search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin"

    • மத்திய பாஜகவின் ஆஸ்தான அடிமை இபிஎஸ்-ஆல் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
    • தந்தை பெரியாரின் மண்ணில் பெற்றிருக்கும் மாபெரும் இந்த வெற்றியை, 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி உரையாற்றிானர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மிக மிக முக்கியமான நாளில் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

    கிட்டத்தட்ட 1 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் பெற்று, 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுந்தர குமார் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்.

    அந்த சூழலில் வெற்றியோடு இந்த கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எந்த அளவுக்கு ஒரு பயனற்ற பழிவாங்குகின்ற ஒரு யூஸ்லெஸ் பட்ஜெட்.

    அப்படி ஒரு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு பட்ஜெட்டை வாசித்திருக்கிறார்கள்.

    அதில், தமிழ்நாட்டிற்கென ஒரு திட்டத்தை கூட அவர் அறிவிக்கவில்லை. திட்டம் மட்டும் இல்லை தமிழ்நாடு என்கிற வார்த்தையை ஒரு முறை கூட அவர் பயன்படுத்தவில்லை.

    அந்த அளவிற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாடு மீது பாசம். ஆனால், இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்ற பீகார் மாநிலத்திற்கு பட்ஜெட்டில் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள்.

    பிற மாநிலங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், அங்கு தேர்தல் வர இருக்கின்ற ஒரே காரணத்திற்காக அதை மனதில் வைத்துக் கொண்டு அம்மாநிலத்திற்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். பீகார் மாநிலத்திற்கு மட்டும் பல்லாயிர கோடி கணக்கில் நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள்.

    இது பீகார் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக போட்ட பட்ஜெட் மாதிரி தெரியவில்லை. பீகார் மாநிலத்தில் தன் கூட இருக்கிற நிதிஷ் குமாரின் கூட்டணியை உடைத்துவிட்டு அவரின் காலை வாரிவிட்டு அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் என்கிற ஒரே திட்டத்தோடு போட்டிற்கிற பட்ஜெட் இது.

    ஏன் என்றால் பாஜகவின் வரலாறு அப்படி.

    மத்திய பாஜகவின் ஆஸ்தான அடிமை இபிஎஸ்-ஆல் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

    ஈரோடு கிழக்கில் பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசின் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்துகிறது.

    தந்தை பெரியாரின் மண்ணில் பெற்றிருக்கும் மாபெரும் இந்த வெற்றியை, 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
    • தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    சென்னை கலைவாணர் அரங்கில் குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்ற என்சிசி மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு,

    * சென்னையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.

    இது பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண் தான் என்று சீமான் பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர், "சீமானுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை" என்று கூறினார்.

    • 2025-ன் சாம்பியனாக உருவெடுத்த பிரக்ஞானந்தா வெற்றியானது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது.
    • பிரக்ஞானந்தா உடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்துகள்.

    நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷ்-ஐ எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார்.

    தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

    டாடா ஸ்டீல்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    2025-ன் சாம்பியனாக உருவெடுத்த பிரக்ஞானந்தா வெற்றியானது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது. இத்தகைய மதிப்புமிக்க நிகழ்வில் பெற்ற வெற்றி அவருடைய திறமை மற்றும் உறுதிப்பாட்டின் உண்மையான பிரதிபலிப்பாகும்.

    பிரக்ஞானந்தா உடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்துகள்.

    இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்ட வீரர்களாக இருப்பதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. அவர்களின் வெற்றியால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவர்களின் வாழ்க்கையில் பல வெற்றிகளை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்!
    • எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்!

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை!

    உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்!

    எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்!

    ஜனநாயக வழியில் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று உலக அரசியல் ஆராய்ச்சியாளர்களின் புருவம் உயர்த்தியப் பேரறிஞர்!

    தி.மு.கழகம் என்னும் அசைக்க முடியாத ஆலமரத்தின் ஆணிவேர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாள் இன்று!

