என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விராட் கோலி"

    • விராட் கோலி தற்போது 84 சர்வதேச சதங்களுடன் உள்ளார்.
    • இந்தியா அடுத்த 2027 உலகக் கோப்பை வரை சுமார் 30-35 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. இவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அவர் 2008-ல் அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    அதனை தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடினார். 3 வடிவத்திலும் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் 84 சதங்களுடன் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். (டெஸ்டில் 30, ஒருநாள் போட்டிகளில் 53, டி20யில் 1).

    ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 53 சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இலக்கை துரத்திச் சென்று அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர். சேஸிங்கின் போது மட்டும் 26 சதங்களுக்கு மேல் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 27,000க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.

    இந்நிலையில் விராட் கோலி தற்போது 84 சர்வதேச சதங்களுடன் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 16 சதங்கள் தேவை. அவர் இந்த மைல்கல்லை எட்டுவது சாத்தியமா என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

    37 வயதிலும் அவர் மிக உயர்ந்த உடல் தகுதியுடன் உள்ளார். இது இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாட உதவும். அவர் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்திய ஒருநாள் தொடர்களில் அவர் தொடர்ந்து சதங்கள் அடித்து வருகிறார்.

    இருந்தாலும் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அவர் விளையாடும் ஒரே வடிவம் ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே. இந்தியா அடுத்த 2027 உலகக் கோப்பை வரை சுமார் 30-35 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது.

    அவர் 16 சதங்களை எட்ட, கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் ஒரு சதம் அடிக்க வேண்டும். 2027 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோலி 2027 உலகக் கோப்பையில் 11 போட்டிகள் வரை விளையாட முடியும். ஒருவேளை இந்தியா சீக்கிரமே வெளியேறினால் குறைந்தபட்சம் 6 போட்டிகள் விளையாடும்.

    புள்ளிவிவர ரீதியாகப் பார்த்தால் இது மிகவும் கடினமான இலக்காகத் தெரிகிறது. ஆனால், கோலியின் திறமை, அனுபவம் மற்றும் தீவிரமான ஆட்ட வேட்கையைக் கருத்தில் கொள்ளும்போது, கிரிக்கெட்டில் எதையும் சாத்தியமற்றது என்று சொல்லிவிட முடியாது.

    விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 1000க்கும் அதிகமான பவுண்டரிகளை (1027 ஃபோர்ஸ்) அடித்துள்ளார். அவரது டெஸ்ட் சராசரி ஒரு கட்டத்தில் 55.10 என்ற உச்சத்தை எட்டியது. குறிப்பாக இந்தியாவில் நடந்த போட்டிகளில் இவரது சராசரி 55.58 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
    • இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே ஆவார்.

    ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தைக் கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    இதற்கிடையே, 2025-ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 10 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 10 வீரர்களின் விவரம் குறித்த தகவல் வெளியானது.

    அதன்படி, இந்தியாவின் விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் அடில் ரஷீத், வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் மற்றும் ஜெய்டன் சீல்ஸ், நியூசிலாந்தின் டேரில் மிச்செல், மேட் ஹென்றி மற்றும் மிட்சல் சாண்ட்னர், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ராசா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

    ஆனால் இந்த பட்டியல் போலியானது என்று தெரிய வந்துள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதன் வருடாந்திர விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்து எந்தஅதிகாரபூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

    • ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
    • 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ. ) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள்.

    சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.

    இந்த நிலையில் இருவரையும் ஏ பிளஸ் கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ நிலைக்கு கீழிறக்கப்பட்டால் கோலி, ரோகித் சர்மாவின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.

    அதே நேரத்தில் ஜடேஜா 20 ஓவர் ஆட்டத்தில் ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் தீவிரமாக விளையாடுவதால் ஏ பிளஸ் கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

    ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

    • பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார்.
    • விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    துபாய்:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். தென் ஆப்பிரிக்க தொடரில் அசத்திய விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதன் காரணமாக டேரில் மிட்செல் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்திற்கும், இப்ராஹிம் சத்ரன் ஒரு இடம் சரிந்து 4-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியா தரப்பில் சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் மாற்றமின்றி முதலிடத்திலும் ஆர்ச்சர் 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்தியாவின் குல்தீப் யாதவ் கிடுகிடுவென 3 இடங்கள் எகிறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா தரப்பில் இவர் மட்டுமே டாப்-10 இடத்திற்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மாற்றமில்லை. அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய தரப்பில் அக்சர் படேல் 10-வது இடத்தில் உள்ளார்.

