என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள்: பாண்டிங், சேவாக்கை முந்திய விராட் கோலி
    X

    நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள்: பாண்டிங், சேவாக்கை முந்திய விராட் கோலி

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 337 ரன்கள் குவித்தது.
    • டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    இந்தூர்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஆளாகப் போராடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.

    இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். அவர் நியூசிலாந்துக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், வீரேந்திர சேவாக் ஆகியோர் 6 சதங்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து சச்சின், சனத் ஜெயசூர்யா ஆகியோர் 5 சதங்கள் அடித்துள்ளனர்.

    Next Story
    ×