search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Cup 2023"

    • ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அடுத்த 2 ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டது.
    • 2023 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஒரே பிரிவில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அடுத்த 2 ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளது. 2023 ஆசிய கோப்பைக்கான தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் உள்ளன என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.

    பி.சி.சி.ஐ. செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா 2023 மற்றும் 2024-ம் ஆண்டுக்கான கவுன்சிலின் கிரிக்கெட் காலண்டர் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான பாதை கட்டமைப்பை அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஏ.சி.சியின் முக்கிய போட்டியான ஆடவர் ஆசிய கோப்பை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

    இதில் 6 அணிகள் இடம்பெறும். 3 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவாலிபையர் 1 (ஆண்களுக்கான பிரீமியர் கோப்பை வென்றவர்கள்) ஒரு குழுவில் இடம்பெறுவர்.

    இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றுமொரு குழுவில் உள்ளன. இந்தப் போட்டியில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன என தெரிவித்தார்.

    • இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டத்தின்போது இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    பஹ்ரைனில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் இடம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பஹ்ரைனில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறினால், அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று, பாகிஸ்தான் கிரிக்கட் வாரிய தலைவர் நஜம் சேதி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டங்கள் நடக்கும்போது, இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என ஜெய் ஷா கூறியிருந்தார்.
    • ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது.

    பஹ்ரைன்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் அல்லது அக்டோபரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. 

    இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய் ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகியவற்றில் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது.

    ஆசிய கோப்பை போட்டி குறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது. கடந்த ஆசிய கோப்பை போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நேபாள அணி குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
    • இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் இத்தொடரை நடத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

    காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் நேபாள அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இதன்மூலம் நேபாள கிரிக்கெட் அணி, செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. மேலும் அந்த அணி குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

    ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது முதலே அது இந்தியாவில் கடும் விவாதத்துக்கு உள்ளானது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் இத்தொடரை நடத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

    ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா கடந்த ஆண்டே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி, ஆசிய தொடரில் பாகிஸ்தான் அணி தனது போட்டிகளை உள்நாட்டிலும், இந்திய அணி அதன் போட்டிகளை பொதுவான ஒரு இடத்திலும் விளையாடும் என்று முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார்.

    ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை, செப்டம்பர் 2 முதல் 17 வரை நடைபெறும். எனினும், போட்டி நடைபெறும் இடம் இன்னும் தேர்வு செய்யப்படாததால், போட்டிகளின் சரியான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

    • இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
    • இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    மோங் கோக்:

    23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஹாங்காங்கில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் மழை காரணமாக 8 ஆட்டங்கள் கைவிடப்பட்டன. இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஒரே ஒரு லீக் ஆட்டத்தில் (ஹாங்காங்குக்கு எதிராக) மட்டுமே ஆடியது.

    மோங் கோக் நகரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ் விரிந்தா 36 ரன்னும், கனிகா அகுஜா ஆட்டம் இழக்காமல் 30 ரன்னும் திரட்டினர்.


    பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, இந்திய வீராங்கனைகளின் மாயாஜால சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டும், மன்னத் காஷ்யப் 3 விக்கெட்டும், கனிகா அகுஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஐபிஎல் போட்டியின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார்.
    • பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றியவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

    பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்கேன் பரிசோதனை முடிவில் தசைநார் கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு NCA-ல் தனது மறுவாழ்வில் சிறப்பாக செயல்பட்டார்.



    இந்நிலையில் அவர் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பும்ரா உடற்தகுதியுடன் திரும்பிய நிலையில் கேஎல் ராகுலும் திரும்பினால் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கும். ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை 2023 போட்டிக்கான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கேப்டன் பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
    • ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

    இந்நிலையில் வங்காளதேச அணி கேப்டன் யார் என்பது குறித்து பிசிபி இன்னும் வரை அறிவிக்கவில்லை. அந்த பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

    இது குறித்து பிசிபி தலைவர் நஸ்முல் கூறியதாவது:-

    இன்னும் சில நாட்களில் அணியை அறிவிப்போம். கேப்டனையும் அறிவிப்போம் என்றார். மேலும் ஷகிப்பை ஒருநாள் கேப்டனாக தேர்ந்தெடுப்பது எளிதான முடிவு என்றும் ஷகிப்பின் இறுதி முடிவுக்காக பிசிபி காத்திருக்கும் என்றும் கூறினார்.

    • பாபர் அசாம் தலைமையிலான அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார்.
    • பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இலங்கைக்கு சென்று அங்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 30-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கிறது. இவ்விரு தொடருக்கான பாகிஸ்தான் அணியை புதிய தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் தேர்வு செய்து நேற்று அறிவித்தார்.

    பாபர் அசாம் தலைமையிலான அந்த அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார். பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணி வருமாறு:- பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், பஹர் ஜமான், அஹா சல்மான், இப்திகர் அகமது, முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், தயாப் தாஹிர், சாத் ஷகீல், ஷதப் கான் (துணை கேப்டன்), முகமது நவாஸ், உசாமா மிர், பகீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
    • வங்காள தேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது நயிம் தீ மிதித்து வேண்டிக் கொண்டுள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான ஆசிய அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் உலக கோப்பை போட்டிகளுக்கு அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சி பெற்று வரும் நிலையில் வங்காள தேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது நயிம் தனது பயிற்சியை வேறு நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

    அவர் வங்காளதேச அணி வெற்றி பெற தீ மிதித்து வேண்டி கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



    • ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாம்.
    • கேப்டன் ரோகித் ஷர்மா, அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்தனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆசிய கோப்பை 2023 தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

    ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவதற்காக இந்திய அணி வீரர்களுக்கு ஆறு நாட்கள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நேற்று தொடங்கியது.

     

    கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். இன்றைய பயிற்சியில் கே.எல். ராகுல் கலந்து கொண்டார். முதலில் தான் கடந்த சில வாரங்களாக செய்துவரும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் கே.எல். ராகுல்.

    அதன் பிறகு, நெட்ஸ்-இல் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இவருக்கு ஷர்துல் தாக்கூர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பந்து வீசினர். துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல், உடலில் எந்த இடையூறும் ஏற்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை. கே.எல். ராகுல் பயிற்சியில் ஈடுபடுவதை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்து வந்தனர்.

    வேகப்பந்து வீச்சை தொடர்ந்து அக்சர் பட்டேல் மற்றும் மயான்க் மார்கன்டே ஜோடி கே.எல். ராகுலுக்கு பந்துவீசியது. இவர்களின் பந்துவீச்சில் கே.எல். ராகுல் பல்வேறு ஷாட்களை அடித்தார். இதில் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட்களும் அடங்கும். 

    • பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது.
    • பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார். பந்த் அணி வீரர்களுடன் மீண்டும் இணைவதையும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் தொடர்புகொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிய தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் நாளை மோதுகின்றன.
    • இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது.

    வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த உலகக்கோப்பை தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஆசிய அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளும்.

    இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான முதல் 2 போட்டியில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    கேஎல் ராகுல் மிகவும் நன்றாக முன்னேறி வருகிறார். ஆனால் ஆசிய கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிராக அவர் விளையாடமாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×