    • கோலி இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது.

    மும்பை:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய வீரர் விராட்கோலி இரண்டு சதங்கள் விளாசினார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இதுவரை 84 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 53, டெஸ்டில் 30 மற்றும் 20 ஓவர் போட்டியில் ஒரு சதம்) அடித்துள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் இருக்கிறார்.

    இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்வார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கவாஸ்கர் கூறும் போது, 'கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை. தற்போது அவர் சிறப்பான பேட்டிங் செய்து வருகிறார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதம் எடுத்தார். அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு சதம் அடித்தால் சதங்களின் எண்ணிக்கை 86-ஐ தொடும். அதன் பிறகு அவர் நிச்சயம் 100 சதங்களை எட்டுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி என்பதை உணர்ந்த கோலி தனக்கு தாமே மகிழ்ச்சியுடன் அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது' என்றார்.

    மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், 'தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து 100 ரன்களுக்கு மேல் எடுத்தார். அவர் சதங்களின் சக்ரவர்த்தி. சூப்பர் பார்மில் உள்ளார். 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை உள்பட சுமார் 40 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதனால் அவரால் 100 சதங்கள் எட்ட முடியும்' என்றார்.

    டெஸ்ட் மற்றும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட 37 வயதான கோலி தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.
    • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி தொடர் நாயகன் விருது வென்றார்.

    டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.

    2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் தொடர் நாயகன் விருது வென்று தன மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    3 ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்த நிலையில், அந்த ஊரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் விராட் கோலி சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோ இணையத்தில் வைரலாகி வைரலாக பரவி வருகிறது. 

    • இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.
    • இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. சச்சின் 19 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ள நிலையில், கோலி 20 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

    இந்த பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் 17 முறை தொடர் நாயகன் விருதை வென்று 3 ஆம் இடத்தில உள்ளார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 39.5 ஓவரில் 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார். பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார்.

    விராட் கோலி ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 40 பந்தில் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • முதல் ஒருநாள் போட்டியில் கோலி சதம் அடித்தார்.
    • சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.

    முன்னதாக முதல் 2 போட்டியிலும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்திருந்தார். இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார். உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.

    இந்நிலையில் அவரை ஜெயில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவக் வெளியாகி உள்ளது. அதில் போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசியவுடன், நான் விடுவிக்கப்பட்டேன் என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • விராட் கோலிக்கு 100 ரன்கள் மீது ஒருவிதமான போதை இருக்கிறது.
    • விராட் இருந்தால் எதுவும் சாத்தியமே என கூறினார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா அணி தோல்வியடைந்தது. முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு 53-வது ஒருநாள் சதம் ஆகும். முதல் ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்திருந்தார்.

    இந்நிலையில் நாம் சதங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அசால்ட்டாக அடிக்கிறார் என விராட் கோலியை முன்னாள் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலிக்கு 100 ரன்கள் மீது ஒருவிதமான போதை இருக்கிறது. நாம் சதங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அசால்ட்டாக அடித்து நொறுக்குகிறார். விராட் இருந்தால் எதுவும் சாத்தியமே என கூறினார்.

    • இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் சதம் அடித்தார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் 105 ரன்னும் விராட் கோலி 102 ரன்னும் கே.எல்.ராகுல் 66 ரன்னும் அடித்தனர்.

    இதையடுத்து 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

    தொடக்க ஆட்டக்காரரான மார்க்ரம் 98 பந்துகளில் 110 ரன்கள் விளாசி அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பவுமா 46 ரன்னிலும் அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    நிதானமாக விளையாடிய ப்ரீட்ஸ்கி 68 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய போஸ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

    49.2ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    • இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - ரோகித் களமிறங்கினர். இதில் ரோகித் 8 பந்தில் 14 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ருதுராஜ்- விராட் கோலி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    ருதுராஜ் 105 ரன்னிலும் விராட் கோலி 102 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து கேஎல் ராகுல் - ஜடேஜா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    ×