என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல்"
- அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்.
- எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.
சென்னை:
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மோகித் சர்மா, இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 120 போட்டிகளில் விளையாடி 134 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் மோகித் சர்மா விளையாடியுள்ளார்.
ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மோகித் சர்மா,
இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். அரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் இந்திய ஜெர்சியை அணிந்தது மற்றும் ஐபிஎல்-ல் விளையாடியது வரை, இந்த பயணம் எனக்குக் கிடைத்த ஒரு ஆசீர்வாதம். எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார்.
- ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.
- மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த மினி ஏலத்தில் 10 அணிகள் சேர்ந்து 77 பேரை ஏலத்தில் எடுக்கலாம். அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், சென்னை அணியிடம் ரூ.43.40 கோடி பணமும் உள்ளது.
இந்த நிலையில், ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஆண்ட்ரே ரசல், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லாததால் மேகரூன் கிரீனுக்கு பல அணிகள் போட்டி போட வாய்ப்பு உள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிஷோர் தனது மனைவி அபிராமி, தங்கை மகளுடன் வாழ்ந்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கிஷோர், சிறு பிரச்சனையில் வேலையை விட்டு சொந்தமாக கார் வாங்கி கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். ஃபுட் டெலிவரி செய்து வரும் டிடிஎஃப் வாசன், கிஷோரின் தங்கை மகளை காதலித்து வருகிறார்.
ஒரு நாள் கிஷோருக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபடுகிறது. இதிலிருந்து கார் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதே சமயம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் போஸ் வெங்கட், லாக்கப்பில் ஒருவரை அடித்து கொன்று விடுகிறார். இந்த பழியை கிஷோர் மீது சுமத்தி அவரை சிக்க வைக்கிறார்.
இறுதியில் லாக்கப் டெத் கொலை வழக்கில் இருந்து கிஷோர் மீண்டாரா? கிஷோரை சிக்க வைக்க காரணம் என்ன? டிடிஎஃப் வாசன் கிஷோருக்கு உதவினாரா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பத்தினருடன் சந்தோஷமாகவும், குடும்ப கஷ்டத்திற்காக வருந்துவது, அடிவாங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். பொறுப்பான குடும்பத் தலைவியாகவும், கணவருக்காக வருந்தும் இடத்திலும் அபிராமி நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய டிடிஎஃப் வாசனுக்கு நடிப்புத்திறனை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியான போஸ் வெங்கட், கிஷோரின் நண்பர் சிங்கம்புலி, முதலமைச்சர் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
லாக்கப் டெத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கருணாநிதி. முதல் பாதி திரைக்கதை புரியாமலும் இரண்டாம் பாதி திரைக்கதை மெதுவாகவும் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம். அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இசை
அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணிசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
பிச்சுமணியின் ஒளிப்பதிவை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
ரேட்டிங்- 2.5/5
- ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மும்பை:
19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியை வின்பனை செய்ய இருப்பதை அதன் உரிமையாளரான டியாஜியோ உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் பெங்களூரு அணியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.
இது தொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரரான ஹர்ஷா கோயங்கா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணியை தொடர்ந்து மேலும் ஒரு அணி விற்பனைக்கு வர உள்ளதாக கேள்விப்பட்டேன். அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகும். எனவே விற்பனைக்கு 2 அணிகள் உள்ளன. அதை வாங்குவது புனே, அகமதாபாத், மும்பை, பெங்களூரு அல்லது அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? என்று தெரிவித்து உள்ளார்.
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
- சாம் கரணை தமிழ்நாட்டு ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர்.
- அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சாம் கரண் விளையாடவுள்ளார்
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வீரரான சாம் கரண் தனது நீண்ட நாள் காதலி இசபெல்லா கிரேஸிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ப்ரொபோஸ் செய்தார். இசபெல்லாவும் இதனை ஏற்றுக்கொண்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
ப்ரொபோஸ் செய்த புகைப்படங்களை சாம் கரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் விளையாடிய காலத்தில் அவரை தமிழ்நாட்டு ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர். இந்நிலையில் டிரேட் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்கியதற்காக ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் அணிக்கு சென்னை வழங்கியுள்ளது.
