search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan team"

    • 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகி சர்மா தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    அதேசமயம் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீதும் அந்த அணி கேப்டன் பாபர் அசாம் மீதும் கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்கள் அணியின் சிறந்த வீரர் யார்? என கேட்டால், பாபர் அசாம் என்று தான் கூறுவோம். ஆனால் குறிப்பிட்ட வடிவத்தில் நான் முதல் 4-5 அணிகளைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில் அந்த அணிகளின் விளையாடும் லெவனில் பாபர் அசாம் இடம் இருக்குமா? அதிலும் டி20 வடிவத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் பாபர் அசாம் இருப்பாரா? என்று கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது மட்டும் தான்.

    என்னைக்கேட்டால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது.

    இவ்வாறு மாலிக் கூறினார்.

    • நாட்டுக்காக விளையாட வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என்றார் வாகன்.
    • பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என்றார் கம்ரான் அக்மல்.

    கராச்சி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து ஜாஸ் பட்லர், மொயீன் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜாக்ஸ் போன்ற இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பே வெளியேறினர்.

    இதனால், முழுமையாக விளையாடுங்கள். இல்லையெனில் ஐ.பி.எல். தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என இர்பான் பதான் விமர்சித்தார். அதேபோல, பாதியில் வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.

    இதற்கிடையே, நாட்டுக்காக விளையாடுவதற்காக வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்திருந்தார். மேலும், சுமாரான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதைவிட தரமான ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதே சிறந்தது என தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், சமீப காலங்களில் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என கம்ரான் அக்மல் ஒப்புக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கம்ரான் அக்மல் கூறியதாவது:

    அது மிகவும் வலியைக் கொடுக்கும் கருத்தாகும். ஆனால் அவருடைய கருத்து சரியானது என நினைக்கிறேன்.

    அனைவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் லெவல் தெரியும். இப்போதெல்லாம் நாம் அயர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராக தோற்கிறோம்.

    எனவேதான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் கடினமானது அல்ல என மைக்கேல் வாகன் தெரிவித்தார். அதனால் தவறு நம்முடையது.

    ஒருவேளை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.

    ஐ.பி.எல். தொடரைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே 40,000 முதல் 50,000 ரசிகர்களுக்கு முன் சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பங்கேற்கின்றனர். எனவே அது கடினமான மற்றும் தரமான கிரிக்கெட்டாகும் என தெரிவித்தார்.

    • ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளது.
    • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்நிலையில் இந்திய அணி ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் பாகிஸ்தானும் டி20 உலகக் கோப்பைக்கான தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

    • நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இலங்கையுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

    நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் மீதமுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கஷ்டமாகி உள்ளது.

    பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்தை 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து அணி கொடுக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும்.

    2.3 ஓவர்களில் இலக்கை எட்டுவது நடக்காத விஷயம். வேண்டும் என்றால் முதலில் பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை 112 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    +0.036 ரன்ரேட்டுடன் உள்ள பாகிஸ்தானுக்கே இந்த நிலைமை என்றால் நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளது. ஆப்கானிஸ்தான் -0.338 ரன்ரேட்டில் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகும்.

    • ஆசிய கோப்பை போட்டியின்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்தனர்
    • இரண்டு பேர் காயம் குணமடைந்து பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளனர்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் பெரும்பாலான நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.

    உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.

    சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா குணமடையாததால் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் இடம் பெற்றுள்ளார்.

    பாபா ஆசம் (கேப்டன்), பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மா மிர், ஷகீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம், ஹசன் அலி.

    • பாபர் அசாம் தலைமையிலான அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார்.
    • பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இலங்கைக்கு சென்று அங்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 30-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கிறது. இவ்விரு தொடருக்கான பாகிஸ்தான் அணியை புதிய தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் தேர்வு செய்து நேற்று அறிவித்தார்.

    பாபர் அசாம் தலைமையிலான அந்த அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார். பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணி வருமாறு:- பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், பஹர் ஜமான், அஹா சல்மான், இப்திகர் அகமது, முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், தயாப் தாஹிர், சாத் ஷகீல், ஷதப் கான் (துணை கேப்டன்), முகமது நவாஸ், உசாமா மிர், பகீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தியது.
    நாட்டிங்காம்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் ஹோல்டரின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. 

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் கூட சொற்ப ரன்களில் வெளியேறினர். 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பகார் ஜமான், பாபர் ஆசம் இருவரும் தலா 22 ரன்கள் எடுத்தனர். வகாப் ரியாஸ் 18 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கெயில் வலுவான அடித்தளம் அமைத்தார். அவர் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹோப் 11 ரன்களிலும், பிராவோர ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

    பின்னர் இணைந்த பூரன்-ஹெட்மயர் ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்  சென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி, 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பூரன் 34 ரன்களுடனும், ஹெட்மயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஓஷேன் தாமஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுடன் 2 போட்டி டெஸ்ட் தொடரில் மோதுகிறது. இப்போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதற்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பையில் முகமது அமீர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. மேலும் கடந்த 10 ஒருநாள் போட்டியில் முகமது அமீர் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.

    அவர் பார்மில் இல்லாததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் அணியில் சேசர்க்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் மிர் அம்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
    ×