என் மலர்
நீங்கள் தேடியது "Cricket"
- டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ரோகித் உடல் எடை அதிகரித்தார்.
- ரோகித்தின் உடல் எடை இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளது
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. அந்த தொடருக்கு பின்பு டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார்.
அதன்பின்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ரோகித் உடல் எடை அதிகரித்தார். இதனால் அவரது உடல் எடை விமர்சனத்திற்கு உள்ளது
இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக ரோகித் சுமார் 15 கிலோ வரை எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் 3 போட்டிகளில் 202 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னரும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ரோகித் கூடுதலாக 5 கிலோ எடை வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
அடுத்ததாக இந்தியாவில் நடைபெறவிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தனர்.
- ஆசிய கோப்பையில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா பாகிஸ்தான் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதனால் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி பேசுபொருளானது.
இதனையடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி விரும்பாததால் இப்போது வரை ஆசிய கோப்பை இந்திய அணியிடம் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.
இந்நிலையில், ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஹைபை கொடுத்துக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மலேசியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 21 வயதிற்குட்பட்ட சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி 3-3 என்ற கணக்கில் டிரா ஆனது.
- இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
- கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் பீகாரில் கட்டப்பட்டுள்ளது.
ராஜ்கிரில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,121 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புனேவிலிருந்து உயர்தர கருப்பு மண்ணைப் பயன்படுத்தி இந்த மைதானத்தின் ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 40,000 இருக்கைகள் உள்ளது.
இந்த மைதான கட்டுமானத்தின் ஆரம்பச் செலவு ரூ.740 கோடியாக மதிப்பிடப்பட்டது, ஆனால் நவீன வசதிகள் மற்றும் கூடுதல் கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டதால் ரூ.1,121 கோடி செலவானது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
- சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஓமன் அணியுடன் வரும் 19ம் தேதி இந்தியா மோதுகிறது.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஓமன் அணி 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் ஓமன் அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம், குரூப் A சுற்றில் உள்ள இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று +4.793 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஓமன் அணியுடன் வரும் 19ம் தேதி இந்தியா மோதுகிறது.
- டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வு பெற்றுவிட்டார்.
- தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் கோலி விளையாடி வருகிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், கோலியின் பேட்டிங்கை தாலிபன்கள் கூட ரசித்து பார்ப்பதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் மற்றும் தாலிபான் இயக்கத்தின் தலைவரான அனஸ் ஹக்கானி தெரிவித்தார்.
கோலி குறித்து பேசிய ஹக்கானி, "விராட் கோலி தனது 50 வயதாகும் வரை விளையாட வேண்டும். அவருடைய பேட்டிங்கை தாலிபான்கள் கூட ரசித்து பார்க்கின்றனர். டெஸ்டில் இருந்து சீக்கிரம் ஓய்வு பெற்றுவிட்டார்" என்று தெரிவித்தார்.
- குவாலியர் மண்டல கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக மகாநாரியமன் இருந்தார்.
- மிக இளைய வயதில் (29) ம.பி. கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மகாநாரியமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
குவாலியர் மண்டல கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அவர் மிக இளைய வயதில் (29) ம.பி. கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானவர் என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ தலைவராக இருந்து இப்போது ஐசிசி தலைவராக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
- எதிர்வரும் 2025-26 ஆஷஸ் தொடரில் விளையாட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன். இவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் (டெஸ்ட் மற்றும் முதல்-தர கிரிக்கெட்) இருந்து காலவரையற்ற இடைவெளி எடுப்பதாக அறிவித்துள்ளார்.
அவர், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் 2025-26 ஆஷஸ் தொடரில் (ஆஸ்திரேலியாவில்) விளையாட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எல்லா வடிவங்களிலும் முழு அர்ப்பணிப்பு சாத்தியமில்லை. எனவே ஒயிட்-பால் கிரிக்கெட்டில் எனது திறனை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்கள் (முதுகு, கால்) காரணமாக உடல் முழுமையை பராமரிக்க இந்த இடைவெளி தேவைப்பட்டது.
என ஜேமி ஓவர்டன் கூறினார்.
- கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.
- நேற்று கோழிக்கோடு - திருவனந்தபுரம் அணிகள் மோதின.
ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.
அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கோழிக்கோடு - திருவனந்தபுரம் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் ஆடிய கோழிக்கோடு அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய சல்மான் நசீர் 26 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.
குறிப்பாக சல்மான் நசீர் ஒரே ஓவரில் 40 ரன்களை விளாசி அசத்தினார். அபிஜீத் பிரவீன் வீசிய கடைசி ஓவரில் சல்மான் நசீர் 6 சிக்சர் விளாசினார். மேலும் Wide பால், நோ பாலுடன் சேர்த்து கடைசி ஓவரில் மட்டும் 40 ரன்கள் கிடைத்தது
- தென் ஆப்பிரிக்க டி20 லீக்கின் 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.
- பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ. பி.எல்.லை போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் கிரஹாம் போர்டு நீக்கப்பட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜோனாதன் டிரோட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அணியின் செயல்திறனில் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் இல்லாததால் தற்போது அவர், நீக்கப்பட்டு தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஷான் பொல்லாக் துணை பயிற்சியாளராக உள்ளார்.
- சஞ்சு சாம்சனை கொச்சி ப்ளூ டைகர்ஸ் 26.8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
- கேரள கிரிக்கெட் லீக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.
அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கொல்லம் - கொச்சி அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்லம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 94 ரன்களும் சச்சின் பேபி 91 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 237 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொச்சி அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அவுட்டனார். சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 294 ரன்கள் அடித்தது.
- வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது
முன்னதாக இந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0-1 என பின் தங்கியிருந்த நிலையில், கடைசி இரு போட்டிகளில் வென்று 2-1 என தொடரை வென்றுள்ளது.
- ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது.
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.
நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில்,இந்திய கிரிகெக்ட் வீரர் முகமது சிராஜுக்கு பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே ராக்கி கயிறு கட்டி விட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது. ஒருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு பரவியது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாய் போஸ்லே முகமது சிராஜுக்கு ராக்கி கயிறு கட்டி விட்டுள்ளார்.






