என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Self Employed"
- கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
- விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சுனாமி தாக்குதலுக்கு பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
அண்மையில் இந்த நிறுவனம் துளசி, சந்தனம், கத்தாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கொண்டு துணிகளை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.
இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது.
ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உடைகளை தயாரிக்கிறது.
விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் இந்த உடைகளை அணிந்து வலம் வந்த வித்தியாசமான பேஷன் ஷோ புதுவை நகர விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயன கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து கைத்தட்டல் பெற்றனர்.
பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
- சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது.
- இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருட்களான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும், தூக்கத்தை சீராக்கும், அதிகப்படியான உடல் எடையையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். புற்றுநோய் வராமல் பாதுகாக்கும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும்.
பல்வேறு சிறுதானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்த சத்துமாவு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இல்லத்தரசிகள் இந்த சிறுதானிய சத்துமாவு தயாரிப்பை சுயதொழிலாகவும் செய்ய முடியும். எந்தவிதமான பதப்படுத்தும் பொருட்களும் சேர்க்காமல் தயாரிப்பதால், சிறுதானிய சத்துமாவுக்கு வரவேற்பு நன்றாகவே இருக்கும். பெரிய அளவிலான முதலீடுகள் இதற்கு தேவையில்லை. முதலில் உங்களுடைய தேவைக்காக தயாரித்து பயன்படுத்தி பாருங்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வியாபார நோக்கில் தயாரித்து விற்பனை செய்யலாம். இது பற்றிய தகவல்கள் இதோ...
சிறுதானிய சத்துமாவு தயாரிக்க தேவையான பொருட்கள்:
பிசினி அரிசி, மூங்கில் அரிசி, கருப்பு கவுனி அரிசி. மாப்பிள்ளை சம்பா அரிசி, சிவப்பு அரிசி, முழு கோதுமை. வெள்ளை சோளம், ராகி, கொள்ளு, குதிரை வாலி, வரகு,சாமை, தினை, கம்பு, பார்லி, இவற்றை தலா 100 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 முறை கழுவிக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடியச் செய்து, சுத்தமான பருத்தித் துணியில் அவற்றை கொட்டி நிழலில் உலர்த்தவும்.
ஈரப்பதம் முழுவதுமாக நீங்கிய பிறகு, மாவு மில்லில் கொடுத்து மென்மையான மாவாக பொடித்துக் கொள்ளவும். மாவில் இருக்கும் சூடு முழுவதுமாக நீங்கும் வரை ஆற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அது சூடானதும், இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி மிதமான தீயில் வறுக்கவும். சுத்தமான பருத்தித் துணியில் அந்த மாவைக் கொட்டி மீண்டும் ஆற வைக்கவும்.
பின்னர் ஈரப்பதம் இல்லாத, காற்று புகாத, சுத்தமான சில்வர் அல்லது கண்ணாடி டப்பாக்களில் மாவை நிரப்பி பத்திரப்படுத்தவும். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தி வரலாம்.
சிறுதானிய சத்துமாவு கஞ்சியை இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதைத் தவிர்க்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகள், இளம் பருவத்தினர். கர்ப்பிணிகள், முதியவர்கள் இதை சாப்பிடலாம். இந்த சத்துமாவில் கஞ்சி மட்டுமில்லாமல் புட்டு.
கொழுக்கட்டை இடியாப்பம் என பலவிதமான பல காரங்களை தயாரித்து வழங்கலாம். வணிக முறையில் சந்தைப்படுத்துவதற்கான சான்றிதழ்களைப் பெற்று. தரமான முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
- சுயதொழில் பயிற்சி தொடக்க விழா மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பகுதியில் உள்ள பெட்கிராட் அலுவலகத்தில் நடந்தது.
- நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள்ரூபி, மார்ட் டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் மற்றும் பெட்கிராட் நிறுவனம் இணைந்து நடத்தும் 26 நாட்கள் இலவச கெமிக்கல் இல்லாத சோப்பு, ஹேண்ட் வாஷ், பாடி வாஷ், தயாரிக்கும் இலவச பயிற்சி தொடக்க விழா மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பகுதியில் உள்ள பெட்கிராட் அலுவலகத்தில் நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமையில் நடந்தது.
நிர்வாகிகள் கிருஷ்ண வேணி, சாராள்ரூபி, மார்ட் டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட தாட்கோ மேலா ளர் திருநாவுக்கரசு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசு கையில், மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவராக மாறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறது. 35 சதவீதம் மானி யமும் வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளும் பெற ஆன்லைன் மூலமாக செயல்படுத்தலாம் என்றார்.
தாசில்தார் கோபி பேசு கையில், பயிற்சி பெறும் பயனாளிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அவசியம், குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பு சேர்க்க வேண்டும் என்றார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் தங்கமலர் பேசுகையில், தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் பெற அனை வரும் தயாராக வேண்டும். வங்கியின் வாயிலாக அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.
இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் அனைவரும் தொழில் முனைவராக மாற வேண்டும் என்பதை மட்டும நோக்கமாக வைத்து பயிற்சியை தொடங்குங்கள் என்றார். பெட்கிராட் தாளாளர் சுப்புராம் பேசுகையில், பெண்களின் முன்னேற்றமே ஒவ்வொரு இல்ல ங்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் இந்த நாட்டினுடைய முன்னேற்றம் என்றார். முடிவில் பயிற்சியாளர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.
- துணிகளுக்கு நறுமணமும் அளிக்கக்கூடியவை ஃபேப்ரிக் சாஃப்ட்னர்கள்.
- ஃபேப்ரிக் சாஃப்ட்னர்களை விட்டிலேயே தயார் செய்ய முடியும்.
நாம் உடுத்தும் துணிகளுக்கு மென்மையும், நறுமணமும் அளிக்கக்கூடியவை ஃபேப்ரிக் சாஃப்ட்னர்கள். இவை துணிகளை நீண்டகாலம் சிறந்த முறையில் பராமரிக்க உதவுவதோடு, அவற்றின் நிறங்களை மங்காமல் பாதுகாக்கும். ஃபேப்ரிக் சாஃப்ட்னர்களை விட்டிலேயே தயார் செய்ய முடியும். இல்லத்தரசிகள் இதை சுயதொழிலாக மேற்கொண்டு வருமானம் ஈட்டலாம். ஃபேப்ரிக் சாஃப்ட்னர் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கும். எவ்வாறு தயாரிப்பது எப்படி சந்தைப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ஆர்.ஓ.அல்லது மினரல் வாட்டர் - 900 மி.லி
சாப்ட்னர் பிளேக்ஸ் 100 கிராம்
ஐசோபுரோபைல் ஆல்கஹால் - 50 மி.லி
வாசனை திரவியம் - 20 மி.லி விருப்பமான வண்ணம் - 3 துளிகள்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி லேசாக சூடுபடுத்தவும். பிறகு அதில் சாப்ட்னர் பிளேக்சை போட்டு அது கரையும் வரை நன்றாக கலக்கவும். பின்னர் அந்த கலவையை ஆற வைக்கவும். பின்னர் அதில் ஐசோபுரோபைல் ஆல்கஹால், வாசனை திரவியம், வண்ணம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது ஒரு லிட்டர் அளவுள்ள 'ஃபேப்ரிக் சாஃப்ட்னர்" கிடைக்கும். இதனை காற்று புகாத உலர்ந்த பாட்டில்களில் ஊற்றி வைக்கவும்.
மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கும்?
ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் மேற்கூறிய பொருட்கள் கிடைக்கும். உங்கள் பகுதியில் அத்தகைய 'கெமிக்கல் ஸ்டோர்' எங்கு இருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். இந்த பொருட்களை இணையத்தின் வழியாகவும் வாங்க முடியும்.
