என் மலர்
நீங்கள் தேடியது "INDvWI"
- அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
- இந்திய அணி அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.
டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சஞ்சு சாம்சனின் இந்த அபார ஆட்டத்தின் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு அவர் முன்னேறினார்.
2010 ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 101 ரன்கள் குவித்த சுரேஷ் ரெய்னா ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். தற்போது 97* ரன்கள் அடித்து 2வது இடத்திற்கு சஞ்சு சாம்சன் முன்னேறினார். 92 ரன்களுடன் ரோகித் 3 ஆம் இடத்திலும் 89 ரன்களுடன் கோலி 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.
- டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா:
டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, கடந்த 2014 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சேசிங்கில் 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் கடைசி போட்டி இது.
- இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இன்று (மார்ச். 1) இரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் கடைசி போட்டி இது ஆகும்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா என மூன்று அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், நான்காவது அணியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறப்போவது யார் என்ற நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் களமிறங்கியுள்ளன.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
- ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வதாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.
நடப்பு சாம்பியனான இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழையுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
லீக் ஆட்டங்களில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வென்ற பிறகு சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. சென்னையில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதே உத்வேகத்துடன் வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் தொடரில் இருந்து வெளியேறும். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் ஆட வேண்டும்.
இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் இந்திய அணி வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். ஏனெனில், வெஸ்ட் இண்டீசைவிட நிகர ரன் ரேட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். இஷான் கிஷன் (214 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (213), ஷிவம் துபே (158), ஹர்திக் பாண்ட்யா (155), திலக் வர்மா (151) ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார்கள்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை.
வேகப்பந்தில் அர்ஷ்தீப் சிங், பும்ராவும் சுழற்பந்தில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஹெட்மயர், கேப்டன் ஷாய் ஹோப், ரூதர்போர்டு, போவெல் ஆகியோர் பேட்டிங்கிலும், குடாகேஷ், ஜேசன் ஹோல்டர், ஷமர் ஜோசப் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.
இந்தியாவை போலவே வெஸ்ட்இண்டீஸ் அணியும் லீக் சுற்றில் தோல்வியை தழுவாமல் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
இன்று மாலை 3 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
- ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சரியான முடிவுகளை எடுப்பதே முக்கியம்.
- இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு மிகப்பெரிய கவுரவம்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாலோ ஆன் வழங்கப்பட்டது சர்ச்சையானது. இந்த சர்ச்சைக்கு அணியின் கேப்டன் சுப்மன்கில் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சரியான முடிவுகளை எடுப்பதே முக்கியம். எது சிறந்த முடிவாக இருக்குமோ அதை எடுக்க முயற்சிக்கிறேன். இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு மிகப்பெரிய கவுரவம். நான் மெதுவாக இந்தக் கவுரவத்திற்குப் பழகி வருகிறேன்.
நாங்கள் முதல் இன்னிங்சில் சுமார் 300 ரன்கள் (270 ரன்கள்) முன்னிலையில் இருந்தோம். அப்போது நாங்கள் யோசித்தோம். ஒருவேளை நாங்கள் மீண்டும் பேட்டிங் செய்து, ஒரு 500 ரன்கள் எடுத்தாலும், போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 6 அல்லது 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியிருந்தால், அது எங்களுக்கு ஒரு கடினமான நாளாக அமையக்கூடும். அதனால், அவர்களுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தோம். அதுதான் அந்த முடிவின் பின்னணியில் இருந்த சிந்தனை.
நான் பேட்டிங் செய்யக் களத்திற்குச் செல்லும்போது, நான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே சிந்திக்கிறேன். மூன்று, நான்கு வயதிலிருந்தே நான் பேட்டிங் செய்து வருகிறேன். அதனால், களத்திற்குள் சென்றால், ஒரு பேட்ஸ்மேனாக முடிவுகளை எடுக்கவே விரும்புகிறேன்.
என்று கில் கூறினார்.
- 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ரோஸ்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 518 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்னில் சுருண்டு 'பாலோ-ஆன்' ஆனது.
இந்தியா 'பாலோ-ஆன்' வழங்கியதால் 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் (87 ரன்), ஷாய் ஹோப் (66 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த கேம்ப்பெல் சிறிது நேரத்தில் தனது 'கன்னி' சதத்தை நிறைவு செய்தார். ஜடேஜாவின் பந்தில் மெகா சிக்சரோடு மூன்று இலக்கத்தை தொட்டார். 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பை பெற்றார்.
அணியின் ஸ்கோர் 212 ஆக உயர்ந்த போது, கேம்ப்பெல் (115 ரன், 199 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) ஜடேஜாவின் சுழலில் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.
4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன், கேப்டன் ரோஸ்டன் சேஸ் இணைந்தார். இருவரும் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். அபாரமாக ஆடிய ஷாய் ஹோப் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 3-வது சதத்தை எட்டினார். டெஸ்டில் 8 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். ஆனால் செஞ்சுரிக்கு பிறகு நிலைக்கவில்லை. முகமது சிராஜ் வீசிய பந்தை ஷாய் ஹோப் (103 ரன், 214 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்த போது பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. கேப்டன் ரோஸ்டன் சேஸ் தனது பங்குக்கு 40 ரன்கள் (72 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். விக்கெட் கீப்பர் டெவின் இம்லாச் 12 ரன்னில் வெளியேற்றப்பட்டார். ஒரு கட்டத்தில் அந்த அணி 311 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 10-வது விக்கெட்டுக்கு ஜஸ்டின் கிரீவ்சும், ஜெய்டன் சீல்சும் கைகோர்த்து இந்திய பவுலர்களுக்கு 'தண்ணி' காட்டினர். 22 ஓவர்கள் சமாளித்த இவர்கள் தங்களது முன்னிலை ஸ்கோரை 100-க்கு மேல் தாண்ட வைத்து அசத்தினர். தொல்லை கொடுத்த இந்த ஜோடியை ஒரு வழியாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிரித்தார். அவர் வீசிய பந்தை தூக்கியடித்து சீல்ஸ் (32 ரன், 67 பந்து) கேட்ச் ஆனார்.