     

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அவர் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.

    அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்! என்று கூறி உள்ளார்.

    • திருச்சி மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா இன்று தொடங்கியது.
    • இந்நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது ஆண்டு வைர விழா மற்றும் பெருந்திரள் பேரணி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட சாரணர் இயக்கத்தினர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், திருச்சி மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிப்காட் வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்தும் சாரணர் இயக்கத்தினர் வருகை தந்துள்ளனர்.

    • வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.

    சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த இந்த மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.

    உதயநிதியின் பேச்சை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கவும், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் மனுக்களில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதுகுறித்து தமிழக அரசு கூறுகையில், " துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

    சனாதன பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய 3 ரிட் மனுக்களையும் மனுதாரர்கள் திரும்பப் பெற்றனர்.

    இது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி" என்று தெரிவித்துள்ளது.

    • வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.

    சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.

    உதயநிதியின் பேச்சை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கவும், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் மனுக்களில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்று நள்ளிரவே தமிழக வீராங்கனைகளை டெல்லி அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழக வீராங்கனைகள் டெல்லியில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தின் 36 வீராங்கனைகள் உட்பட 42 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய கபடி போட்டியில் பங்கேற்க பஞ்சாப் சென்றுள்ளனர்.

    போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், தமிழக பயிற்சியாளர் பாண்டியன் மீது பீகார் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட செய்தி அறிந்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம். தமிழக மாணவிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்.

    இன்று நள்ளிரவே தமிழக வீராங்கனைகளை டெல்லி அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக வீராங்கனைகள் டெல்லியில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வெளிமாநிலம் செல்லும் தமிழக விளையாட்டு வீராங்கனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

    மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தமிழக வீராங்னைகளை உடனடியாக பாதுகாத்தோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சீட் குறைந்தாலும் மு.க. ஸ்டாலின்தான் ஆட்சி அமைப்பார்.
    • முக்கியமாக புகழ்ந்து பேசுபவர்களை அருகில் வைத்து கொள்ளாதீர்கள்.

    கேரள மாநிலம் ஸ்ரீசூரிய மங்கலம் ஸ்ரீ பகளா முகி தேவி கோவில் குருஜி ஜோதிடப்படி 2026-ல் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்று கணித்து கூறியிருக்கிறார். அதை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரபலமான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஜாதகங்களை சேர்த்து அஷ்டமங்கள பிரசன்னமும் பார்த்த பலன்களைத்தான் சொல்கிறேன்.

    தி.மு.க. ஜாதகப்படி 2026 அக்டோபர் மாதம் வரை சுக்கிர திசை நடக்கிறது. சுக்கிரன் லக்னத்தோடு 11-ம் இடத்தில் இருக்கிறது. ஆட்சி எப்படி கையில் வந்தது என்றால் 2021 மே மாதத்தில் சனி புத்திகாலமாக இருந்தது. அதுவும் சுக்கிரனோடு 11-ம் இடத்தில் இருந்ததால் அதிகமான சீட் வாங்கி ஆட்சி அமைக்க முடிந்தது.

    2025 ஆகஸ்டு முதல் 2026 அக்டோபர் மாதம் வரைக்கும் சுக்கிர திசை காலத்தில் கேது புத்திகாலமாகும். தசாநாதனோடு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் இருக்கிறது. சனி பார்வை, செவ்வாய் பார்வை உள்ளது.

    கேது புத்தி காலத்தில் தேர்தல் வருவதால் நிச்சயமாக மறுபடியும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். ஆனால் சீட் குறையும். கூட்டணியில் சில கட்சிகள் வெளியே போகும். சில கட்சிகள் உள்ளே வரும்.



