என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் ODI அணியின் புதிய கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி நியமனம்
    X

    பாகிஸ்தான் ODI அணியின் புதிய கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி நியமனம்

    • பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஸ்வான் நீக்கப்பட்டு உள்ளார்.
    • ஒரு நாள் தொடர் நவம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது.

    பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு அப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக நியமித்து உள்ளது.

    கேப்டன் பதவியில் இருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஸ்வான் நீக்கப்பட்டு உள்ளார். அப்ரிடியும் இந்த டெஸ்டில் ஆடி வருகிறார்.

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் ஆட்டத்திலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.

    ஒரு நாள் தொடர் நவம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 25 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி கேப்டனாக செயல்படுவார்.

    இதற்கு முன்பு கடந்த 2024-ல் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பாகிஸ்தானை அவர் வழிநடத்தி உள்ளார். மொத்தம் 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை அப்ரிடி கைப்பற்றி உள்ளார்.

    Next Story
    ×