இதனால் அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சாம் கரண் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியது.
- அவருக்கு பதிலாக ஜடேஜா, சாம் கரனை விட்டுக்கொடுத்தது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
மேலும் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக பரிமாற்றம் (டிரேடிங்) மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக அந்த அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா (ரூ.14 கோடி), சாம் கர்ரன் (ரூ.2.4 கோடி) ஆகியோரை விட்டுக்கொடுத்துள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கேவில் தோனியுடன் நேரம் செலவிடப் போவதை யோசிச்சாலே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
மேலும் "தோனியுடன் உரையாட, உணவு சாப்பிட, பயிற்சி மேற்கொள்ள மிகவும் ஆவலாக நான் காத்திருக்கிறேன். யோசிச்சாலே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு எனவும் கூறினார்.
- கடல் போன்ற மஞ்சள் படை தோனியின் பெயரை உச்சரிக்கும்.
- எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது.
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.
அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை மைதானத்தில் தோனி நுழைந்தால் மைதானமே அதிரும் என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ ரூட், "ஐபிஎல் போட்டியின் போது, சென்னையில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மைதானம் குலுங்குவது போலவும், அதிர்வது போலவும் உணர்வீர்கள். அரங்கமே அதிர்வுறும். கடல் போன்ற மஞ்சள் படை அவரது பெயரை உச்சரிக்கும். எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது. என்ன ஒரு அனுபவம் அது" என்று தெரிவித்தார்.
- ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.
- கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது
நேர்காணல் ஒன்றில் ஐபிஎல் கேப்டன்சி குறித்து கேஎல் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "10 மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்படும் களைப்பை விட 2 மாதம் ஐபிஎல் விளையாடுவதில் அதிகமாக சோர்வடைந்தேன்.
ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அளவுக்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. அணியில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது, அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை. எதிர் அணியினர் 3 ஸ்பின்னர்களுடன் ஆடுகிறார்களே நீங்கள் ஏன் ஆடவில்லை. எதிர் அணியால் மட்டும் எப்படி 200 அடிக்க முடிந்தது, உங்களால் ஏன் அடிக்க முடியவில்லை? ஒரே மைதானத்தில் எதிர் அணியின் ஸ்பின்னர்கள் எப்படி நன்றாக ஸ்விங் செய்கின்றனர், உங்களால் ஏன் முடியவில்லை.. இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.
இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க முடியாது அல்லவா? இதற்கு பதில் அளிக்க தான் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் இதற்கு பதில் அளிக்க முடியாது. அணியில் அனைத்துமே சரியாக இருந்தாலும் உங்களால் வெற்றியை பெறமுடியாது, அதுதான் விளையாட்டின் தன்மை. என்ன செய்வது, கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது" என்று வேதனையுடன் தெரிவித்தார் .
லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை விமர்சித்து தான் கே.எல்.ராகுல் இவ்வாறு பேசியுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை இந்தாண்டு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- TTF வாசன் நடித்துள்ள ஐபிஎல் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
- இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர்- TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஐபிஎல்".
பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஐபிஎல் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய TTF வாசன், "தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது போன்ற அரசியல் ஆசை இல்லை. நடிகர் விஜயுடன் என்னை ஒப்பீடு செய்ய வேண்டாம், இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர்- TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஐபிஎல்".
பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில்," நாயகன் டிடிஎஃப் வாசன் என்னிடம் என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். அவரிடம் எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும். வாய்ப்புகள் வரும் போதும், வாய்ப்புகள் வழங்கும் போதும் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களை காப்பாற்றும்" என்றார்.
- தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
- தோனி இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.
அவர் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்குவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் எம்.எஸ். தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு தோனி கேக் கொடுக்கும் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நம் தலைவன் தலைவிக்கு பிறந்தநாள் விசில்கள் என தலைப்பிட்டுள்ளது.
- கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
- தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






