என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய வீரர்"
- மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்.
- ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேமியன் மார்ட்டின் தூண்டப்பட்ட கோமா நிலையிலிருந்து மீண்டு எழுந்தார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று கோமாவில் இருந்து டேமியன் எழுந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த இந்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த சவாலான காலகட்டம் முழுவதும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட கோல்ட் கோஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவக் குழுவினருக்கு எங்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இது ஒரு கடினமான நேரமாக இருந்துள்ளது, எனவே குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என டேமியன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் "அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வேறுபிரிவிற்கு மாற்றப்படுகிறார். இது அவர் எவ்வளவு சிறப்பாக மீண்டு வருகிறார் என்பதையும், நிலைமை விரைவாக மாறியுள்ளது என்பதையும் காட்டுகிறது" என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
- மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்துள்ளனர்.
- உடைந்த விரலுடன் பேட்டிங் செய்த போதிலும், அவர் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது கோமா நிலையில் உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
54 வயதான டேமியன் மார்ட்டின், கடந்த டிசம்பர் 26 அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிப்பு தீவிரமாக இருந்ததால், மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்துள்ளனர். மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மெனிஞ்சைடிஸ் (Meningitis) எனப்படும் மூளைக்காய்ச்சலால் டேமியன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேமியன் உடல்நிலை மோசமாக இருந்தாலும், சிறந்த முறையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அவரது நெருங்கிய நண்பரும், முன்னாள் வீரருமான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேரன் லீமன், வி.வி.எஸ். லக்ஷ்மன் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும், தற்போதையை வீரர்களும் டேமியன் குணமடைய பிரார்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
1992 மற்றும் 2006 க்கு இடைப்பட்ட காலத்தில் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியபோது, உடைந்த விரலுடன் பேட்டிங் செய்த போதிலும், அவர் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்,






