search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Video"

  • டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
  • ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. வீடியோக்களும் முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ளன.

  இந்த தேர்தல் களத்தில் இதனை ஆளும் கட்சியான தி.மு.க. முதல் முறையாக கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை வாழ்த்துவது போன்ற ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டது.

  தி.மு.க. மாநாட்டு பந்தலிலும் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கருணாநிதியே மாநாட்டுக்கு நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதே போன்று முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.

  இப்படி தி.மு.க. சார்பில் இரண்டு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி அது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

  இதேபோன்று மறைந்த தங்கள் தலைவர்கள் ஏ.ஐ. வீடியோ மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் மற்ற கட்சியினரும் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோவை தயாரித்து வெளியிட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

  இதே போன்று மற்ற அரசியல் கட்சியினரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை தயாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த வீடியோக்கள் மூலம் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

  குறிப்பாக இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும் கட்சியினர் மறைந்த தங்களது தலைவர்களை பயன்படுத்தி மாற்று அணியினரை விமர்சிக்க முடியும் என்ப தால் அது அரசியல் களத்தில் மோதல் போக்கை உரு வாக்க வழிவகுக்கும் என்கிறார்கள்.  உதாரணத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

  அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போன்று ஏ.ஐ. வீடியோக்களை வெளியிட்டால் அது இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.

  தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இந்த அணிகளை சேர்ந்தவர்களும் மறைந்த தங்களது தலை வர்களை ஏ.ஐ. வீடியோக்கள் மூலமாக உருவாக்கி விமர்ச னம் செய்யவும் வழி வகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

  ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.
  • இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேக் பேட்டையை சேர்ந்தவர் ஹனுமான் நாயக் (வயது 22). இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்.

  இந்த நிலையில் ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.

  அங்கிருந்து மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி என்று பேசியபடி ஒரு சாக்லேட்டை நைசாக திருடி சாப்பிட்டார். இதனை அவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார்.

  அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

  இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சாக்லேட் திருடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுமான் நாயக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை கைது செய்தனர்.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • இளம்பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அகமது ஆகிலை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
  • நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகரித்ததால், இளம்பெண் சம்பவம் குறித்து உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

  கோவை:

  கோவை உக்கடம் அருகே உள்ள வின்சென்ட் ரோட்டை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

  இந்நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி அகமது ஆகில் (வயது25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

  நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அகமது ஆகிலை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

  இந்நிலையில் சமையல் தொழிலாளி புதிதாக செல்போன் வாங்கினார். அந்த செல்போனில் அவர் இளம்பெண்ணுடன் ஜாலியாக இருக்கும் போது அவருக்கு தெரியாமல் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்து வைத்து இருந்தார்.

  அந்த வீடியோக்களை காண்பித்து இளம்பெண்ணை மிரட்டி, அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

  மேலும் வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும், கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவதாக இளம்பெண்ணை மிரட்டி அவரும் பணமும் கேட்டு மிரட்டல் விடுத்தார்.

  இதனால் பயந்த இளம்பெண் பல்வேறு தவணைகளாக அகமது ஆகிலுக்கு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

  நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகரித்ததால், இளம்பெண் சம்பவம் குறித்து உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாச புகைப்படம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டி அவருடன் ஜாலியாக இருந்து விட்டு பணம் கேட்டு மிரட்டிய அகமது ஆகிலை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

  • மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
  • சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

  பெங்களூர்:

  கர்நாடக மாநிலம் சிக்கப் பல்லாப்பூர் மாவட்டம் முருகமல்லே என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை மற்றொரு மாணவர் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் வைரல் ஆக பரவியது. இதுபற்றி தெரியவந்ததும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

  இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கல்வி சுற்றுலாவின் போது எடுத்த சில படங்கள் மற்றும் வீடியோக்களை தலைமை ஆசிரியை நீக்கியது தெரியவந்தது. இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாணவருக்கு முத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை அதகாரிகள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.

  • இந்த அம்சம் குறித்த விவரங்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது.
  • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.6 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

  வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சம் ஆகும். இதை கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப்-இல் பகிரப்படும் வீடியோக்களை டபுள்டேப் செய்து ஃபார்வேர்டு மற்றும் பேக்வேர்டு என முன்னோக்கியும், பின்னோக்கியும் செல்லலாம். இதன் மூலம் நீண்ட வீடியோக்களை எளிதில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்க்க முடியும்.

  இந்த அம்சம் குறித்த விவரங்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பயனர்கள் வீடியோக்களை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சம் பயனர்கள் வழங்கும் பரிந்துரைகள் அடிப்படையில், எதிர்காலத்தில் மேம்படுத்தப்படும் என்று தெரிகிறது.

  புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.6 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு வீடியோக்களை ஃபார்வேர்டு மற்றும் பேக்வேர்டு செய்ய முடியும். இது குறித்த ஸ்கிரீன்ஷாட்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது.

  • புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
  • தெற்கு கோபுர வாசலில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகத்தில் கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும்.

  சுவாமிமலை:

  சுவாமிமலை சுவாமி நாதசாமி கோவில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

  சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலு க்கு வரும் பக்தா்கள் கைப்பேசி, புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு செல்ல தடைவி தித்து உத்தர விட்டுள்ளது.