முக்கிய குறிப்புகள்:
`ஃபேப்ரிக் சாஃப்ட்னர்' தயாரிப்பதற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் வாசனைத் திரவியம் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும். வண்ணம் சேர்த்தால் தான் 'ஃபேப்ரிக் சாஃப்ட்னர்' பார்க்க அழகாக இருக்கும்.
சந்தைப்படுத்தும் முறைகள்:
உங்கள் தயாரிப்பை முறையாக சந்தைப்படுத்த வேண்டுமெனில், கவர்ச்சியான பிராண்ட் பெயருடன். பேக்கிங் அழகான பாட்டிலில் செய்வது அவசியமாகும். உங்கள் தயாரிப்பு தரமானதாகவும், நியாயமான விலையிலும் இருக்க வேண்டும். நீங்கள் தயாரித்ததை முதலில் உங்கள் வீட்டில் பயன்படுத்தி பாருங்கள். அப்போதுதான் குறைகள் இருந்தால் மாற்றிக்கொள்ள முடியும். சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றி பகிர்ந்து வாடிக்கையாளர்களை அதிகரிக்கலாம்.
- பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம்.
- இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியம்.
சமையல் அறையில் பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இட்லி. பணியாரம், வடை ஆகிய மூன்று ரெசிபிகள் தயாரிப்பதற்கும் ஒரே மாவை உபயோகிக்க முடியும். எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியத்துக்கும் தீங்கு ஏற்படுத்தாது, இல்லத்தரசிகள் இந்த பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம். அது பற்றிய தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 3 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முந்திரி- 20
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
அடிகனமான அகன்ற வாணலியில் ரவையை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்பு அதை ஒரு அகலமான தட்டில் மாற்றி ஆற வைக்கவும். அதே வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வறுக்கவும். பின்னர் அதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வறுக்கவும். பின்னர் உலர்ந்த கறிவேப் பிலை, உப்பு சேர்த்து ஆறவைக்கவும்.
இந்த கலவையை ரவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பிரிமிக்ஸ் மாவு தயார். இந்த மாவைக் கொண்டு இட்லி, பணியாரம், வடை ஆகிய ரெசிபிகளை செய்து அசத்தலாம். இதனை காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் தேவைப்படும்போது விருப்பமான ரெசிபிகளை சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம். இந்த மாவை பிரிட்ஜில் வைத்து மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை:
இரண்டு கப் பிரீமிக்ஸ் மாவுடன் ஒன்றரை கப் தயிர் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் மாவை ஒருமுறை நன்றாகக் கிளறி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
இட்லி தயாரிக்க:
எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும். இப்போது சுவையான ரவா இட்லி ரெடி.
குழிப்பணியாரம் தயாரிக்க:
அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து அதன் குழிகளில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், அது சூடானதும் டீஸ்பூன் மூலம் மாவை ஒவ்வொரு குழியிலும் முக்கால் பங்கு அளவிற்கு ஊற்றி வேக வைக்கவும். ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான குழிப்பணியாரம் தயார்.
வடை தயாரிக்க:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். தயாரித்து வைத்திருக்கும் மாவை வடையாக தட்டிப்போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். இதனுடன் தேங்காய் சட்னி, காரச்சட்னி, சாம்பார் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.
சந்தைப்படுத்தும் முறை:
உணவுப் பொருட்களை முறையாக சந்தைப்படுத்தும் போது அதற்கு தேவையான சான்றிதழ்களை வாங்க வேண்டியது அவசியம், பிராண்டு பெயருடன் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை ஆகியவற்றில் விற்பனை செய்யலாம். பொருட்காட்சிகளிலும் உங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தலாம்.
