search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fabric Softener"

    • துணிகளுக்கு நறுமணமும் அளிக்கக்கூடியவை ஃபேப்ரிக் சாஃப்ட்னர்கள்.
    • ஃபேப்ரிக் சாஃப்ட்னர்களை விட்டிலேயே தயார் செய்ய முடியும்.

    நாம் உடுத்தும் துணிகளுக்கு மென்மையும், நறுமணமும் அளிக்கக்கூடியவை ஃபேப்ரிக் சாஃப்ட்னர்கள். இவை துணிகளை நீண்டகாலம் சிறந்த முறையில் பராமரிக்க உதவுவதோடு, அவற்றின் நிறங்களை மங்காமல் பாதுகாக்கும். ஃபேப்ரிக் சாஃப்ட்னர்களை விட்டிலேயே தயார் செய்ய முடியும். இல்லத்தரசிகள் இதை சுயதொழிலாக மேற்கொண்டு வருமானம் ஈட்டலாம். ஃபேப்ரிக் சாஃப்ட்னர் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கும். எவ்வாறு தயாரிப்பது எப்படி சந்தைப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ஆர்.ஓ.அல்லது மினரல் வாட்டர் - 900 மி.லி

    சாப்ட்னர் பிளேக்ஸ் 100 கிராம்

    ஐசோபுரோபைல் ஆல்கஹால் - 50 மி.லி

    வாசனை திரவியம் - 20 மி.லி விருப்பமான வண்ணம் - 3 துளிகள்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி லேசாக சூடுபடுத்தவும். பிறகு அதில் சாப்ட்னர் பிளேக்சை போட்டு அது கரையும் வரை நன்றாக கலக்கவும். பின்னர் அந்த கலவையை ஆற வைக்கவும். பின்னர் அதில் ஐசோபுரோபைல் ஆல்கஹால், வாசனை திரவியம், வண்ணம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது ஒரு லிட்டர் அளவுள்ள 'ஃபேப்ரிக் சாஃப்ட்னர்" கிடைக்கும். இதனை காற்று புகாத உலர்ந்த பாட்டில்களில் ஊற்றி வைக்கவும்.

    மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கும்?

    ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் மேற்கூறிய பொருட்கள் கிடைக்கும். உங்கள் பகுதியில் அத்தகைய 'கெமிக்கல் ஸ்டோர்' எங்கு இருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். இந்த பொருட்களை இணையத்தின் வழியாகவும் வாங்க முடியும்.

    முக்கிய குறிப்புகள்:

    `ஃபேப்ரிக் சாஃப்ட்னர்' தயாரிப்பதற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் வாசனைத் திரவியம் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும். வண்ணம் சேர்த்தால் தான் 'ஃபேப்ரிக் சாஃப்ட்னர்' பார்க்க அழகாக இருக்கும்.

    சந்தைப்படுத்தும் முறைகள்:

    உங்கள் தயாரிப்பை முறையாக சந்தைப்படுத்த வேண்டுமெனில், கவர்ச்சியான பிராண்ட் பெயருடன். பேக்கிங் அழகான பாட்டிலில் செய்வது அவசியமாகும். உங்கள் தயாரிப்பு தரமானதாகவும், நியாயமான விலையிலும் இருக்க வேண்டும். நீங்கள் தயாரித்ததை முதலில் உங்கள் வீட்டில் பயன்படுத்தி பாருங்கள். அப்போதுதான் குறைகள் இருந்தால் மாற்றிக்கொள்ள முடியும். சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றி பகிர்ந்து வாடிக்கையாளர்களை அதிகரிக்கலாம்.

    ×