என் மலர்
நீங்கள் தேடியது "ஷாருக் கான்"
- பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
- உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 'டெய்லர் ஸ்விப்ட் உள்ளார்.
இந்தியப் பணக்கார நடிகர்கள் பட்டியல் முதலிடம் பிடித்து வந்த ஷாருக்கான் முதல்முறையாக உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
The Hurun India வெளியிட்டுள்ள பட்டியலில் 1.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12,490 கோடி) சொத்து மதிப்புடன் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்
திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலகளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டவை ஷாருக் கானுக்கு சொந்தமானவை ஆகும்.
உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 'டெய்லர் ஸ்விப்ட்' 1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். ஜெர்ரி செய்ன்ஃபெல்ட் 1.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
பிரபல அமெரிக்க பாடகி செலினா கோமஸ் 720 மில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.
டாப் 5 இந்தியப் பணக்காரர்கள் பட்டியல்:
1. ஷாருக் கான் மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ.12,490 கோடி
2. ஜூஹி சாவ்லா மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ.7,790 கோடி
3. ஹிருத்திக் ரோஷன் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,160 கோடி
4. கரண் ஜோஹர் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,880 கோடி
5. அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தர் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி
- டெல்லியில் திரைப்பட தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
- விருதுகள் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதளித்து கவுரவித்தார்.
மும்பை:
தலைநகர் டெல்லியில் திரைப்பட தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விருதுகள் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதளித்து கவுரவித்தார்.
சிறந்த நடிகர் விருதை பாலிவுட் நடிகர் ஷாருக் கான் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தேசிய விருது பெற்றுக் கொண்டா ஷாருக் கானுக்கு அவரது மனைவி கவுரி கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கவுரி கான் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், என்ன ஒரு பயணம். தேசிய விருதை வென்றதற்கு வாழ்த்துக்கள். மிகவும் தகுதியானது.
இது உங்கள் பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகும்.
இந்த விருதை வைப்பதற்காக நான் ஒரு சிறப்பான இடத்தை வடிவமைத்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ஷாருக்கான் தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் தொடங்கினார்.
- 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மெஸ்ஸி ஆகியோர் வென்றனர்.
விருது அறிவிக்கப்பட்டவர்களு இன்று ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் வழங்கி கவுரவித்தார். ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மெஸ்ஸி ஆகியோர் ஜனாதிபதி கையில் விருதை பெற்றனர்.
ஷாருக்கான் தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை கொடுத்துள்ளது.
- கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது.
- திரைப்படம் 1148 கோடி ரூபாய் வசூலித்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஷாருக் கான் இரு வேடங்களில் நடித்திருப்பார். இவருடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, நயன்தாரா, பிரியாமணி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. திரைப்படம் 1148 கோடி ரூபாய் வசூலித்தது.
நேற்று 71-வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தனர் அதில் சிரந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் ஜவான் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். இதுவே அவர் வாங்கும் முதல் தேசிய விருதாகும்.
தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருகு தேசிய விருதை கொடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.
- ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
டைரக்டர் ஆகவேண்டும் என்பது மூத்த மகனின் கனவு அதற்காக தயாராகி வருகிறார். கடைசி மகன் பள்ளியில் படித்து வருகிறார். ஷாருக்கானின் மகள் சுகானா கான். அமெரிக்கா 'ஆக்டிங்' ஸ்கூலில் படித்துள்ளார்.
பதான் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார். இந்த படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுஜோய் கோஷால் இயக்குகிறார். இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிக்கிறது.
இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தந்தை மகள் ஆகிய இருவரும் படம் முழுவதும் நடிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு பணிகள் மும்பையில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில். அதிரடி ஆக்ஷன் காட்சி இன்று படமாக்கப்பட்டது. அதில் ஷாருக் கான் ஈடுபட்டார் அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றுள்ளனர்.
அவருக்கு தசை பிரண்டுள்ளது என கூறப்படுகிறது அதனால் 1 மாத காலம் அவர் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் ஆலோசனை அளித்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி, திஷா பதானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட் காலா 2025 ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் விதமாக ஆண்டுதோறும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் உலகெங்கிலும் உள்ள திரைப் பிரபலங்கள் இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர். வித்தியாசமான உடையில் தோன்றி கேரமா முன் போஸ் கொடுப்பதே இந்நிகழ்வின் சாராம்சம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.

ஸ்டைலான கருப்பு நிற உடையில், கழுத்தில் 'K' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பெரிய செயின் உடன் ஷாருக் கான் தனக்கே உரிய ஸ்டைலில் தோன்றினார்.

