search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvNZ"

    • 18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.
    • 14,234 ரன்களுடன் குமார் சங்கக்காரா 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 28 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் 13,705 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ரிக்கி பாண்டிங் 13,704 ரன்கள் எடுத்து இதற்கு முன்னதாக 3-வது இடத்தில் இருந்தார். தற்போது விராட் கோலி அவரை 4-வது இடத்திற்கு தள்ளியுள்ளார். சச்சின் தெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதல் இடத்திலும், 14,234 ரன்களுடன் குமார் சங்கக்காரா 2-வது இடத்தில் உள்ளார். சனத் ஜெயசூர்யா 13,430 ரன்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    • இந்தியா தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    • நியூசிலாந்து 5 வெற்றி, 4 தோல்விகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    13-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. நேற்று முன்தினத்துடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன.

    இதன் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து, ஆகிய நாடுகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தோல்வியை சந்திக்காமல் 9 ஆட்டத்திலும் வென்று 18 புள்ளிகளுடன் நாக்அவுட் சுற்றான அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.

    லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடிய இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா 8-வது முறையாக அரைஇறுதியில் விளையாடுகிறது. 2 முறை சாம்பியனான அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் வேட்கையில் உள்ளது. கடந்த உலகக் கோப்பை அரைஇறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்னில் இந்திய அணி தோற்று இருந்தது.

    அதற்கு நாளைய அரை இறுதியில் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.

    கடந்த 22-ந்தேதி தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்திசாயத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

    இதனால் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் நம்பிக்கையுடன் விளையாடும். மேலும் சொந்த மண் என்பதால் கூடுதல் பலமாகும். இந்த தொடரில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான பேட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

    அது நேரத்தில் நியூசிலாந்தும் அபாரமாக விளையாடக் கூடியது. அந்த அணி நாக்அவுட் சுற்றில் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தது. இதனால் இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். அரைஇறுதி என்பதால் நெருக்கடி கூட ஏற்படும். இதனால் கவனமுடன் ஆடுவது அவசியமானது.

    வான்கடே ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். முதல் 15 ஓவர் பேட்டிங் ஆட்டத்தின் முடிவை நிர்ணயம் செய்யும்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இடம் பெறு வார்கள்.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    விராட் கோலி 594 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். அவர் 2 சதமும், 5 அரை சதமும் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் அவர் டெண்டுல்கரின் 49 செஞ்சுரி சாதனையை முறியடிப்பார். விராட் கோலி சமீபத்தில்தான் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து இருந்தார்.

    ரோகித் சர்மா ஒரு சதம், 3 அரை சதங்களுடன் 503 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அதிரடியாக விளையாடி வருகிறார். இது தவிர ஷ்ரோயாஸ் அய்யர் 421 ரன்னும் (1 சதம், 3 அரை சதம்), லோகேஷ் ராகுல் 347 ரன்னும் (1 சதம், 1 அரை சதம்), சுப்மன் கில் 258 ரன்னும் (3 அரைசதம்) எடுத்து நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்திய அணி வேகப்பந்து மற்றும் சுழற்பந்தில் சிறப்பான நிலையில் இருக்கிறது. மிகவும் முக்கியமான அரைஇறுதியில் பந்துவீச்சு நன்றாக அமைய வேண்டும்.

    பும்ரா 17 விக்கெட்டும், முகமது சமி, ஜடேஜா தலா 16 விக்கெட்டும், குல்தீப் யாதவ், 14 விக்கெட்டும், முகமது சிராஜ் 12 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். சமிக்கு முதல் 4 போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 ஆட்டத்தில்தான் அவர் 16 விக்கெட்டை எடுத்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக மட்டுமே விக்கெட் எடுக்கவில்லை.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 2015, 2019 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை இழந்தது. அந்த அணி 9-வது தடவையாக அரைஇறுதியில் விளையாடுகிறது.

    நியூசிலாந்து அணி லீக் சுற்றில் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றது 4 போட்டியில் தோற்றது.

    இந்தியாவை போலவே நியூசிலாந்தும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா (566 ரன், 3 சதம், 2 அரை சதம்), மிச்சேல் (418 ரன் 1 சதம், 2 அரை சதம்), கான்வே (357 ரன்), பிலிப்ஸ் மற்றும் கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    சான்ட்னெர் (16 விக்கெட்), போல்ட் (13 விக்கெட்), பெர்குசன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.

    இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவும், நியூசிலாந்தும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இலங்கைக்கு எதிராக 172 ரன் இலக்கை 23.2 ஓவரில் சேஸிங் செய்ததால் நல்ல ரன்ரேட்.
    • பாகிஸ்தான் இங்கிலாந்தை 273 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுவது உறுதியாகிவிட்டது.

    15-ந்தேதி நடைபெறும் முதல் அரைஇறுதியில் இந்தியாவுடன் மோதுவது நியூசிலாந்தா அல்லது பாகிஸ்தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் ரன்ரேட்டில் நல்ல நிலையில் உள்ள நியூசிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:-

    அரைஇறுதியில் விளையாடுவது சிறப்பானது. ஆனால் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவது கடும் சவாலானதாக இருக்கும். அதை எதிர்நோக்கி இருக்கிறோம்.

    இலங்கைக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆடுகளத்தில் பந்து மெதுவாக சென்றது. ரன் சேஸிங்கில் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதிக்கு முன்னேற முடியும். இது மிகவும் கடினம் என்பதால், நியூசிலாந்து ஏறக்குறைய அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
    • இந்திய அணியின் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா, விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 48 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்நிலையில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நியூசிலாந்துக்கு எதிரான அபார வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது ஒரு அற்புதமான குழு முயற்சியாகும். அங்கு அனைவரும் பங்களித்தனர். களத்தில் வீரர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் முன்மாதிரியாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்கள் குவித்தார். இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 5பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். சுப்மன் கில் 38 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.

