search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.5 கோடி கடன்கலெக்டர் தகவல்
    X

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.5 கோடி கடன்கலெக்டர் தகவல்

    • 3 சுயதொழில் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • வங்கிக் கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது -

    படித்த வேலைவா ய்ப்பற்ற இளைஞர்கள் அரசு மானியத்துடன் வங்கி கடன் பெற்று சுயதொழில் தொடங்கிட படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் , புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற 3 சுயதொழில் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் தமிழக அரசு மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் ரூ.5 கோடி வரையிலான வங்கிக் கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் குறித்து தொழில் முனைவேர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் வங்கி கடன் பெற்று பயனடையும் பொருட்டு கீழ்குறிப்பிட்ட நாட்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திட்ட விளக்கவுரை மற்றும் அனைத்து திட்டங்களின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கமும், கூட்டம் நடைபெறும் இடத்தி லேயே விண்ணப்பி க்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

    இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 4-ந்தேதி காலை பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், மாலை குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம், 11-ந்தேதி காலை வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்டுமன்னார்கோவில், மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், குமராட்சி, 18-ந்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், புவனகிரி, மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், கீரப்பாளையம், 25-ந்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லூர், மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மங்களூர் பகுதியில் கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்தின் போது கீழ்குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் அசல் மற்றும் 2 நகல்கள் எடுத்து வருமாறும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது. கல்வித்தகுதி சான்றிதழ் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். எனவே, மகளிர் இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர், ஆதிதி ராவிடர், மாற்றுதிறனாளிகள் ஆகிய அனைவரும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×