search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jersey"

    • கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
    • அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை.

    அந்த வகையில் கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

    அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் தினனுரி இயக்கி வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கவுதம் தினனுரி இதற்கு முன் நானி நடிப்பில் வெளிவந்த ஜெர்ஸி திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆக்ஷன் காட்சிகளுக்கு பெயர் போன அன்பறிவு மாஸ்டர் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளை கையாளுகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இந்த படம் கைதி படத்தை போல் பாடல்களே இல்லாத படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. விறுவிறுப்பான இந்த கதைக்கு பாடல்கள் தேவைப் படாததால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் அனிருத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆர்சிபி அணியின் ஏற்கனவே தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் அவர்களது 2-வது ஜெர்சியை இன்று அறிமுகப்படுத்தியது.
    • 2011-ம் ஆண்டு ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளமறுநாள் தொடங்க உள்ளது. 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. ஒவ்வோரு அணியும் ஜெர்சி தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து அணியும் தங்களது வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவையும் அவ்வது பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஏற்கனவே தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் அவர்களது 2-வது ஜெர்சியை இன்று அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமல்லாம அதற்கான உபகரணங்களும் அணி வீரர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் இப்போ வரையும் சில போட்டிகளில் பச்சை நிற ஜெர்சியுடன் விளையாடுவதை வழக்கமாக ஆர்சிபி அணி கொண்டுள்ளது.

    2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.

    • 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றது.
    • உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    நியூயார்க்:

    கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3-வது உலகக்கோப்பையை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    இந்த உலகக்கோப்பை தொடரின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா அணியின் 6 ஜெர்சிகள் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.65 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. ஒரு வீரருக்கு சொந்தமான ஒரு பொருள் அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை என ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த 6 ஜெர்சிகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சியும் இடம்பெற்று இருந்ததால் இவ்வளவு பெரிய தொகைக்கு அவை விற்பனையாகி உள்ளதாக ஏலத்தை நடத்திய நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது
    • கோலி தருவதை அசாம் மகிழ்ச்சியுடன் பெறும் காட்சிகள் வைரலானது

    சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் (ICC) 2023 வருட ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே இத்தொடரின் போட்டி நடைபெற்றது.

    முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    கடந்த 7 ஆண்டுகளாக ஐசிசி ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. இம்முறையும் வெற்றி பெற்றதை அடுத்து 8-வது முறையாக இந்த பெருமையை இந்தியா தக்க வைத்து கொண்டுள்ளது.

    பாகிஸ்தான் தோல்வியுற்றதால் அந்நாட்டில் இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆடிய விதத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

    நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய அணி வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு தனது கையொப்பமிட்ட இந்திய அணி டி-ஷர்டுகளை (jersey) பரிசாக அளித்தார். அவற்றை மகிழ்ச்சியுடன் பாபர் அசாம் பெற்று கொண்டார்.

    இக்காட்சிகள் தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அசாமின் இந்த செய்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கூறியதாவது:

    பாகிஸ்தான் அணியினரின் தோல்வியில் பாகிஸ்தான் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் பாபர் அசாம், கோலியிடமிருந்து டி-ஷர்ட் வாங்குவதை தொலைக்காட்சி சேனல்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின. தோல்வியில் மக்கள் வருந்தும் போது, பாபர் அசாம் இவ்வாறு செய்தது தவறு. அவர் இதை செய்திருக்க கூடாது. தனது உறவினர் மகனுக்காக கோலியிடம் டி-ஷர்ட்கள் வாங்க பாபர் நினைத்திருந்தால் கூட கேமிராக்களின் பார்வையில் படாமல் தங்கள் அறைக்கு சென்ற பிறகு அவரை தனியே சந்தித்து வாங்கியிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இரு நாட்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டு போட்டியில் வெல்வதும் தோற்பதும் இயல்பான சம்பவங்கள் என்றும் இரு அணி வீரர்களின் நட்பான பரிமாற்றங்கள், போட்டியை போட்டியாக பார்க்கும் மனப்பக்குவம் மக்களிடம் வளர வளர இது போன்ற செயல்கள் சரியாக புரிந்து கொள்ளப்படும் என இச்சம்பவம் குறித்து உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
    • அடிடாஸ் நிறுவனம் இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை வடிவமைத்துள்ளது.

    இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ம் தேதி சென்னையில் மோதுகிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை வடிவமைத்துள்ளது.

    இந்திய அணியின் புதிய ஜெர்சியின் அறிமுக வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டது.

    • இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி 20 ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.
    • மொகாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணி புது சீருடையுடன் களமிறங்குகிறது.

    மும்பை:

    8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    இத்தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ம் தேதி மொகாலியில் தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பி.சி.சி.ஐ. இன்று அறிமுகம் செய்துள்ளது. மொகாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது இந்திய அணி இந்த புதிய சீருடையுடன் களம் இறங்குவார்கள்.

    ஸ்கை புளு நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த புதிய ஜெர்சியை இந்திய வீரர் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா ஆகியோர் அணிந்திருக்கும் புகைப்படத்தை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.

    ×