என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jallikattu"
- பாரம்பரிய விளையாட்டுகளை தடுப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன.
- பாரம்பரிய விளையாட்டு முதல் முறையாக பெங்களூருவில் நடைபெறுகிறது.
பெங்களூரு தெற்கு பாராளுமன்ற உறுப்பினரும், பா.ஜ.க. யுவா மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா சனாதன தர்மத்தை காப்பாற்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை தடுப்பதை குறிக்கோளாக கொண்டு சில அமைப்புகள் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கேரளாவின் கசர்கோட் மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான கம்பாளா முதல் முறையாக பெங்களூருவில் நடைபெறுகிறது. இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "இன்று பல அமைப்புகள் வெவ்வேறு குறிக்கோளுடன் நீதிமன்றத்தை நாடி, நமது பாரம்பிரய விளையாட்டு போட்டிகளான ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாளாவை தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களின் வேறுபாடுகளை கலைந்து நமது பாராம்பரிய கொண்டாட்டங்களான ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாளாவை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். இந்த விளையாட்டுக்களை காப்பாற்றினால் தான் சனாதன தர்மத்தையும் நம்மால் காப்பாற்ற முடியும்," என்று தெரிவித்தார்.
- மேளதாளம் முழங்க வாகனத்தில் இறந்த கோவில் காளை எடுத்து செல்லப்பட்டு கோவில் மந்தை அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
- கிராமத்திற்கு பெருமை சேர்த்த கோவில்காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட நல்லகண்டம் சின்ன அய்யனார்சுவாமி கோவில் ஜல்லிக்கட்டு காளை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. அதற்கு கிராம மக்கள் ஒன்றுகூடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நல்லகண்டம் கோவில்மாடு கிராமத்தின் சார்பாக ஜல்லிக்கட்டுகாளையாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த காளைக்கு வயது 22. அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை, கொசவபட்டி, தவசிமடை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று தங்கம், வெள்ளி, காசுகள் மற்றும் பல்வேறு பரிசுகளையும் பெற்று வீரர்களுக்கு சவால் விட்டு பெயர், புகழ் பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்து தந்தது.
கோவில் காளை உடல்நிலை குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து சின்ன அய்யனார் கோவில் காளைக்கு சிறுகுடி ஊராட்சி சுற்றுவட்டார கிராமமக்கள் ஒன்றுகூடி வேஷ்டி, துண்டுகள், மாலைகள் அணிவித்து சந்தனம் பூசி இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க வாகனத்தில் இறந்த கோவில் காளை எடுத்து செல்லப்பட்டு கோவில் மந்தை அருகில் அடக்கம் செய்யப்பட்டது. கிராமத்திற்கு பெருமை சேர்த்த கோவில்காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
- ஜல்லிக்கட்டு காளை வளர்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்ககக் கோரி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளிக்கப்பட்டது
- ஜல்லிகட்டு காளையுடன் வந்து மனு அளித்தனர்
அரியலூர்,
ஜல்லிக்கட்டு காளை வளர்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்ககக் கோரி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், தஞ்சை ருத்ரன் ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளப்படி, ஜல்லிக்கட்டு காளை வளர்போருக்கு மாதம் ஆயிரம் வழங்க வேண்டும். மாடு பிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் காளைகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக காளைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர்களை, நுழைவு வாயிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி மனு அளிக்க 5 பேருக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
- இந்த விளையாட்டுகள் விலங்குகளுக்கு சொல்லொணா துன்பம் மற்றும் வேதனையை ஏற்படுத்துவதாக புகார்.
- விரிவான உண்மை மற்றும் அறிவியல் ரீதியான ஆவணங்களில் எந்தப் பகுதியையும் இந்த தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை.
புதுடெல்லி:
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஆதரவாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடந்த பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது.
ஆனால், ஜல்லிக்கட்டை தடை செய்யும் குறிக்கோளுடன் இருந்த பீட்டா, உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகள் சித்ரவதை செய்யப்படுவதாக கூறி வழக்கு தொடர்ந்தது. ஆனால் பீட்டாவுக்கு இவ்வழக்கில் பின்னடைவே ஏற்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 18-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்தும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதே போன்று மகாராஷ்டிராவில் மாட்டு வண்டி பந்தயம், கர்நாடகாவில் எருமை பந்தய விளையாட்டான கம்பாலா ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கும் சட்டங்களும் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் மே மாதம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பீட்டா அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற விளையாட்டுகள் காளைகள் மற்றும் எருமைகளின் இயற்கையான உள்ளுணர்வு மற்றும் உடற்கூறியலுக்கு எதிரானவை, அவை எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. இந்த விளையாட்டுகள் விலங்குகளுக்கு சொல்லொணா துன்பம் மற்றும் வேதனையை ஏற்படுத்துகின்றன.
ஜல்லிக்கட்டு, கம்பாலா மற்றும் மாட்டு வண்டி பந்தயங்கள் இயல்பிலேயே கொடூரமானவை. குற்றம்சாட்டப்பட்ட அம்சங்கள் தொடர்பாக திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட அந்த கொடுமைகள் தொடர்கின்றன. இதுதொடர்பான விரிவான உண்மை மற்றும் அறிவியல் ரீதியான ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்தப் பகுதியையும் இந்த தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றம் சட்டத்தின் கடுமையான பிழையைச் செய்துவிட்டது.
இவ்வாறு பீட்டா தனது மனுவில் தெரிவித்துள்ளது.
- தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும். பணிகள் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து 4-வது முறையாக மைதான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.