இந்த நிகழ்வில் சுவாரஸ்யமான சம்பவமாக, வெளிநாட்டு ஊடகங்கள் ஷாருக் கானை அடையாளம் காணத் தவறியுள்ளன. நிகழ்வில் ஒரு நிருபர் ஷாருக் கானிடம் நீங்கள் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர் சிரித்தவாறே, நான் தான் ஷாருக் கான் என்று கூறியுள்ளார். இந்த உரையாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ரசிகர்கள் கடவுள் அந்தஸ்தில் பார்க்கும் ஷாருக் கானை யார் என்று கேட்ட நபரை நெட்டிசன்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.
- அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சமீபத்தில் ஷாருக் கான் யார்? என கேட்டிருந்தார்.
- நேற்று அதிகாலை 2 மணிக்கு அவரை நடிகர் ஷாருக் கான் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
கவுகாத்தி:
நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். வரும் 25-ம் தேதி படம் திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது.
அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது. இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது.
இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் இந்து ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பதான் படம் திரையிடப்பட கூடாது என்று திரையரங்க நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றனர். இதேபோல், அசாமில் கவுகாத்தி நகரில் பதான் படம் வெளியாக கூடிய திரையரங்குகளுக்குள் புகுந்த பஜ்ரங் தள அமைப்பினர் போஸ்டர்களை கிழித்து, எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதுபற்றி அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஷாருக் கான் யார்? அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது பதான் படம் பற்றியும் எனக்கு தெரியாது என பதிலளித்து பேசினார்.
மாநில மக்கள் அசாமை பற்றி கவலைப்பட வேண்டும். இந்தி திரைப்படங்களை பற்றி அல்ல. ஷாருக் கான் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஒருவேளை அவர் என்னை தொடர்பு கொண்டால் அதுபற்றி விசாரிப்பேன். சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்பட்டு இருந்தால், வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை அசாம் முதல் மந்திரிக்கு தொலைபேசி மணி அழைப்பு வந்துள்ளது. அதனை எடுத்து பேசியபோது, மறுமுனையில் நடிகர் ஷாருக் கான் அவரிடம் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக, முதல் மந்திரி பிஸ்வா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் என்னை இன்று அதிகாலை 2 மணியளவில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது படம் திரையிடப்பட்டபோது, கவுகாத்தி நகரில் நடந்த சம்பவம் பற்றி வருத்தம் தெரிவித்துப் பேசினார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை என அவருக்கு உறுதி கூறினேன். இதுபற்றி நாங்கள் விசாரணை செய்து, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.
- ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன.
- இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார்.
இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான் சமீபத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கி இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் காரின் விலை ரூ. 8.2 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இவர் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் ஆர்க்டிக் வைட் நிறம் கொண்டிருக்கிறது.
இத்துடன் காரின் இண்டீரியர் முழுக்க ஆல்-வைட் லெதர் மற்றும் கோபால்டோ புளூ அக்செண்ட்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார். முன்னதாக ஐதராபாத்தை சேர்ந்த நசீர் கான் என்பவருக்கும், இரண்டாவதாக புவனேஷ்வரை சேர்ந்த நபருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் டெலிவரி செய்யப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன. ஸ்டாண்டர்டு கலினன் மாடலில் இருப்பதை விட பிளாக் பேட்ஜ் மாடலின் ஸ்பிரிட் ஆஃப் எக்டசி சின்னம் மற்றும் இரட்டை R பேட்ஜ் உள்ளிட்டவைகளில் டார்க் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று முன்புற கிரில் சரவுண்ட், பக்கவாட்டு ஃபிரேம் ஃபினிஷர்கள், பூட் ஹேண்டில், பூட் ட்ரிம், லோயர் ஏர் இண்டேக் ஃபினிஷர் மற்றும் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவைகளில் டார்கென்டு க்ரோம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி-இல் 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், காண்டிராஸ்ட் ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் உள்ளன.
கலினன் பிளாக் பேட்ஜ் மாடலிலும் 6.75 லிட்டர், டுவின் டர்போ வி12 எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் வழக்கமான கலினன் மாடலை விட 29 ஹெச்பி மற்றும் 50 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார்.
- கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன.
புதுடெல்லி:
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.
டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தார்.
கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன. இந்த பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற நபர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தம் பதிவான 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதான் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, ஷாருக்கான் வாசகர் வாக்கெடுப்பில் வெற்றியாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிங் கான் என அழைக்கப்படும் ஷாருக்கிற்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்
- டிசம்பர் 22, 2011 அன்று டான்-2 பட விளம்பரத்திற்காக பாட்னா வந்திருந்தார்
இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாருக் கான்.
