என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashtalakshmi Mahotsava Program"

    • அஷ்டலட்சுமி மஹோத்சவ நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடக்கிறது.
    • நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    புதுடெல்லி:

    பேஷன் ஷோவில் அழகிகள் ஒய்யாரமாக நடந்து வருவதைதான் நாம் பார்த்திருப்போம். ஆனால் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரிகள் 2 பேர் அலங்கார ஆடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.

    டெல்லியில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலந்து, மிசோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள். அஷ்ட லட்சுமியின் 8 வடிவங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

    அந்த மாநிலத்தினர் இந்தியாவின் கலாச்சார சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். அவர்களின் காலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொருட்டு டெல்லியில் அஷ்டலட்சுமி மஹோத்சவ நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடக்கிறது. நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஜவுளி தொழில், கைவினை பொருட்கள், தனித்துவமான, புவியியல் குறியீடு தயாரிப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

    இதில் முக்கிய நிகழ்வாக பேஷன் ஷோ நடந்தது. அழகிகள் பாரமபரிய ஆடை அணிந்து ஒய்யரமாக நடந்து வந்து அசத்திக் கொண்டிருந்தனர்.

    அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் ஜோதிராதித்ய சிந்தியா, சுகந்தா மஜும்தார் ஆகிய 2 பேரும் மேடையில் தோன்றி வட கிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.

    இது அங்கிருந்த பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. அழகிகளுக்கு இணையாக மத்திய மந்திரிகள் நடந்து வந்ததை அங்கிருந்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

    இதுகுறித்து மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தனது எக்ஸ் தளத்தில், இந்த நிகழ்வு கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலின் கொண்டாட்டம்.

    வடகிழக்கு இந்தியாவின் துடிப்பான பாணிகளை வெளிப்படுத்தும் பேஷன் ஷோவில் ஒரு அற்புதமான நேரம் இருந்தது. ஒவ்வொரு மாநிலமும் திறமையான கலைஞர்கள் மற்றும் மாடல்களால் அழகாக பிரதிநிதித்துவபடுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பேஷன் ஷோவில் தான் ஒய்யாரமாக நடந்து வந்த படங்களையும் பதிவிட்டுள்ளார். 

    ×