என் மலர்
நீங்கள் தேடியது "Yuvraj Singh"
- ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், நேரில் சந்தித்துள்ளார்.
- ரிஷப் பண்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு ஆண்டு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.
இதனை தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை முன்னேறி வந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு ஆண்டு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், நேரில் சந்தித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய டுவிட்டரில், இந்த சாம்பியன் மீண்டும் எழப் போகிறார். இவர் எப்போதும் நேர்மறையாகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கும். என்று பதிவிட்டுள்ளார்.
- ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஹோலி பண்டிகையை எங்களை போல கொண்டாடாதீர்கள் என ஜாலியாக அட்வைஸ் செய்துள்ளனர்.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹோலி பண்டிகை இந்தியாவில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஹோலி பண்டிகை கொண்டாடி வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஹோலி பண்டிகையை எங்களை போல கொண்டாடாதீர்கள் என ஜாலியாக அட்வைஸ் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் யுவராஜ் சிங் கழிப்பறையில் இருந்து வெளியே வந்து ஹர்பஜன் சிங்கின் முகத்தில் வண்ணங்களை பூசி ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்தார். அதுபோல ஹர்பஜன் சிங்கும் யுவராஜ் முகத்தில் வண்ணங்களை பூசி வாழ்த்து தெரிவித்தார்.
யுவராஜ் சிங்கிடம் நீ இப்போது கழிப்பறையில் இருந்து தானே வந்தாய் என்று கேட்டார். உடனே யுவராஜ் மன்னித்து விடு என சிரித்தப்படி கூறினார். மேலும் எங்களை போல ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டாம். சுகாதாரமான முறையில் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என யுவராஜ் கூறினார்.
இதற்கு ஹர்பஜன் சிங் நீ வண்ணம் தான் பூசினாயா அல்லது வேறு ஏதும் பூசினாயா என கிண்டலாக பேசி அனைவருக்கும் இனிய ஹோலி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- கோவாவில் யுவராஜ் சிங்கிற்கு சொந்தமான ஒரு சொகுசு வீடு உள்ளது.
- கோவாவில் ஒருவர் விடுதி நடத்த வேண்டுமென்றால், அரசிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
கோவா:
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமான வீரர்களில் இடதுகை ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கும் ஒருவர். உலகக்கோப்பை வென்ற அணிகளில் இடம்பிடித்தவர். நீண்ட நாட்களாக வாய்ப்பு பெறாமல் இருந்து வந்த யுவராஜ் சிங், கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் விலகினார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு விளம்பர படங்களில் யுவராஜ் சிங் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் பல தனியார் தொழில்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.
இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தளமான கோவாவில் யுவராஜ் சிங்கிற்கு சொந்தமான ஒரு சொகுசு வீடு உள்ளது. இங்கு அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் சென்று நேரத்தை செலவிடுவார். அதனை தற்போது விடுதியாக மாற்றி சுற்றுலா பயணிகளுக்கு வாடைகைக்கு விடுகிறார். இதுகுறித்து நேற்று அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
அதில், தனக்கு சொந்தமான காசா சிங் வீட்டில் பல்வேறு சுவாரஸ்ய நினைவுகள் உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களாகிய நீங்கள் அதையெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக புக் செய்துக்கொள்ளலாம் என அறிவித்தார். யுவராஜின் இந்த நடவடிக்கை தான் கோவாவின் அரசு விதிமுறைகளுக்கு எதிரானவை ஆகும்.
கோவாவில் ஒருவர் விடுதி நடத்த வேண்டுமென்றால், அரசிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அதை எதையுமே செய்யாமல் யுவராஜ் சிங் இப்படி செய்துள்ளார். எனவே கோவாவின் சுற்றுலா துறை இயக்குநர் சார்பில் ராஜேஷ் காலே, வரும் டிசம்பர் 8ம் தேதி 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. அதுவரை அது விடுதியாகாது.
ஒருவேளை அரசு அனுப்பிய கடிதத்திற்கு யுவராஜ் சிங் எந்தவொரு பதிலும் தரவில்லை என்றால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கருதி, அவருக்கு குறைந்தது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஸ்டாய்னிஸ் படைத்துள்ளார்.
- 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
டி20 உலகக்கோப்பை 19-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் ஆசிய சாம்பியன் இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது.
ஸ்டாய்னிசின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவரிலேயே ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ்: 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. டேவிட் வார்னர்: 18, பந்துகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010
2. கிளன் மேக்ஸ்வெல் : 18 பந்துகள் பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
அத்துடன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த ஒட்டுமொத்த பட்டியலில் 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
1. யுவராஜ் சிங் : 12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007
2. மார்கஸ் ஸ்டோனிஸ் : 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. ஸ்டீபன் மைபர்க் : 17, அயர்லாந்துக்கு எதிராக, 2014
3. கிளென் மேக்ஸ்வெல் : 18, பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
3. கேஎல் ராகுல் : 18, ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021
மேலும் இப்போட்டியில் 327.78 என்ற ஸ்டிரைக் ரேட்டில் இலங்கையை அடித்து நொறுக்கிய அவர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 300+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற யுவராஜ் சிங் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் : 59* ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. யுவராஜ் சிங் : 58 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா சமன் செய்துள்ளார்.
- இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்த்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் ஹர்த்திக் பாண்ட்யா ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா தகர்த்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா மூன்று முறையும், யுவராஜ் 2 முறையும் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்துள்ளனர்.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 - 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற டோனியின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார்.
அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா (34*) இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி (34) இவர்களுக்கு அடுத்தப்படியாக யுவராஜ் சிங் (31) உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் சரியாக ஆடாததால் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு அணியில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடுகிறார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யுவராஜ்சிங் சிந்தித்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச விரும்புகிறார். கனடாவில் நடக்கும் குளோபல் லீக் மற்றும் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நெதர்லாந்தில் நடக்கும் 20 ஓவர் போட்டிகளில் ஆடுவதற்கு அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதற்கு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை கோருகிறார்’ என்றார்.
37 வயதான யுவராஜ்சிங் 2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல பக்கபலமாக இருந்தார். அந்த உலக கோப்பையில் 362 ரன்களுடன், 15 விக்கெட்டும் எடுத்து தொடர் நாயகன் விருதை பெற்றது நினைவு கூரத்தக்கது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யுவராஜ்சிங் அடித்த அரைசதம் (35 பந்துகளில் 53 ரன்கள்) ஆறுதல் அளித்ததே தவிர, அணியின் வெற்றிக்கு உதவவில்லை. போட்டிக்கு பிறகு யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பான்டுக்கு இடம் கிடைக்குமா? என்பது எனக்கு தெரியாது. இந்த போட்டியில் அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. கடந்த ஆண்டும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவர் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இளம் வயதிலேயே இரண்டு சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். அவர் வருங்காலத்தில் மிகச் சிறந்த வீரராக உருவெடுப்பார். அவரை கவனமாக வழிநடத்த வேண்டியது முக்கியமானதாகும். கடந்த 2 வருடங்களாக எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறேன். இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து நான் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை. அதற்கான நேரம் வரும் போது முதல் நபராக ஓய்வு முடிவை அறிவிப்பேன். கிரிக்கெட்டை இளம் வயது முதலே அனுபவித்து ஆடுவதால் நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். எனது ஓய்வு குறித்து குழப்பமான சூழ்நிலை ஏற்பட்ட போது தெண்டுல்கருடன் கலந்து ஆலோசித்தேன். அதில் எனக்கு நல்ல தெளிவு கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
கிரிக்கெட் வீரர் டோனி மோட்டார்சைக்கிள்கள் மீது அதிக பிரியம் கொண்டவர்.
அவரிடம் சுமார் 20 அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன. கிரிக்கெட் போட்டி இல்லாத நாட்களில் மோட்டார் சைக்கிளில் உலாவருவது அவருக்கு பிடித்த பொழுது போக்காக உள்ளது.
டோனி போலவே மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் மோட்டார்சைக்கிள்கள் மீது ஆர்வத்துடன் உள்ளனர். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக மோட்டார்சைக்கிளை வாங்கினார்.
அந்த மோட்டார்சைக்கிளின் விலை சுமார் ரூ.3 லட்சம் ஆகும். 3 ஆண்டுகள் வாரண்டி கொண்ட அந்த மோட்டார்சைக்கிள் அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.
தற்போது முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும் இதே ரக புதிய மோட்டார்சைக்கிள் வாங்கி உள்ளார். இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.
313 சி.சி. சக்தி கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் அதிநவீன வசதிகள் கொண்டது. பி.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் ஜெர்மனி, தாய்லாந்து, பிரேசில் நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Yuvrajsingh #SouravGanguly #MSDhoni
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறுவது குறித்து யுவராஜ்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
டோனிக்கு சிறந்த கிரிக்கெட் அறிவு இருக்கிறது. விக்கெட் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கக்கூடியவர். அந்த பணியை அவர் பல வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார்.
அவர் ஒரு சிறந்த கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். இளம்வீரர்களை மட்டுமல்லாமல் கேப்டன் விராட்கோலியையும் அனைத்து தருணங்களிலும் வழிகாட்டி வருகிறார். இதனால் முடிவு எடுக்கும் பணிகளுக்காகவே டோனி உலக கோப்பை அணியில் முக்கிய இடம் பெற வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமைந்திருக்கிறது. வழக்கமான அவரது ஷாட்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியின் பங்களிப்பு முக்கிய இடமாக இருக்கும். அவர் எந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அவர் தான் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. #YuvrajSingh #MSDhoni #WorldCup2019
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.1 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் 37 வயதான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கிரிக்கெட் மீதான எனது வேட்கை இன்னும் குறையவில்லை. அதனால் தான் விளையாடிக்கொண்டு இருக்கிறேன். இந்த சீசனில் நிச்சயம் அசத்துவேன் என்று நம்புகிறேன். ஐ.பி.எல். ஏலத்தில் முதல் ரவுண்டிலேயே என்னை எந்த அணியாவது தேர்வு செய்யும் என்று நினைக்கவில்லை. அதனால் இதில் எனக்கு ஏமாற்றம் ஏதும் இல்லை. ஒரு ஐ.பி.எல். அணியாக, இளம் வீரர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நானோ கிட்டத்தட்ட எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கிறேன். ஆனால் அடுத்த ரவுண்டில் என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படியே நடந்தது.
மும்பை அணியில் எனக்கு உகந்த சூழல் இருக்கும். அந்த அணியில் ஜாகீர்கான் (கிரிக்கெட் இயக்குனர்), சச்சின் டெண்டுல்கர் (ஆலோசகர்), ரோகித் சர்மா (கேப்டன்) ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவர்களுடன் மறுபடியும் கைகோர்த்து விளையாட ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அணியில் உங்களுக்கு ஆதரவு இருக்கும் போது, அது நன்றாக ஆடுவதற்கு ஊக்கமாக அமையும். இதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக (6 இன்னிங்சில் 65 ரன்) நான் சரியாக ஆடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 4-5 ஆட்டங்களில் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் இறக்கப்பட்டேன். குறிப்பிட்ட ஒரே வரிசையில் தொடர்ந்து ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார். #YuvrajSingh #IPLCricket