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 118.5 ஓவர்களில் 390 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்கு இவர்கள் 79 ரன்கள் திரட்டினர். கிரீவ்ஸ் 50 ரன்களுடன் (85 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியாவுக்கு 2-வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் (8 ரன்) வாரிகனின் சுழலில் சிக்கினார்.
இதன் பின்னர் லோகேஷ் ராகுலும் (25 ரன், நாட் அவுட்), சாய்சுதர்சனும் (30 ரன், நாட் அவுட்) மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 63 ரன் எடுத்தது.
இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. சாய் சுதர்சன் 39 ரன் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் சுப்மன் கில் 13 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 35.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2 -வது டெஸ்டின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும் இந்த தொடரின் தொடர் நாயகனாக ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
- இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
- சிராஜ் முதல் டெஸ்டில் 7 விக்கெட்டும் 2-வது டெஸ்டில் 3 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நாளையுடன் முடிகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைய 4-வது ஆட்ட நேர முடிவில் இந்தியா 63 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 58 ரன்கள் தேவையாக உள்ளது. இந்தியா வெற்றி பெறவே அதிக அளவில் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் சிராஜ் முதல் டெஸ்டில் 7 விக்கெட்டும் 2-வது டெஸ்டில் 3 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் இந்த ஆண்டில் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரானார். இவருக்கு அடுத்தப்படியாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த முசரபானி 36 விக்கெட்டுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
அதனை தொடர்ந்து ஸ்டார்க் (29), நாதன் லயன் (24), ஜோமல் வாரிகன் (23) என அதற்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்தது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் ஜாம்பெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கெம்பல், டெஸ்டில் தனது முதலாவது சத்தை பதிவு செய்தார். அவர் 115 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து சாய் ஹோப்புடன் கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய சாய் ஹோப் சதம் அடித்து அசத்தினர்.
அவரும் சதம் அடித்த சிறிது நேரத்தில் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து நிதானமாக விளையாடிய வந்த கேப்டன் சேஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் உடன் ஜெய்டன் சீல்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.
இதில் க்ரீவ்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஜெய்டன் சீல்ஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் பும்ரா 3விக்கெட்டும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்கள் குவித்ததன் மூலம் இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் முதலில் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடினர். இதனால் 7 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் ராகுலுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
18 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராகுல் 25 ரன்களுடனும் சாய் சுதர்சன் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இன்னும் இந்தியா வெற்றி பெற 58 ரன்கள் தேவை. நாளை கடைசி நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 390 ரன்கள் எடுத்தது.
- சாய் ஹோப் மற்றும் ஜான் ஜாம்பெல் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் ஜாம்பெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கெம்பல், டெஸ்டில் தனது முதலாவது சத்தை பதிவு செய்தார். அவர் 115 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து சாய் ஹோப்புடன் கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய சாய் ஹோப் சதம் அடித்து அசத்தினர்.
அவரும் சதம் அடித்த சிறிது நேரத்தில் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து நிதானமாக விளையாடிய வந்த கேப்டன் சேஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் உடன் ஜெய்டன் சீல்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.
இதில் க்ரீவ்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஜெய்டன் சீல்ஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்கள் குவித்ததன் மூலம் இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- ஜான் கேம்பல் 115 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
- முதல் சதம் அடிக்க அதிக இன்னிங்ஸ்கள் எடுத்த கொண்ட வீரர்கள் பட்டியலில் கேம்பல் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் ஜாம்பெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கெம்பல், டெஸ்டில் தனது முதலாவது சத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 19 ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
கடைசியாக 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் டேரன் கங்கா இந்தியாவிற்கு எதிராக சதமடித்திருந்தார்.
மேலும் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்ய அதிக இன்னிங்ஸ்கள் எடுத்த கொண்ட வீரர்கள் பட்டியலில் இவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டிரெவோர் கொடாட் உள்ளார். இவர் முதல் சதத்தை பதிவு செய்ய 58 இன்னிங்ஸ்கள் எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது.
- ஜெய்ஸ்வால் 175 குவித்து அவுட்டானார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.
இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிகே அத்னாஸ் 41 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 270 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாலோ ஆன் ஆனதால் 2 ஆவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் பேட்டிங் செய்யவுள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அதனேஸ் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
- இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
புதுடெல்லி:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக ஜான் கேம்பல் மற்றும் சந்தர்பால் களமிறங்கினார். இவர்கள் இருவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர்.
இதனை தொடர்ந்து 7-வது ஓவரில் சுழற்பந்து வீச்சை களமிறக்கினார் சுப்மன் கில். அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய கேம்பல் 2-வது பந்தில் சாய் சுதர்சனின் அருமையான கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த அலிக் அதனேஸ் மற்றும் சந்தர்பால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி, 2-வது விக்கெட்டை 28-வது ஓவரில் வீழ்த்தியது.
ஜடேஜா பந்து வீச்சில் சந்தர்பால் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அதனேஸ் 41 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோஸ்டன் வந்த வேகத்தில் டக் அவுட் முறையில் வெளியேறினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாய் ஹோப்- டெவின் இம்லாக் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.






