என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

    • தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது

    அதே போல் பொங்கல் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்நிலையில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    இதையடுத்து பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×