  இந்த உத்தரவு நாளை (திங்க ட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.எனவே, கோவிலுக்கு வரும் பக்தா்கள் கைப்பேசி கொண்டு வருவதை தவிா்க்க வேண்டும்.

  மேலும், கொண்டு வருபவா்கள் தங்களது கைப்பேசி மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவிலின் தெற்கு கோபுர வாசலில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகத்தில் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு தரிசனம் முடிந்து செல்லும் போது பெற்றுக்கொள்ளவும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • யெவ்கெனி பிரிகோஷின் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது.
  • புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  மாஸ்கோ:

  ரஷியாவின் தனியார் ராணுவ படையின் தலைவராக இருந்து வருபவர் யெவ்கெனி பிரிகோஷின்.இந்த படை ரஷிய அதிபர் புதினின் துணை ராணுவ படை என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது.

  ரஷிய ராணுவ படைக்கு வாக்னர் படை பக்கபலமாக இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் உக்ரைன் போரில் வாக்னர்படை முக்கிய பங்காற்றி வருகிறது. உக்ரைன் போரின் போது முக்கிய நகரங்களை இந்த படை வீரர்கள் தான் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் கடந்ந 2 மாதங்களுக்கு முன்பு வாக்னர் குழு தலைவருக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. யெவ்கெனி பிரிகோஷின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாக்னர் படையினர் மாஸ்கோவில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர் 2 நாளில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. வாக்னர் குழுவினருக்கு மன்னிப்பு வழங்குவதாக ரஷியா அறிவித்தது.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. ரஷியாவின் சதி செயலால் அவர் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

  இந்த சூழ்நிலையில் விமான விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட வெண்கெனி பிரிகோஷின் காரில் சென்றபடி பேசுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் நான் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறேன், நான் நலமாக இருக்கிறேன். இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கூறுவது போல வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  ஆனால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. எப்போது எடுக்கப்பட்டது? என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வீடியோவில் அவர் பேசுவது உண்மைதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அவர் உயிரோடு இருக்கிறாரா?அல்லது இறந்து விட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. இந்த புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  • தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
  • பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

  புதுச்சேரி:

  புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கிளப் அவுஸ் என்ற டேட்டிங்கை பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் திலீப் குமார் என்பவர் பழக்கமானார்.

  இது நாளடைவில் காதலாக மாறியது. திலீப் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்க அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார். நாளடைவில் தீலிப்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் பழகு வதை நிறுத்திக்கொண்டார்.

  இதனால் ஆத்திரமடைந்த திலீப்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை தேடி வந்தனர். வேலைக்காக துபாய் சென்றிருந்த திலீப்குமாரை இந்தியாவுக்கு வரவழைத்து அவரை கைது செய்தனர்.

  இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது:-

  கடந்த 8 மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் புகார் கொடுத்த பெண்ணிற்கு தெரிந்தவராகவோ அல்லது முன்னாள் காதலர், உறவினராகவோ இருக்கின்றனர்.

  எனவே குறிப்பாக பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்.

  மேலும் ஆண் நண்பர்களோ காதலர்கள் அல்லது உங்களுக்கு பழக்கப்பட்டவர்களோ அவர்கள் கேட்பதற்கு இணங்க வீடியோ காலில் பேச வேண்டாம்.

  பெண்களை மிரட்ட பயன்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்களாகவே எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட புகைப்படங்களாக தான் உள்ளது.

  எனவே பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

  • போலீசார் அந்த வணிக வளாகத்துக்கு சென்று ரகசியமாக நோட்டமிட்டனர்.
  • பெண்கள் கழிவறைக்குள் அடிக்கடி சென்று வந்ததையும் வணிக வளாக பாதுகாப்பு பணியாளர்கள் பார்த்தனர்.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பர்தா அணிந்த ஒருவர் சந்தேகப்படும் வகையில் திரிந்து வந்ததாகவும், அந்த நபர் அங்குள்ள பெண்கள் கழிவறைக்குள் அடிக்கடி சென்று வந்ததையும் வணிக வளாக பாதுகாப்பு பணியாளர்கள் பார்த்தனர்.

  இதுதொடர்பாக போலீஸ்நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வணிக வளாகத்துக்கு சென்று ரகசியமாக நோட்டமிட்டனர். அவர்கள் பர்தா அணிந்து சென்ற நபரை சுற்றிவைத்தது பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆண் குரலில் பேசினார்.

  இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பர்தா அணிந்திருந்த அந்த நபர், ஆண் என்பதும், பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு திரிந்ததும் தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது.

  அப்போது அவர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவேலூர் ஒனக்குன்னு பகுதியை சேர்ந்த அபிமன்யு (வயது23) என்பதும், பி.டெக் பட்டதாரியான இவர் பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

  பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு திரிந்த அவர், வணிக வளாகத்தில் இருந்த பெண்கள் கழிவறைக்குள் புகுந்து தனது செல்போனை ரகசியமாக வைத்து, கழிவறைக்கு வந்துசென்ற பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வந்திருக்கிறார்.

  இதையடுத்து ஐ.டி. ஊழியர் அபிமன்யுவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் பர்தா உடை உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் தனது செல்போன் மூலம் எத்தனை பெண்களை ஆபாசமாக படம் எடுத்திருக்கிறார்? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.