என் மலர்
நீங்கள் தேடியது "Court"
- கர்நாடக முதல்-மந்திரி மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி கிராமத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயி கள் சங்கம் சார்பில் காவிரி டெல்டாவில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ரெயில் மறியல் போராட்டம் குறித்து ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலா ளர் குடவாசல் சரவணன், மாநில துணை செயலாளர் செந்தில் குமார் உள்பட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக முதல்-மந்திரி தொடர்ந்து 2 மாத காலமாக அனைத்து கட்சிகளையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது எனவும், மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளார்.
இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பான மத்திய அரசுக்கு எதிராக வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள காவிரி டெல்டா ரெயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்க ணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக போராட்டம் குறித்த பிரசுரங்களை நிர்வாகிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கினார்.
- அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சீமான் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது.
இதன்படி இன்று காலை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1567 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது
- மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான கிரிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, அரியலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான கிரிஸ்டோபர் தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5078 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 707 சிறுகுற்ற வழக்குகளும், 19 சிவில் வழக்குகளும், 11 மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், 2 காசோலை வழக்குகளும், 3 குடும்ப வன்முறை வழக்குகளும், 1 பராமரிப்பு வழக்கும், ஜெயங்கொண்டத்தில் நிலம்கை யகப்படுத்துதல் 596 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது, இதில் குடும்பநல நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன், தலைமைகுற்றவியல் நடுவர் அறிவு, ஜெயங்கொண்டம் சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர் லதா, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவர் ராஜசேகர், செந்துறை நீதித்துறை நடுவர் ஆக்ணேஷ்ஜெயகிருபா, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், அரசு வக்கில்கள், வக்கில் சங்க பிரதிநிதிகள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், சட்டஆணைக்குழு அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
- கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோர்ட்டு நுழைவாயில் எதிரில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம். குமரன் தலைமையில் நடைபெற்றது.
- புவனேஸ்வரி, இளங்கோவன், சுந்தர், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
இ.பைலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நடைமுறையை திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தி புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோர்ட்டு நுழைவாயில் எதிரில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம் குமரன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் கதிர்வேல் பொருளாளர் லட்சுமி நாராயணன் இணை செயலாளர்கள் திருமலைவாசன் சதீஷ்குமார், வடிவரசன், சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், சிவராமன், சந்தோஷ்குமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலியமூர்த்தி,
திருகண்ண செல்வன், பச்சையப்பன், சுப்பிரமணியன், அம்மாவாசை, சுப்பிரமணி, சாய் ராஜகோபால், குமரன், லட்சுமணன், நாராயணகுமார், ராமன், கார்த்திக், ராஜ பிரகாஷ், முத்துக்குமரன், கார்த்திகேயன், வேலு பிரபாகரன், தனசேகரி, புவனேஸ்வரி, இளங்கோவன், சுந்தர், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
- வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது.
- டிரம்ப் கோர்ட்டில் ஆஜராகுவதையடுத்து ஜார்ஜியாவில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியதாக டிரம்ப் மற்றும் 18 பேர் மீது ஜார்ஜியா கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. அவருக்கு 25-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் மோசடி வழக்கு தொடர்பாக ஜார்ஜியா கோர்ட்டில் வருகிற 24-ந்தேதி டிரம்ப் சரண் அடைகிறார். இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் கூறும்போது, உங்களால் நம்ப முடிகிறதா? கைது செய்யப்படுவதற்காக நான் வியாழன் அன்று ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்கு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கோர்ட்டில் ஆஜராகுவதையடுத்து ஜார்ஜியாவில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிரம்ப் மீது ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது, அரசின் ரகசிய ஆவணங்களை வீட்டில் பதுக்கியது உள்ளிட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
- பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
உடுமலை:
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் கண் மற்றும் பல் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. மற்றும் அக்குபஞ்சர், பிசியோதெரபி சிகிச்சை நடத்தப்பட்டது.இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், உடுமலை ஜே.எம். எண்-1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே.எம். எண்-2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி, உடுமலை வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், பொருளாளர் பிரபாகரன், அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிசந்திரன், திருப்பூர் மாவட்ட வக்கீல் அருணாசலம் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
- மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்றது.
- மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.
திருப்பூர்:
தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின்பேரில், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரத்துக்குரிய குற்றவழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 2,387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.
இதில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, கூடுதல் மகளிா் நீதித் துறை நடுவா் காா்த்திகேயன், நீதித்துறை நடுவா் முருகேசன், வழக்குரைஞா்கள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
- 2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்கு களுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
- மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்று காலை 10 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது
நெல்லை:
2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்கு களுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடத்த சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தர விட்டுள்ளது. அதன்படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வால் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
மேற்கூறிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 200 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
மேலும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்று காலை 10 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) கேட்டுக் கொண்டுள்ளார்.
- தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வக்கீல் ஜெகனை கொலை செய்ய பணம் தருவதாக கூறியுள்ளார்
- நீதிமன்ற வளாகத்தில் இன்று வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜோசப் ராஜ ஜெகன். வக்கீல். இவர் கடந்த 18-ந்தேதி காலை தனது அலுவல கத்திற்கு வந்து கதவை திறந்த போது அங்கு அருகில் நின்றி ருந்த மர்ம நபர் அவரை தலையில் வெட்டினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரையும், அவரது கூட்டாளி ஒருவ ரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
கூலிப்படையினர்
போலீசார் நடத்திய விசாரணையில் வக்கீல் ஜெகனை வெட்டிக் கொல் வதற்காக வந்தவர்கள் கூலிப்படையினர் என்றும், சம்பவ இடத்திற்கு 3 பேர் வந்ததாகவும் ஒருவர் தப்பிவிட்டதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீ சார் நடத்திய விசார ணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வக்கீல் ஜெகனை கொலை செய்வதற்காக மூன்றடைப்பை அடுத்த பேரின்பபுரம் பகுதியை சேர்ந்த தனது நண்பரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சம் தருவதாக கூறியதை அடுத்து தாங்கள் வக்கீலை கொல்ல வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோர்ட்டு புறக்கணிப்பு
இந்நிலையில் வக்கீல் ஜெகன் கூலிப்படை யினரால் கொடூரமாக தாக்கப் பட்டதை கண்டி த்தும், சம்பந்தப் பட்ட வர்களை உடனே கைது செய்து அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று வக்கீல்கள் நீதிமன்ற பணி களை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொடூர தாக்குதலில் தொடர்புடைய மேலும் 4 பேரை உடனடி யாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
- வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது
மதுரை
அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதான வர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா ரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, அரிய உயிரினமான திமிங்கலத்தை வேட்டை யாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் அதே நேரத்தில் திமிங்கலம் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டபடி குற்றமாகுமா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்துஅரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.