ஷாருக் கதாநாயகனாக நடித்து, தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கி இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் இந்தி திரைப்படம், ஜவான். இப்படத்தை இந்தியாவிலும் உலகெங்கிலும் இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழி திரைப்பட ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சம்பந்தமான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பெருமளவில் மக்கள் திரளாக கூடி பாலிவுட் திரையுலகில் "கிங் கான்" என அழைக்கப்படும் ஷாருக்கை காண உற்சாகமாக கூடியிருக்கிறார்கள்.
ஆனால், ஆய்வில் இது தவறு என தெரிகிறது.
உண்மை என்னவென்றால், ஷாருக் கான் நடித்த டான்-2 எனும் திரைப்படம் டிசம்பர் 23, 2011 அன்று திரையரங்குகளில் வெளியானது.
அதற்கு முந்தைய நாள், டிசம்பர் 22, 2011 அன்று, அத்திரைப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிக்காக பீகார் தலைநகர் பாட்னாவிற்கு ஷாருக் வந்திருந்தார். அப்போது அவர் பாட்னாவின் முக்கிய குறியீட்டு இடங்களில் ஒன்றான பிஸ்கோமான் பவன் (Biscomaun Bhawan) அருகே உள்ள மவுர்யா ஓட்டலில் தங்கியிருந்தார்.
அவரை காண பெருமளவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். தனது ரசிகர்களை ஓட்டல் பால்கனியிலிருந்து கண்ட ஷாருக் அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ காட்சியில் மக்கள் வெள்ளத்திற்கு பின்னால் பிஸ்கோமான் பவன் தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இப்போது தவறுதலாக ஜவான் பட நிகழ்ச்சி எனும் பெயரில் வைரலாகி உள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கும், ஜவான் பட இசை வெளியீட்டு விழாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- பதானில் சல்மானும், டைகர்-3 படத்தில் ஷாருக்கும் கேமியோ செய்திருந்தனர்
- இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம் என்றார் சல்மான்
மும்பை திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் ஆமிர் கான், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான். இந்த 3 நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பது வழக்கம்.
அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் இவர்களின் திரைப்படங்கள் பல திரையரங்குகளில் வெளியாவதால் அவற்றின் வர்த்தக எல்லையும் பரந்து விரிந்துள்ளது. இதன் காரணமாக இவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள், இத்திரைப்படங்களில் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புகுத்த நினைக்கின்றனர்.
அதில் ஒன்றாக சமீப காலங்களாக சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் ஷாருக் கானும், ஷாருக் கான் கதாநாயகானாக நடிக்கும் திரைப்படங்களில் சல்மான் கானும், சில நிமிடங்களே திரையில் தோன்றும் கேமியோ (cameo) காட்சியில் தோன்றுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் வெளியான ஷாருக் கான் நடித்து திரைக்கு வந்த "பதான்" திரைப்படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதே போல், நவம்பர் மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சல்மான் கான் நடித்த "டைகர்-3" திரைப்படத்தில் ஷாருக் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஒரு முன்னணி கதாநாயகனின் திரைப்படத்தில் திரையில் வேறொரு முன்னணி கதாநாயகன் தோன்றுவது இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறியதாவது:
நானும் ஷாருக் கானும் பரஸ்பரம் இருவர் படங்களிலும் கேமியோ வேடங்கள் செய்கிறோம். எங்கள் இருவரின் ரசிகர்களும் அதை விரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் இருவருக்கும் திரையை தாண்டியும் ஆழமான நட்பு உள்ளது; இது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. எங்கள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது சமூக வலைதளங்களில் சச்சரவு நடைபெறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால், நான் சமூக வலைதளங்களை அதிகம் பார்ப்பவன் இல்லை. ஆனால், நான் எப்பொழுதும் என் ரசிகர்களிடம் சொல்வது என்னவென்றால், ஷாருக் எனக்கு சகோதரன்; எனவே, உங்களுக்கும் சகோதரன் - அவருக்கு எந்த தீங்கும் நேர்ந்து விட கூடாது - என்பதுதான். நானும் ஷாருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்.
இவ்வாறு சல்மான் தெரிவித்தார்.
பிரபல கதாநாயகர்கள், வேறொரு கதாநாயகரின் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவது திரைப்படங்களின் வெற்றிக்கும், அதிக வசூலுக்கும் உதவுவதாக திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.
- சமீர் ரிஸ்வியை சென்னை அணி 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்தியாவின் ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும், சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.






