என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஐடி மாணவர் தற்கொலை"

    • ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் ஐ.ஐ.டி-யில் மட்டுமே நடந்துள்ளது
    • 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் நேற்று முன் தினம் கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    உயிரிழந்த மாணவர் அங்கு புவி அறிவியலில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வந்த ராஜஸ்தானை சேர்ந்த ராமஸ்வரூப் இஷ்வாராம் (25) என அடையாளம் காணப்பட்டார்.

    அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாகக் காவல் துறை தெரிவித்தது.

    முன்னதாக இதே வளாகத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பி டெக் மாணவர் ஜே சிங் மீனா கடந்த டிசம்பர் 29 அன்று தற்கொலை செய்த நிலையில் தற்போது மற்றோரு மாணவர் தற்கொலை செய்துள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டிகளில் 65 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 முதல் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் ஐ.ஐ.டி-யில் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தேசிய குற்றவியல் ஆவண காப்பக தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    அதாவது, ஒரு நாளைக்குச் சராசரியாக 36 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    மன அழுத்தம், கல்விக் கட்டண சுமை, சாதி பாகுபாடு ஆகியவை தற்கொலைக்கான காரணங்களாக உள்ளன.

    இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவங்களில் கடந்த 5 ஆண்டுகளில் சாதி பாகுபாடு புகார்கள் 118% அதிகரித்துள்ளதாக UGC அண்மையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    2016-ஆம் ஆண்டு சாதிய பாகுபாட்டால் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் UGC இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்தது.  

    • அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
    • ஐஐடி கரக்பூரில் நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார்.

    மகாராஷ்டிராவின் IIT பாம்பேவில் 26 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த ரோஹித் சின்ஹா என்ற அந்த மாணவர், ஐஐடி-பம்பாயில் அறிவியல் பிரிவில் படித்து வந்தார்.

    இந்தச் சம்பவம் அதிகாலை 2:30 மணியளவில் நடந்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி, சம்பவத்தின் போது விடுதி மொட்டை மாடியில் இருந்த மற்றொரு மாணவர் இதைக் கண்டதாக கூறப்படுகிறது. 

    அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    முன்னணி கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில், ஐஐடி கரக்பூரில் நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார்.

    இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உச்ச நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க 15 வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • மாணவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காரக்பூர்:

    மேற்கு வங்காள மாநிலம் காரக்பூரில் உள்ள ஐஐடி விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுதி அறையில் அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

    அந்த மாணவர், அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், சமீபத்தில் விடுதியில் சேர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகங்களில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி சென்னை ஐஐடியில் ஒரு மாணவர், 17ம் தேதி கவுகாத்தி ஐஐடியில் ஒரு மாணவர் என இறந்துள்ளார். இதேபோல் ஐதராபாத், கான்பூரிலும் கடந்த மாதம் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    • சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் அந்த மாணவர் இருந்தார்.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் 4-ம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் இருந்த அவர், ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், ஐஐடியில் ஒடிசா மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    கல்வி நிலைய வளாகங்களில் நடைபெறும் தற்கொலைகளை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவரது ஆன்லைன் விளையாட்டுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
    • தீனா கடந்த சில நாட்களாக விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.

    ஐதராபாத்தில், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 23). இவர் அங்குள்ள அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால் ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி யூ டியூப் சேனலில் பதிவிட்டார். அவர் உருவாக்கிய ஆன்லைன் விளையாட்டை ஒரு சிலர் மட்டுமே விரும்பி விளையாடினர். அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவரது ஆன்லைன் விளையாட்டுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தீனா கடந்த சில நாட்களாக விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் 5-வது மாடிக்குச் சென்ற தீனா அங்கிருந்து கீழே குதித்தார். இதில் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    • படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால் ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி யூடியூப் சேனலில் பதிவிட்டார்.
    • அவர் உருவாக்கிய ஆன்லைன் விளையாட்டை ஒரு சிலர் மட்டுமே விரும்பி விளையாடினர்.

    திருப்பதி:

    ஐதராபாத்தில், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 23). இவர் அங்குள்ள அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால் ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி யூடியூப் சேனலில் பதிவிட்டார்.

    அவர் உருவாக்கிய ஆன்லைன் விளையாட்டை ஒரு சிலர் மட்டுமே விரும்பி விளையாடினர். அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவரது ஆன்லைன் விளையாட்டுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

    இதனால் தீனா கடந்த சில நாட்களாக விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் 5-வது மாடிக்குச் சென்ற தீனா அங்கிருந்து கீழே குதித்தார். இதில் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.

    ஐதராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீனா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×