    சீட் குறைந்தாலும் மு.க. ஸ்டாலின்தான் ஆட்சி அமைப்பார். அந்த ஆட்சி காலம் முடிவதற்குள் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

    அ.தி.மு.க.வுக்கு சனி திசை காலம் நடக்கிறது. 6-ல் இருக்கும் சனி அவ்வளவு நல்லதல்ல. அதுமட்டுமல்ல மேடையில் ஏறி தலைவர்களெல்லாம் ஜெயலலிதா அம்மையாரை கடவுளுக்கு மேலாக புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் அந்த அம்மையாரின் ஆத்ம சாந்திக்கு ஏதாவது செய்தார்களா? கஷ்டமல்லவா? கட்சி இப்போதும் ஒவ்வொரு நாளும் சீரழிந்து கொண்டு தான் வருகிறது.

    அதற்கு காரணம் அந்த அம்மையாரின் ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கவில்லை. இன்னமும் அந்த ஆத்மா அலைந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் மறைந்த பிறகு ஆட்சிக்கு வந்ததும் சாஸ்திர விதிப்படி அதை முதலில் செய்து இருக்க வேண்டும்.

    அம்மையார் ஆஸ்பத்திரியில் இருந்தபோது கோவில் கோவிலாக சென்றார்கள். ரோட்டில் வைத்து கூட ஹோமம் நடத்தினார்கள். அதெல்லாம் நாடகம்தான். அதனால் எந்த பலனும் கிடைக்காது. சாஸ்திர விதிப்படி, ஆத்ம சாந்தி நடத்தினால்தான் கட்சியில் ஒற்றுமை ஏற்படும்.

    அதில்லாமல் இப்போது நாங்கள் ஆட்சிக்கு வரலாம். தி.மு.க.வை கீழே இறக்கலாம் என்று நினைத்தால் எதுவும் நடக்காது. தி.மு.க.வுக்கும் கேது புத்தி நல்லதல்ல. ஆனால் அ.தி.மு.க. பலவீனமாக உள்ளது. அஷ்ட பிரசன்னபடியும் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். ஆனால் சீட் குறையும் அவ்வளவுதான்.

    அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலக்கத்தில் சீட்டுக்கு மேலாக போகாது. ஆத்ம சாந்தி செய்துவிட்டு இப்போது இருக்கும் தலைமையின் மைனசை மாற்ற வேண்டும். ஆனாலும் ஆட்சிக்கு வர முடியாது. சீட் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.

    என்ன மாதிரி கூட்டணி வைத்தாலும் மாற்றம் வராது. தி.மு.க.வினரை பார்த்து கடவுள் நம்பிக்கை கிடையாது என்கிறார்கள். நான் அதை நம்பவில்லை. அவர்களில் பலர் என்னிடம் வருகிறார்கள். பரிகாரங்கள் செய்கிறார்கள். எனவே தி.மு.க.காரர்களெல்லாம் நாத்திகர்கள் என்பதும் மூடத்தனம்தான்.

    மறுபடியும் நாங்கள் தான் என்ற அகங்காரம் கூடாது. முக்கியமாக புகழ்ந்து பேசுபவர்களை அருகில் வைத்து கொள்ளாதீர்கள். உங்கள் மைனசை எடுத்து சொல்பவர்களை அருகில் வைத்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபை தேர்தல் நேரத்தில் பொதுவாக ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சியில்தான் போய் சேர்வார்கள்
    • உங்களை பார்த்தால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரியத்தான் செய்யும்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3000-க்கும் மேற்பட்ட நா.த.க உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

    நீங்கள் கழகத்தின் கொள்கையை ஏற்று இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றீர்கள். தி.மு.க. இன்று 75-வது ஆண்டில் பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

    நீங்கள் வந்து விட்டீர்கள், ஆனால் உங்களைப்போல ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு சில தயக்கத்தோடு அங்கு இருப்பார்கள். அவர்களிடம் எடுத்துச்சொல்லி, அத்தனை பேரையும் கழகத்தில் இணைக்க வேண்டிய முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

    சட்டசபை தேர்தல் நேரத்தில் பொதுவாக ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சியில்தான் போய் சேர்வார்கள். ஆனால் வித்தியாசமாக இன்று எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சியில் சேர்ந்துள்ள உங்களுக்கு எதிர்வரும் தேர்தலின் முடிவு தெரிந்து இருக்கும்.