இதுவரை 35 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது. தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது மைதான நுழைவு வாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, செயற்கை புல் தரை, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, வீரர்கள், உரிமையாளர்கள் ஓய்வு ஆறை, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பிட்ட நாளில் பணிகள் நிச்சயம் முடிவு பெறும். மைதானத்திற்கு விரைந்து வர புதிதாக சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடையிடையே பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளும் முழுமையாக முடிவு பெற்ற பின்னரே இந்த மைதானம் திறக்கப்படும். புதிய சாலை அமைக்கும்போது தனியார் நிலங்களும் கையகப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது.
வழக்கம் போல் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் ஆங்காங்கே வழக்கம்போல் நடக்கும். தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசை மக்கள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
- ஜல்லிக்கட்டு காளைக்காக உறவினர்கள் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலையுண்ட தமிழரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ராம்ஜிநகர்:
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பூவாளூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 50). இவர் தற்போது தனது மனைவி லட்சுமியின் சொந்த ஊரான திருச்சியை அடுத்த புங்கனூர் கிராமத்தில் கீழத்தெருவில் வசித்து வந்தார்.
ராம்ஜிநகரில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த அவர் தற்போது ரேசன் கடையில் தற்காலிக ஊழியராக இருந்தார். அதுமட்டுமின்றி கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார்.
இவர்களுக்கு பிரசாந்த் (27) என்ற மகன் உள்ளார். ஜல்லிக்கட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரசாந்த் ஜல்லிக்கட்டு காளையும் வளர்த்து வருகிறார். இதேபோல் அவர்களது உறவினர்களான புங்கனூர் மேலத்தெருவை சேர்ந்த முத்துவீரன் மகன்கள் சரத் குமார் (26), ரஞ்சித் (24) ஆகியோரும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று இரவு 10 மணி அளவில் புங்கனூர் அல்லித்துறை மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு பிரசாந்த் தனது தந்தை தமிழரசனுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்களான சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரும் பிரசாந்தை பார்த்து நீ என்ன ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறாய்? உனது காளை ஆட்டுக்குட்டி போல உள்ளது. உனது மாட்டை எளிமையாக அடக்கி விடுவோம் என்று கேலி, கிண்டலாக பேசியுள்ளனர்.
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பிரசாந்த் அவர்களை கடுமையாக கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனை தடுக்க வந்த தமிழரசனுக்கு நெஞ்சில் பலத்த அடி விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்து விழுந்தார்.
உடனடியாக அவரை மகன் பிரசாந்த் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழரசன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரசாந்த் மற்றும் பூவாளூரை சேர்ந்த அறிவழகன் ஆகியோர் சோமரசம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். மேலும் கொலையுண்ட தமிழரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணை மேற்கொண்டு சகோதரர்களான சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு காளைக்காக உறவினர்கள் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது.
- சேலம், நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது. இதில் சேலம், நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 300 மாடு பிடி வீரர்கள் களமிறங்கினர். இதில் 25 பேர் காயமடைந்தனர்.
காளைகளை அடக்கி வெற்றி வாகை சூடிய மாடு பிடி வீரர்களுக்கும், பிடி படாது சீறிப்பாய்ந்த காளை களின் உரிமையாளர்க ளுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. வாழப்பாடி தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியாபுரம் மாதேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.
சேலம் ஆர்.டி.ஓ மாறன், சேலம் போலீஸ் எஸ்.பி சிவக்குமார், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கரி, காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் ஜல்லிக்கட்டை கண்காணித்தனர். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவ குழுவினர் காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று மிகுந்த ஆரவா ரத்தோடு ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர்.
- பெரும்பாலான காளைகளை அடக்கி, தங்களது பலத்தை களத்தில் நிரூபித்து பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர் காளையர்கள்.
- சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டின.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உலிபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியினை ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, ஆத்தூர் டி.எஸ்.பி நாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஜல்லிக்கட்டில் ஆத்தூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி, கெங்கவல்லி, மல்லியக்கரை, வீரகனூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், வேலூர், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 460 காளைகள் பங்கு பெற்றது. மேலும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு அரசு மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் கால்நடை மருத்துவர்களும் காளைகளை பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்ட பிறகு மைதானத்துக்குள் இறங்க அனுமதிக்கப்பட்டனர். முதலில், வாடிவாசலில் இருந்து ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் வாடிவாசலில் இருந்து களத்துக்குள் இறங்கின. ஜல்லிக்கட்டு காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். சீறிப்பாய்ந்து வந்த சில முரட்டு காளைகளை கண்டு மாடுபிடி வீரர்கள் மிரண்டு ஓடினர். திமிலை உயர்த்தி திமிராய் சில காளைகள் களத்தில் நின்று விளையாடின.
பெரும்பாலான காளைகளை அடக்கி, தங்களது பலத்தை களத்தில் நிரூபித்து பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர் காளையர்கள். அதேநேரத்தில் சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டின.
அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கும் குக்கர், சேர், நான்ஸ்டிக் தவா, வெள்ளி நாணயம், ரொக்க பரிசு மற்றும் சிறந்த காளைகளுக்கு சிறப்பு பரிசு, மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
உலிபுரம், தம்மம்பட்டி, ஆத்தூர் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டை பார்த்தனர்.
- ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
- ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் வலியுறுத்தினர்.
மதுரை
திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சமீபத்தில் உயிரிழந்த பேரவையின் தலைவர் ஜி.ஆர். ஜெயகார்த்தியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை என அறிவித்த உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு உரிமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் போது வருவாய் துறையினர்கள் மாடு வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் புதிய தலைவராக ராமமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகிகள் பிரகாஷ், மணி, மார்க்கெட் ராமமூர்த்தி, கோபால், சோனைமுத்து உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.