search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "fashion show"

  • கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
  • விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

  புதுச்சேரி:

  புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

  சுனாமி தாக்குதலுக்கு பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.

  அண்மையில் இந்த நிறுவனம் துளசி, சந்தனம், கத்தாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கொண்டு துணிகளை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.

  இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது.

  ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உடைகளை தயாரிக்கிறது.

  விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

  வாடிக்கையாளர்கள் இந்த உடைகளை அணிந்து வலம் வந்த வித்தியாசமான பேஷன் ஷோ புதுவை நகர விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயன கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து கைத்தட்டல் பெற்றனர்.

  பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

  • விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
  • நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்

  உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப்பட நகர் உருவாக்கப்பட்டுள்ளது.

  இங்குள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று பேஷன்ஷோ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் ஏராளமான மாடல் அழகிகள் விதவிதமான ஆடை அணிந்து 'ரேம்ப்வாக்' வந்தனர்.

  24 வயதான வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ரேம்ப்வாக் சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இரும்பு தூண் ஒன்று மேலிருந்து சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் வன்சிகா சோப்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

  மின் விளக்குகளுக்காக அந்த இரும்புதூண் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், எதிர்பாராத விதமாக அந்த தூண் மேலிருந்து சரிந்து விழுந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

  இந்த சம்பவத்தில் பாபிராஜ் என்ற வாலிபர் காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

  இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பேஷன்ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர். 

  சவுதி அரேபியாவில் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் பெண் மாடல்கள் உடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வர தடை என்பதால், ஆடைகள் காற்றில் பறந்து வந்துள்ளன.
  ஜெட்டா:

  சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. தற்போது, பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், கார் ஓட்டுவது மற்றும் மைதானத்திற்கு சென்று விளையாட்டுக்களை பார்ப்பது போன்றவற்றுக்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  மேலும், அரசு பொறுப்பிலும் பல்வேறு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பாதுகாப்பு படையிலும் பெண்கள் இணைக்கப்பட உள்ளனர். இந்நிலையில், சவுதியில் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்று நடந்துள்ளது. ஆண் மாடல்கள் புதியாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

  சவுதியில் பெண்கள் மாடலிங் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று. இதனால், புதிதாக வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கான ஆடைகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்த பேஷன் ஷோ ஏற்பாட்டாளர்கள் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தனர்.

  அதாவது, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ட்ரோன்களில் பெண்களுக்கான ஆடைகளை மாட்டிவிட்டு நிகழ்ச்சி நடந்த அரங்கில் பறக்க விட்டுள்ளனர். இதனை குர்திஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

  தற்போது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கிண்டலான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை பார்க்க..

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஊனமுற்றவர்களுக்காக நடத்தப்பட்ட பேஷன் ஷோவில் மாடல்கள் பங்கேற்று மேடையில் நடந்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. #Speciallyabledmodels
  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் நாராயண் சேவா சன்ஸ்தன் என்ற சமூக சேவை நிறுவனம் சார்பாக பேஷன் ஷோ நடத்தப்பட்டது.  இந்த பேஷன் ஷோ கால் ஊனமுற்றவர்களுக்காக பிரேத்யகமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.     இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் காலிபர்ஸ், சக்கரநாற்காலி, செயற்கை கால்கள் மற்றும் ஊன்றுக்கோலுடன் நடந்து வந்து பார்வையாளர்களை அசத்தினர். இந்த விழாவில் பிரபல நடிகை சுதா சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  சுதா சந்திரன் விபத்தில் காலை இழந்த பிறகு செயற்கை கால்களுடன் நடனம் ஆடி சாதனை புரிந்தவர். கால்கள் ஊனமுற்றவர்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மிகவும் நல்ல விஷயம். இது அவர்களை ஊக்கப்படுத்தும் என தெரிவித்தார். இந்த சேவை நிறுவனம் ஊனமுற்றவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. #Speciallyabledmodels

  ×