    உங்களை பார்த்தால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரியத்தான் செய்யும்.

    தமிழ்நாட்டின் அடையாளங்களை அழிக்க ஆளுநர் முயற்சி செய்கிறார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, தமிழ்த்தாய் வாழ்த்தை கொச்சைப்படுத்துவது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என்று சட்டசபையில் சொல்வது, சட்டசபையை புறக்கணித்து செல்வது இதுதான் அவருடைய வேலை என்று அவர் கூறினார்.

    • திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம்-தாமரைக்கண்ணன், மதுராந்தகம் தெற்கு ஒன்றியம்-தினேஷ்.
    • உத்தரமேரூர் ஒன்றியம்- யுவராஜ், காலவாக்கம் ஒன்றியம்-வெங்கட்ராமன், மதுராந்தகம் நகரம்-டாக்டர் முத்து முகமது புகாரி.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களை நியமித்துள்ளார்.

    காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்-கார்த்திகேயன், தெற்கு ஒன்றியம்-இளமது-வாலாஜா பாத் வடக்கு ஒன்றியம்-லோகுதாஸ்-தெற்கு ஒன்றியம்-குமரன், சித்தாமூர் கிழக்கு ஒன்றியம்-கண்ணன், மேற்கு ஒன்றியம்-லோகநாதன், லத்தூர் வடக்கு ஒன்றியம்-கார்த்திகேயன், தெற்கு ஒன்றியம்-தமிழ் மாறன்.

    திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம்-தாமரைக்கண்ணன், மதுராந்தகம் தெற்கு ஒன்றியம்-தினேஷ், வடக்கு ஒன்றியம்-லோகேஷ்குமார், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம்-சரத்குமார், தெற்கு ஒன்றியம்-பிரகாஷ்.

    உத்தரமேரூர் ஒன்றியம்- யுவராஜ், காலவாக்கம் ஒன்றியம்-வெங்கட்ராமன், மதுராந்தகம் நகரம்-டாக்டர் முத்து முகமது புகாரி, காஞ்சிபுரம் மாநகரம் பகுதி 1-சந்தீப்குமார், பகுதி 2-பார்த்திபன், பகுதி 3-அருள்பெருமாள் பகுதி 4-வேல்முருகன், வாலாஜாபாத் பேரூர்-சுகுமாரன், உத்தரமேரூர் பேரூர்-அன்புராஜா, கருங்குழி பேரூர்-கார்த்திகேயன், அச்சிறுப்பாக்கம் பேரூர்-சிவசங்கரன், இடைக்கழிநாடு பேரூர் முகமது ரிப்பாய்.

    • தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
    • அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை இந்தியா கூட்டணி உயர்த்தி பிடித்து வருகிறது.

    சென்னை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.

     

    தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். திராவிடவியல் அமர்வில் திராவிட இயக்கம் குறித்த கருத்தரங்கம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தான கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற சிறப்புரையாற்ற உள்ளார்.

    மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

    * தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்.

    * மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால், அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது.

    * ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை தகர்க்க மோடி அரசு முயற்சி செய்கிறது.

    * கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மையை சீர்குலைக்க பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர முயற்சி நடக்கிறது.

    * அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை இந்தியா கூட்டணி உயர்த்தி பிடித்து வருகிறது.

    * அரசியல் சட்டத்தின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் தி.மு.க. சட்டத்துறை மாநாட்டின் கருத்தரங்கு, கலந்துரையாடல் நடக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தி.மு.க. சட்டத்துறை மாநாட்டில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

    மாநாட்டில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரைஷி மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×