என் மலர்
நீங்கள் தேடியது "student suicide"
- விரக்தியில் காணப்பட்ட காளியம்மாள் கடந்த 24-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காளியம்மாள் அனுமதிக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார். விவசாயி. இவரது மகள் காளியம்மாள். இவர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் தான் பிளஸ்-2க்கு பிறகு எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை மன்னார் மறுத்துள்ளார்.
இதனால் விரக்தியில் காணப்பட்ட காளியம்மாள் கடந்த 24-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் மாணவியை மீட்டு உடனே சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மாணவி காளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மன்னார் அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்தும் படிக்க கூடாது என்று தந்தை மறுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவி ராகவி 193 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
- குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவி ராகவி மிகவும் மனவேதனை அடைந்தார்.
அம்பத்தூர்:
கொரட்டூர், கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். பெயிண்டர். இவரது மகள் ராகவி (வயது15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவி ராகவி 193 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி மேல்படிப்பு படிக்க அறிவுறுத்தி வந்தனர்.
எனினும் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மாணவி ராகவி தொடர்ந்து மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த போது அறைக்குள் சென்ற ராகவி திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராகவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை சிகிச்சை பலனின்றி ராகவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்று தெரிகிறது.
- பரமேஸ்வரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார்.
கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்று தெரிகிறது. இதனால் பரமேஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைக் கண்ட பெற்றோர் அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பரமேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செந்தில்குமார் நாட்டறம்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.
பரமேஸ்வரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ள கபிலன் கபடி போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
- பிளஸ்-2 செல்ல விருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர்.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கருமடையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சசி. இவரது மகன் கபிலன் (வயது17).
இவர் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் கபடி போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். ஆனால் பிளஸ்-2 செல்ல விருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த கபிலன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி மற்றும் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
- வீடு திரும்பிய தந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக் கண்டு அழுது துடித்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள நாராயணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. விவசாயி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.
இவருடைய மகன் ஹரி (வயது 18) தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது தந்தை வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் ஹரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீடு திரும்பிய அவரது தந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக் கண்டு அழுது துடித்தார். தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதில் மாணவன் ஹரி தோல்வி அடைந்திருந்தார். தேர்வு தோல்வி பயத்தின் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தற்கொலை உள்ளிட்ட விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம். மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- கடந்த சில நாட்களாக சுருதி அதிகமாக செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும், அதனை அவரது தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
- பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மேலப்பாவூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் மாரி செல்வன். இவர் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகள் சுருதி(வயது 17). இவர் பிளஸ்-1 ஆண்டு இறுதி தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் அதிகமாக செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும், அதனை அவரது தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 18-ந்தேதி சுருதி திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த விஷ மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தார்.
இதைக்கண்ட அவரது தாயார் கலைச்செல்வி அவரை மீட்டு தென்காசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சுருதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு காமராஜர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் கூலி தொழிலாளி இவரது 2-வது மகள் புவனேஸ்வரி (வயது 17).
திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி அதே பகுதியை வாலிபரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி புவனேஸ்வரி வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதற்கு வாலிபர் மறுத்துள்ளார். நான் டைம் பாஸ்க்குதான் காதலித்து வந்ததாகவும் மேலும் நீ வேண்டுமானால் செத்துப் போ என மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டார்.
தகவல் அறிந்த பெற்றோர் உடனடியாக திருவண்ணா மலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீசில் இறந்த புவனேஸ்வரின் தந்தை பெருமாள் தன் மகள் சாவுக்கு காரணமான வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- காயத்ரி அம்பை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- காயத்ரி சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் ராஜா நகரை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் காயத்ரி அம்பை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் காயத்ரி சரியாக படிக்கவில்லை என்று கூறி நேற்று அவரை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்ட காயத்திரி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜனபிரியா கண் எதிரேயே அவரது பெற்றோர் இருவரும் சண்டை போட்டுக்கொண்டதாக தெரிகிறது.
- குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குரோம்பேட்டை:
சென்னையை அடுத்த குரோம்பேட்டை, நியுகாலனியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் ஜனபிரியா(வயது 19). இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருடைய பெற்றோர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜனபிரியா மிகவும் வேதனை அடைந்து வந்தார். நேற்று காலையிலும் வழக்கம் போல் ஜனபிரியா கண் எதிரேயே அவரது பெற்றோர் இருவரும் சண்டை போட்டுக்கொண்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜனபிரியா, "உங்களால் நான் வெளியே தலைகாட்ட முடியவில்லை. எப்போதும் உங்களுக்குள் பிரச்சினையாகவே இருக்கிறது" என்று கூறிவிட்டு, திடீரென வீட்டில் இருந்த என்ஜின் ஆயிலை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த மகளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஜனபிரியா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் சண்டையால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- மனமுடைந்த நாகலட்சுமி அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கினார்.
- தேனி க.விலக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே டி.கள்ளிபட்டி சாஸ்திரிநகரை சேர்ந்தவர் நாகமுத்து மகள் நாகலட்சுமி (வயது 15). இவர் பெரியகுளம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த நாகலட்சுமி அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கினார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.