என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜல்லிக்கட்டில் வீரர் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதி உதவி- எடப்பாடி பழனிசாமி
- ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
- ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு அரசு செலவில் இன்சூரன்ஸ் செய்து தரப்படும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தபின் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு அரசு செலவில் இன்சூரன்ஸ் செய்து தரப்படும் என்றார்.
முன்னதாக, அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், அதிக காளைகளை பிடித்து சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






