என் மலர்

  செய்திகள்

  தீர்ப்பு
  X
  தீர்ப்பு

  இந்தியாவிலேயே முதல் முறையாக கற்பழிப்பு வழக்கில் ஒரே நாளில் தீர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  அராரியா :

  பீகாரின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜூலை 22-ந்தேதி மர்ம நபர் ஒருவர் கற்பழித்தார். இது தொடர்பாக மறுநாளே வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

  அவர் மீதான வழக்கு அராரியாவில் உள்ள போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 4-ந்தேதி சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு, இரு தரப்பிலும் வாதம் மற்றும் தண்டனை என அனைத்தும் ஒரே நாளில் நடந்தது.

  இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

  இதன் மூலம் நாட்டிலேயே மிகவும் வேகமாக (ஒரே நாளில்) தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காக இந்த வழக்கு மாறியிருக்கிறது. ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், தீர்ப்பின் விவரம் கடந்த 26-ந்தேதி தான் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  முன்னதாக மத்திய பிரதேசத்தில் கற்பழிப்பு வழக்கு ஒன்றில் கடந்த 2018-ம் ஆண்டு 3 நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
  Next Story
  ×