என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Don Bradman"

    • மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் அடிலெய்டில் நடந்து வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் தனி ஆளாகப் போராடி 83 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அவர் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் கடைசியாக ஆடிய 4 டெஸ்ட்களிலும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 175 ரன், 119 ரன், இந்தியாவுக்கு எதிராக 140 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 142 ரன்) சதம் அடித்துள்ளார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ச்சியாக 4 சதம் கண்ட 5-வது வீரர் என்ற பெருமையை டிராவிஸ் ஹெட் பெற்றார்.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் பிராட்மேன் (மெல்போர்ன் மைதானம்), மைக்கேல் கிளார்க் (அடிலெய்டு), ஸ்டீவன்சுமித் (மெல்போர்ன்), இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் (சிட்னி) ஆகியோர் ஆஸ்திரேலிய மைதானத்தில் தொடர்ச்சியாக தலா 4 சதம் அடித்துள்ளனர். அந்த சாதனை பட்டியலில் டிராவிஸ் ஹெட் இணைந்தார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்தார்.
    • இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 318 ரன்கள் குவித்தது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் கில் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    இந்த போட்டியில் 150 ரன்களுக்கு மேல் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

    அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதிற்குள் அதிகமுறை 150+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரராக ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

    8 முறை 150+ ரன்கள் அடித்து முதலிடத்தில் பிராட்மேன் நீடிக்கும் நிலையில், 2-வது வீரராக 5 முறை அடித்து ஜெய்ஸ்வால் நீடிக்கிறார்.

    இந்த பட்டியலில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் 4 சதங்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    • இந்த சாதனை பட்டியலில் ஜேக் ஹோப்ஸ், சச்சின் தலா 9 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளனர்.
    • இங்கிலாந்தில் 8 சதங்கள் அடித்த சர் விவ் ரிச்சர்ட்ஸ் 4-வது இடத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் 3 வகை கிரிக்கெட்டிலும் அவர் 10 சதங்களை அடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோலி படைத்திருந்தார். இந்த நிலையில் வரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் அடித்தால் ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்வார்.

    1930-1948-ம் ஆண்டு காலகட்டங்களில் விளையாடிய பிராட்மேன் இங்கிலாந்தில் 11 சதத்தை அடித்தார். கோலியும் ஆஸ்திரேலியாவில் 11-வது சதத்தை அடித்தால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பிராட்மேனின் உலக சாதனையை கோலி சமன் செய்வார்.

    இந்த சாதனை பட்டியலில் ஜேக் ஹோப்ஸ் (ஆஸ்திரேலியாவில்), சச்சின் டெண்டுல்கர் (இலங்கையில்) தலா 9 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்தில் 8 சதங்கள் அடித்த சர் விவ் ரிச்சர்ட்ஸ் 4-வது இடத்தில் உள்ளார்.

    கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தவிர்த்து மற்ற அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடித்து விடுவார் என்று கருதுவதாக ஸ்டீவ்வாக் தெரிவித்தார். #SteveWaugh #ViratKohli #DonBradman
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறார். தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற வெறி, உத்வேகம், ஆர்வம், ஆக்ரோஷம், உடல்தகுதி எல்லாமே அவரிடம் இருக்கிறது. கடுமையான காயங்கள் ஏதும் அடையாமல் இருந்தால் அவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தவிர்த்து மற்ற அனைத்து சாதனைகளையும் முறியடித்து விடுவார் என்று கருதுகிறேன்.



    டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை (99.94) அவரால் எட்ட முடியாது’ என்றார். 29 வயதான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 73 டெஸ்டில் ஆடி 24 சதங்கள் உள்பட 6,331 ரன்களும் (சராசரி 54.57), 216 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 38 சதங்கள் உள்பட 10,232 ரன்களும் (சராசரி 59.53) குவித்துள்ளார்.

    சூப்பர் பார்மில் உள்ள விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளையும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) சேர்த்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் 7,824 ரன்கள் குவித்து, இந்த காலக்கட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (6,371 ரன்) உள்ளார். #SteveWaugh #ViratKohli #DonBradman
    ×