என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தை மாதத்துக்குள் பணி வழங்க ஆணை வெளியிட வேண்டும்- தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
- தி.மு.க. அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் அறிவிப்புகள் போல கானல் நீர் அறிவிப்புகளாக மாறிவிடக் கூடாது.
- காளைகளுக்கு சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பயிற்சி மையம்.
தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு, தி.மு.க. அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் அறிவிப்புகள் போல கானல் நீர் அறிவிப்புகளாக மாறிவிடக் கூடாது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026 தை மாதம் முடிவதற்குள் முதல் கட்டமாக இந்த ஆண்டின் சிறந்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி ஆணை பிறப்பிக்க வேண்டும்.
அலங்காநல்லூர் பகுதியில், காளைகளுக்கு சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் அறிவிப்புகளையும் உடனடியாக அறிவித்தபடி உண்மையுடன் நேர்மையுடன் செயல்படுத்த வேண்டும்.
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் வாக்கு வங்கி அரசியலுக்காக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததை இந்தாண்டு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