- 3 சுயதொழில் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- வங்கிக் கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது -
படித்த வேலைவா ய்ப்பற்ற இளைஞர்கள் அரசு மானியத்துடன் வங்கி கடன் பெற்று சுயதொழில் தொடங்கிட படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் , புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற 3 சுயதொழில் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் தமிழக அரசு மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் ரூ.5 கோடி வரையிலான வங்கிக் கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் குறித்து தொழில் முனைவேர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் வங்கி கடன் பெற்று பயனடையும் பொருட்டு கீழ்குறிப்பிட்ட நாட்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திட்ட விளக்கவுரை மற்றும் அனைத்து திட்டங்களின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கமும், கூட்டம் நடைபெறும் இடத்தி லேயே விண்ணப்பி க்கவும் வழிவகை செய்யப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 4-ந்தேதி காலை பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், மாலை குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம், 11-ந்தேதி காலை வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்டுமன்னார்கோவில், மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், குமராட்சி, 18-ந்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், புவனகிரி, மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், கீரப்பாளையம், 25-ந்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லூர், மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மங்களூர் பகுதியில் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தின் போது கீழ்குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் அசல் மற்றும் 2 நகல்கள் எடுத்து வருமாறும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது. கல்வித்தகுதி சான்றிதழ் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். எனவே, மகளிர் இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர், ஆதிதி ராவிடர், மாற்றுதிறனாளிகள் ஆகிய அனைவரும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை.
- தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுள் ஒன்று, மத்திய, அரசின் 60 சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் ஈர மாவு தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், தின்பண்டங்கள் தயாரித்தல், மசாலா பொடிகள் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி மற்றும் மீன் வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களை தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுபதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன் பெறலாம்.
ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை. திட்டத்தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீதம் மானியம், அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுய உதவி குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். இதுவரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம் இனி வரும் காலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இந்த திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற 6, ஏகாம்பரனார் தெரு (புதிய பஸ் நிலைய பின்புறம்), வேதாசலனார் தெரு, செங்கல்பட்டு என்ற முகவரியில் அமைந்த மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுயதொழில் தொடங்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
- ஜவுளி, வங்கி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் இலவச பயிற்சி பெற மாணவ- மாணவிகளின் தேர்வு.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் கோ.க.அண்ணாதுரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இளைஞர் திறன் விழாவில் தமிழக அரசு சார்பில் பல்வேறு வகையான சுயதொழில் தொடங்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் துவங்க வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
பயிற்சி முடிவில், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த சான்றிதழை கொண்டு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கலாம்.
இதில் மோட்டார் வாகனம், ஆடை, ஜவுளி, வங்கி மற்றும் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் இலவச பயிற்சி பெற மாணவ மாணவிகளின் தேர்வு நடைபெற்றது.
இலவச பயிற்சியில் பங்கு பெறுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களது சான்றிதழ்களுடன் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் வருகை தந்தனர்.
தொடர்ந்து திறன் திருவிழாவிற்கு வந்திருந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.
- சுயதொழில் பயிற்சி வகுப்பு நடந்தது.
- திட்ட இயக்குநர்கள் சுகப்பிரியா, தவமணி, விஜயலட்சுமி பங்கேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ரோட்டரி கிளப் ஆப் மல்லி, அரைஸ் டிரஸ்ட் சார்பில் பெண்களுக் கான சுயதொழில் பயிற்சி வகுப்பு மல்லியில் நடந்தது. ரோட்டரி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். டிரஸ்ட் தலைவர்கிருஷ்ண வேணி முன்னிலை வகித்தார்.
ரோட்டரி உதவி ஆளுநர் முத்துராமலிங்ககுமார், முன்னாள் உதவி ஆளுநர் ராஜேஷ் கண்ணன், ரோட்டரி நிர்வாகி ஜெயராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திட்ட இயக்குநர்கள் சுகப்பிரியா, தவமணி, விஜயலட்சுமி பங்கேற்றனர். ரோட்டரி செயலர் ஜாய்ஸ்மேரி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்