என் மலர்

  நீங்கள் தேடியது "IIT Student Suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  காரக்பூர்:

  மேற்கு வங்காள மாநிலம் காரக்பூரில் உள்ள ஐஐடி விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுதி அறையில் அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

  அந்த மாணவர், அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், சமீபத்தில் விடுதியில் சேர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

  நாட்டின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகங்களில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி சென்னை ஐஐடியில் ஒரு மாணவர், 17ம் தேதி கவுகாத்தி ஐஐடியில் ஒரு மாணவர் என இறந்துள்ளார். இதேபோல் ஐதராபாத், கான்பூரிலும் கடந்த மாதம் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் அந்த மாணவர் இருந்தார்.

  சென்னை:

  சென்னை ஐ.ஐ.டி.யில் 4-ம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் இருந்த அவர், ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

  இந்நிலையில், ஐஐடியில் ஒடிசா மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

  கல்வி நிலைய வளாகங்களில் நடைபெறும் தற்கொலைகளை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • என்னால் படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியாததால் முதலாம் ஆண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றது உங்களை மன வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.
  • நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற உங்களது கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் மன்னியம் மாவட்டம், சாலூரு பட்டணத்தை சேர்ந்தவர் அரிநாத் ஆச்சாரி. இவரது மகள் ரோஷினி (வயது 17). இவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் எச்சர்லா பகுதியில் உள்ள ஐ.ஐ.டி.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

  தற்போது ஐ.ஐ.டி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று கல்லூரிக்கு சென்ற ரோஷினி தேர்வு எழுதிவிட்டு, தேர்வு நேரம் முடிவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே விடுதிக்கு வந்தார்.

  அப்போது விடுதியில் மாணவிகள் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  தேர்வு எழுதிவிட்டு விடுதிக்கு வந்த சக மாணவிகள் ரோஷினி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் எச்சர்லா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரோஷினி பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  ரோஷினி தங்கி இருந்த அறையில் அவர் பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

  என்னால் படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியாததால் முதலாம் ஆண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றது உங்களை மன வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

  நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற உங்களது கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

  இந்த ஆண்டும் குறைந்த மதிப்பெண் பெற்று விடுவேனோ என்ற அச்சம் வந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன்.

  உங்களை விட்டு பிரிந்து செல்வது மனதுக்கு வருத்தமாக உள்ளது. என்னை மன்னித்து விடுங்கள். தம்பியை நன்றாக படிக்க வையுங்கள் என கூறியுள்ளார்.

  தற்கொலை செய்து கொண்ட ரோஷினிக்கு இன்று பிறந்தநாள் ஆகும். பிறந்தநாள் கொண்டாடிய வேண்டிய ரோஷினி தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் சக மாணவிகள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால் ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி யூடியூப் சேனலில் பதிவிட்டார்.
  • அவர் உருவாக்கிய ஆன்லைன் விளையாட்டை ஒரு சிலர் மட்டுமே விரும்பி விளையாடினர்.

  திருப்பதி:

  ஐதராபாத்தில், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 23). இவர் அங்குள்ள அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

  படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால் ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி யூடியூப் சேனலில் பதிவிட்டார்.

  அவர் உருவாக்கிய ஆன்லைன் விளையாட்டை ஒரு சிலர் மட்டுமே விரும்பி விளையாடினர். அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவரது ஆன்லைன் விளையாட்டுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

  இதனால் தீனா கடந்த சில நாட்களாக விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.

  இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் 5-வது மாடிக்குச் சென்ற தீனா அங்கிருந்து கீழே குதித்தார். இதில் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.

  ஐதராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீனா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×