    ஏற்கனவே, தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் ஆம்லா 40 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 273 ரன்களை எடுத்தது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே டக் அவுட்டானார். வில் யங் 17 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடி அரை சதம் கடந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஜோடி 159 ரன்கள் சேர்த்த நிலையில், ரச்சின் ரவீந்திரா 75 ரன்னில் அவுட்டானார். கேப்டன் டாம் லாதம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் 23 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து 130 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • தரம்சாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியில் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா விளையாடவில்லை என ஏற்கனவே அறிவிப்பு
    • சூர்யகுமாரின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால், விளையாடுவாரா? என்பது சந்தேகம்

    உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ந்து நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. இன்று நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி தரம்சாலாவில் நடைபெற இருக்கிறது.

    இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும். கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை மாற்றி எழுத இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்திய அணி நேற்று பயிற்சி மேற்கொண்டது. அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த சூர்யகுமார் யாதவின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளாமல் வெளியேறினார்.

    ஏற்கனவே, ஹர்திக் பாண்ட்யா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்திய அணி கவலை அடைந்துள்ளது.

    மேலும், இஷான் கிஷன் பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென தேனீக்கள் படையெடுத்து வந்தன. அப்போது இஷான் கிஷனை சில தேனீக்கள் கொட்டின. இதனால் அவரும் பயிற்சியை கைவிட்டு வெளியேறினார். ஆனால், விளையாட முடியாத வகையில் அவருக்கு ஆபத்து இல்லை.

    • நியூசிலாந்து அணியை 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
    • ஆட்ட நாயகனாக சுபமன் கில்லும் தொடர் நாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணி இளம் வீரர்களுடன் டி20 தொடரில் பங்கேற்றது.

    முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய இளம் படை அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது.

    235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 12.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.

    இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. 2018-ல் சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியிருந்தது. இதனை தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது.

    ஆட்ட நாயகனாக சுபமன் கில்லும் தொடர் நாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் விக்கெட்களை வீழ்த்தினார்.
    • இந்தியா சார்பில் ஹர்த்திங் பாண்டியா, உம்ரான் மாலிக், ஷிவம் மாவி சிறப்பாக பந்து வீசினர்.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழந்து 234 ரன்களை குவித்தது.

    இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்களை விளாசினார். இவரை தொடர்ந்து ராகுல் திரிபாதி, கேப்டன் ஹர்த்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே 33, 30 மற்றும் 24 ரன்களை எடுத்தனர். இதைத் தொடர்ந்து 235 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

    நியூசிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஃபின் ஆலென், தேவன் கான்வே தங்களின் விக்கெட்களை இழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன், கிலென் பிலிப்ஸ் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்த்திக் பாண்டியா பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி துவக்கத்திலேயே விக்கெட்களை கைப்பற்றினர்.

    இதன் காரணமாக வெற்றி இலக்கை துரத்த முடியாமலும், விக்கெட் சரிவை நிறுத்த முடியாமலும் நியூசிலாந்து அணி போராடியது. நியூசிலாந்து வீரர்கள் துவக்கத்திலேயே விக்கெட்களை இழக்க, அந்த அணியின் டேரில் மிட்செல் மட்டும் நிதானமாக ஆடி வந்தார். 12.1 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 66 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

    மூன்றாவது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்தியா சார்பில் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 4 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் ஷிவம் மாவி தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

    • இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது.
    • இந்திய துவக்க வீரரான சுப்மன் கில் சதம் அடிக்க, இந்தியா 20 ஓவர்களில் 234 ரன்களை குவித்தது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்று பெற்றுள்ளன. இதனால் தொடரை யார் கைப்பற்றுவர் என்ற எதிர்பார்ப்பு இன்றைய போட்டியில் ஏற்பட்டு இருக்கிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பிரேஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்களை விளாசினார்.

    சுப்மன் கில்லுடன் ஆடிய ராகுல் திரிபாதி தன் பங்கிற்கு 22 பந்துகளில் 44 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 24 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஐந்தாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 30 ரன்களை விளாசினார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்துள்ளது. இதை அடுத்து 235 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்க இருக்கிறது. 

    • இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு வெற்று பெற்றுள்ளன.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    மூன்றாவது டி20 போட்டிக்காக இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டு இருக்கிறார். நியூசிலாந்து அணியில் பென் லிஸ்டர் எனும் அறிமுக வீரர் களமிறங்குகிறார்.

    இந்திய அணி விபரம்:-

    1. சுப்மன் கில் 2. இஷான் கிஷன் 3. ராகுல் திரிபாதி, 4. சூர்யகுமார் யாதவ் 5. ஹர்த்திக் பாண்டியா, 6. தீபக் ஹூடா 7. வாஷிங்டன் சுந்தர் 8. ஷிவம் மாவி 9. குல்தீப் யாதவ் 10. உம்ரான் மாலிக், 11. அர்ஷ்தீப் சிங்

    நியூசிலாந்து அணி விபரம்:-

    1. ஃபின் ஆலென், 2. தேவன் கான்வே, 3. மார்க் சாப்மேன், 4. கிலென் பிலிப்ஸ், 5. டேரில் மிட்செல், 6. மைக்கேல் பிரேஸ்வெல், 7. மிட்செல் சாண்ட்னர், 8. இஷ் சோதி, 9. லோகி ஃபெர்குசன், 10. பென் லிஸ்டர், 11. பிளெயர் டிக்னர்

    ×