search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IIT Student"

    கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மாணவி ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கான்பூர்:

    உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) புவி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி செஜல் ஜெயின். இவர் தனது நண்பர்களுடன் நேற்று கங்கை தடுப்பனைக்கு சென்றுள்ளார். அங்கு, செஜல் ஜெயின் செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்த ஐஐடி மாணவி செஜல் ஜெயின்

    இதுகுறித்து ஐ.ஐ.டி-கே செய்தித் தொடர்பாளர் கிரீஷ் பந்த் கூறுகையில், " மாணவி உயிரிழந்தது குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், செஜல் ஜெயின் உள்பட 7 பேர் கங்கை தடுப்பணைக்கு சென்றது தெரியவந்தது. இவர்கள் அங்குள்ள பாலத்தின் பாதுகாப்பு தடுப்பை கடந்து அணையின் கேட் வளைவில் நுழைந்துள்ளனர்.

    அங்கு, செஜல் ஜெயின் தனியாக நின்றபடி செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென செஜல் ஜெயின் கால் தவறி ஆற்றுக்குள் விழுந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் ஆற்றுக்குள் சுயநினைவற்று கிடந்த செஜல் ஜெயினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் செஜல் ஜெயின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் " என்றார்.

    இதையும் படியுங்கள்.. இந்தியாவிலேயே முதல் முறையாக கற்பழிப்பு வழக்கில் ஒரே நாளில் தீர்ப்பு

    சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த ரிஷீக் ரெட்டி மாயமானதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து மாணவனை தேடி வருகிறார்கள். #StudentMissing
    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வருபவர் ரிஷீக் ரெட்டி.

    இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 27-ந்தேதி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரிஷீக் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரிஷீக் ரெட்டியின் தந்தை பிரபாகர் ரெட்டி அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஐ.ஐ.டியில் இருந்து புறப்பட்டு சென்ற ரிஷீக் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரிஷீக்கின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள். அவர் கடைசியாக யாரிடம் பேசி உள்ளார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காதல் பிரச்சினை காரணமாக அவர் காணாமல் போனாரா? இல்லை வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #StudentMissing
     
    ×