என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
- மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதன் சுற்றில் மஞ்சள் நிற ஆடையுடன் மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர்.
- சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண இன்று காலை 10 மணி அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம்காணும் காளைகள், மாடுபிடி வீரர்கள் முழு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதன் சுற்றில் மஞ்சள் நிற ஆடையுடன் மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.






