என் மலர்
நீங்கள் தேடியது "Indian cricket team"
- இலங்கைக்கு எதிரான நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
- இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேரளா வந்துள்ளனர். இலங்கைக்கு எதிராக நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில் கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கோயில் வெளியே இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முதல்முறையாக வென்று சாதனை படைத்த விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
1980-ம் ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீஸ் அணி எந்த மாதிரி ஆக்ரோஷமாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியதோ? அதேபோல் தற்போதையை இந்திய கிரிக்கெட் அணி காட்சி அளிக்கிறது. அந்த கால கட்டத்தில் எந்த அணியையும், எந்த இடத்திலும் வீழ்த்தும் சக்தியுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி விளங்கியது. அது மாதிரி விராட்கோலி தலைமையிலான இந்திய அணி எல்லா அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்துகிறது. மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
இந்திய அணிக்கு இந்த ஆஸ்திரேலிய பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது எனலாம். பெர்த் டெஸ்ட் போட்டியை தவிர அனைத்து ஆட்டங்களில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டது. இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் அணிக்கு தங்களது பங்களிப்பை அளித்தனர். இந்திய அணிக்கு முக்கிய பிரச்சினை டோனி தான். அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பதால் ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடும் நிலைக்கு தள்ளப்படுவார். தற்போதைய நிலையை பார்க்கையில் இந்திய அணியின் உலக கோப்பை பயணம் சிறப்பானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நியூசிலாந்து தொடரில் இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்தே அந்த அணியின் உலக கோப்பை பயணம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நாள் போட்டி தொடரில் இரு அணிகள் இடையே சம அளவிலான போட்டி இருக்கும் என்று நான் நினைத்தேன். டோனி தலைமையில் முந்தைய போட்டி தொடரில் இந்திய அணி கண்ட தோல்விக்கு டோனி பழிதீர்த்து விட்டார். எல்லா போட்டியிலும் டோனியின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக கடைசி 2 ஒருநாள் போட்டியில் அவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடரை வெல்ல இந்திய அணி தகுதி படைத்ததாகும். கடந்த 12 மாதங்களாக எங்கள் அணியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. சில நல்ல வீரர்கள் அணியில் இடம் பெற முடியாமல் போனது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 6-ந் தேதி நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி முடிந்ததும் தீபாவளி கொண்டாட்டத்துக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
வெஸ்ட்இண்டீஸ் அணியினர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். நேற்று ஓய்வு எடுத்த வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். கடைசி 20 ஓவர் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் நாளை (சனிக்கிழமை) சென்னை வந்து சேருகிறார்கள். வீரர்கள் தனித்தனியாக வந்து இணைவார்கள் என்று தெரிகிறது. #IndianCricketTeam #INDvWI
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ.பி.சி. என பிரிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அவர்களுக்கு தரம் உயர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 18.7.2018 முதல் 17.10.2018 வரையிலான 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பளம் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது.
கேப்டன் விராட்கோலிக்கு தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயண ஊதியம், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதற்கான ஊக்க தொகை என ரூ.1.25 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
புஜாராவுக்கு ரூ.2.83 கோடியும், தவானுக்கு ரூ.2.8 கோடியும், ரோகித் சர்மாவுக்கு ரூ.1.42 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு அதிகபட்சமாக ரூ.3.73 கோடி தரப்பட்டு இருக்கிறது.
இதேபோல பும்ராவுக்கு ரூ.1.73 கோடி, அஸ்வினுக்கு ரூ.2.7 கோடி, இஷாந்த்சர்மாவுக்கு ரூ.1.33, பாண்ட்யாவுக்கு ரூ.1.1 கோடி, சகாலுக்கு ரூ.1.1 கோடி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். #RaviShastri
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி.
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து இரண்டு உலக கோப்பையை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த நிலையில் பீகார்- ஜார்க்கெட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்களில் டோனி முதல் இடத்தை பிடித்தார். 2017-18ம் நிதியாண்டில் அவர் ரூ.12 கோடியே 17 லட்சம் கட்டியுள்ளார். இதை பீகார்- ஜார்க்கண்ட் மாநில வருமான வரித்துறை இணை கமிஷனர் நிஷாஒரான் தெரிவித்துள்ளார்.

டோனி 2013-14ம் ஆண்டில் இருந்து அதிக வருமான வரி செலுத்துபவராக இருக்கிறார். தொடர்ந்து 6-வது ஆண்டாக அவர் பீகார்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளார்.
பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த 37 வயதான டோனி போர்பஸ் வெளியிட்ட அதிக வருமானத்தை ஈட்டும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #MSDhoni #Incometax



இந்திய கிரிக்கெட் அணியில் நெடுங்காலமாக தோனி விக்கெட் கீப்பராக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு விருத்திமான் சாஹா, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனி விக்கெட் கீப்பராக கலக்கிக்கொண்டு வரும் நிலையில், கூடுதல் விக்கெட் கீப்பர்களை ஆடும் லெவனில் அணி நிர்வாகம் அதிகமாக களமிறக்குவது இல்லை. அடுத்தாண்டு நடக்க உள்ள உலகக்கோப்பை வரை தோனி விளையாடுவார் என்பதால், இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதான ஒன்றுதான்.
2019 ஆண்டுக்கு பின்னரும் தோனி விளையாடுவதும், ஓய்வு பெறுவதும் அவரது கையில் மட்டுமே உள்ளது. சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்தால், அவரை ஓரங்கட்டவும் முடியாது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை பார்க்கும் போது இந்திய அணியில் அவர்களுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்றே எண்ண தோன்றுகிறது.

முக்கியமாக டெல்லி அணியில் உள்ள ரிஷப் பாந்த். இதுவரை 577 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ள அவரின் ஸ்ட்ரைக் ரேட் 180 ஆகும். 20 வயதே ஆன அவரது ஆட்டம் அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக பஞ்சாப் வீரர் கேஎல் ராகுல் 537 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 163. கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 371 ரன்கள், ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் 353 ரன்கள், மும்பை வீரர் கிஷான் 238 ரன்கள் எடுத்துள்ளனர்.
சஞ்சு சாம்சன் கடந்த சில ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அவருக்கு அணியில் இடம் கிடைத்த பாடில்லை. தற்போது, பாந்த், ராகுல், கிஷான் என இளம் வீரர்களின் செயல்பாடுகள் திருப்தி அளித்தாலும், அவர்கள் அனைவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைப்பதும் சாத்தியமில்லை.

கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்தினாலும், அடுத்து வரும் தொடர்களிலும் அவர்களது இடம் கேள்விக்குறியானது தான். எனினும், இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், அப்போது தான் எதிர்காலத்தில் அணி சிறப்பான ஒன்றாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.