என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவன் தற்கொலை
    X

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவன் தற்கொலை

    • விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகள் மூலம் 21,581 பேர் தேர்வு எழுதினர்.
    • 95.11 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் இன்று காலை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகள் மூலம் 21,581 பேர் தேர்வு எழுதினர். இதில் 20,526 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் 95.11 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை கிராமத்தை சேர்ந்த மாணவன் கோகுல்நாத் பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியான போது மாணவன் கோகுல்நாத் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிறுவாலை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×