரிசை வென்ற நடராஜன் தெரிவித்து உள்ளார்.

  "இது மிகவும் நம்ப முடியாத தருணம். இது என் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத நாளாக மாறி இருக்கிறது. பரிசு தொகையை எனது மகள்களின் கல்வியில் முதலீடு செய்யவும், குடும்பத்தாரின் எதிர்காலத்தை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  • கஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.
  • ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார்.

  பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஒரு நாள் பயணமாக இன்று அபுதாபி சென்றுள்ளார்.

  அங்கு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.

  இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

  இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர், பிரதமர் மோடிக்கு முழு சைவ உணவு விருந்து அளித்துள்ளார்.

  கஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் முதலில், கோதுமை மற்றும் பேரீச்சம்பழ சாலட் உடன் கரிம காய்கறிகளை தொடர்ந்து, மசாலா சாஸில் வறுக்கப்பட்ட காய்கறிகளை ஸ்டார்டர்களாக பறிமாறப்பட்டது.

  மேலும் உணவு பட்டியலில் கறுப்புப் பருப்பும், கோதுமை, காலிஃபிளவர் மற்றும் கேரட் தந்தூரி ஆகிய உணவு வகைகளை முக்கிய உணவாக வழங்கப்பட்டன.

  இனிப்புக்காக உள்ளூர் பருவகால பழங்கள் அளிக்கப்பட்டது.

  பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் அனைத்து உணவுகளும் சைவ உணவுகள் மற்றும் தாவர எண்ணெய்களால் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பால் அல்லது முட்டை பொருட்கள் இல்லை என்றும் விருந்துக்கான மெனு கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் பார்வையிட்டனர்.
  • போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடி கண்டு களித்தனர்.

  நேபாளம் - அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் ரசித்தனர்.


  மேலும் போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர்.


  இந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் நேரில் பார்வையிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.  • ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என ஜெய் ஷா கூறியிருந்தார்.
  • ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது.

  பஹ்ரைன்:

  ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் அல்லது அக்டோபரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. 

  இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய் ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

  இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

  இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகியவற்றில் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது.

  ஆசிய கோப்பை போட்டி குறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது. கடந்த ஆசிய கோப்பை போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.