search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "policeman"

    • நம்பர் பிளேட் இல்லாமல் வெள்ளை நிறத்தில் ஒரு கார் வேகமாக வருவதை கண்ட போலீஸ்காரர் கவுதம் ஜோஷி அந்த காரை நிறுத்த முயன்றார்.
    • சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் கார் சென்றபோது பேனட்டில் இருந்து போலீஸ்காரர் கவுதம் ஜோஷி கீழே விழுந்தார்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள கதிர்காம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் கவுதம் ஜோஷி மற்றும் போலீசார் அல்காபுரி பகுதியில் பாலத்தின் கீழ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வெள்ளை நிறத்தில் ஒரு கார் வேகமாக வருவதை கண்ட போலீஸ்காரர் கவுதம் ஜோஷி அந்த காரை நிறுத்த முயன்றார். ஆனால் கார் டிரைவர் காரை நிறுத்தவில்லை. மாறாக போலீஸ்காரர் கவுதம் ஜோஷி மீது மோதினார்.

    இதில் கார் பேனட்டில் தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரரை சுமார் 400 மீட்டர் தூரம் வரை கார் டிரைவர் இழுத்து சென்றுள்ளார். அப்போது சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் கார் சென்றபோது பேனட்டில் இருந்து போலீஸ்காரர் கவுதம் ஜோஷி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார் சம்பந்தப்பட்ட காரை துரத்தி சென்றனர்.

    எனினும் அந்த கார் வேகமாக சென்று விட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் கவுதம் ஜோஷியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கவுதம் ஜோஷி கார் பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் மீது மோதிய கார் டிரைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார்.
    • போலீசார் விரைந்து வந்து நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் நரேந்திரன்(48). போலீஸ்காரரான இவர் திருமுல்லை வாயல் போலீஸ் நிலையத்தில் தனிப்படைபிரிவில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில நேற்று இரவு அவர் திருமுல்லை வாயல் ஏரிக்கரை அருகே சென்றார். அப்போது அங்கு 8 பேர் கும்பல் மதுகுடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை நரேந்திரன் கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.

    இதனால் போதை கும்பலுக்கும் போலீஸ்காரர் நரேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது. நரேந்திரன் சாதாரண உடையில் இருந்ததால் அவர் போலீஸ்காரர் என்று தெரியாமல் போதை கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அருகில் கிடந்த இரும்பு கம்பியாலும் தலையில் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார்.

    உடனே போதை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு வந்த அவ்வழியே வந்தவர்கள் நரேந்திரன் படுகாயத்துடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டனர். தற்போது அதே போல் மீண்டும் சம்பவம் நடந்து உள்ளது.

    இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காவலரை தாக்கிய 8 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    • லாரி சக்கரத்தில் சிக்கிய போலீஸ்காரர் உடல் நசுங்கி பலியானார்.
    • திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 32). நரிக்குடி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் இன்று காலை போலீஸ் நிலையத்தில் இருந்து மானாசாலை செக் போஸ்ட்டிற்கு பணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மறையூர் பாலத்தை கடந்து வளைவில் சென்ற போது ராஜேசுவரனுக்கு எதிர் திசையில் வேகமாக வந்த லாரி ராஜேசுவரன் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்திற்குள் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ்காரர் மீது தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.
    • சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே உள்ள நகரி 4 வழிச்சாலையில் சம்பவத் தன்று சோழவந்தான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு சென்றவர்கள் விதிகளை மீறி பொதுமக்களை அச்சு றுத்தும் வகையில் கூச்ச லிட்டபடி சென்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் போலீஸ்காரர்களிடம் தகராறு செய்து தாக்கியது அம்பலத்தடி கிராமத்தை சேர்ந்த அசோக்கு மார்(வயது21), பிள்ளை யார்நத்தம் கிராமத்தை சேர்ந்த திருச்செந்தில்(20) ஆகிய 2 பேர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டார்.
    • மற்றொரு சம்பவத்தில் மகனும் சிக்கினார்.

    மதுரை

    மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருபவர் வரதராஜன். இவர் மதுரை ஆயுதப்ப–டையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

    இவர்கள் புதிய அரசு மருத்துவமனை பின்புறம் நின்று கொண்டு அந்த பகுதியில் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று பிடித்தனர்.

    உடனே அந்த பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்களும் தாங்கள் அணிந்து இருந்த ஹெல்மெட்டை கழற்றி, போலீஸ்காரர் மணி கண்டனை சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்கச்சென்ற தலைமைக் காவலர் வரதராஜனையும் சரமாரியாக தாக்கி உள்ள னர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு விசாரணை நடத்தியபோது இருவரும் சிவகங்கை மாவட்டம் சிதலூரை அடுத்த பில்லூரை சேர்ந்த நிறைகுளம் என்பவரது மகன்கள் அண்ணன், தம்பிகளான பிரவீன்குமார் (வயது 27) மற்றும் நவீன்குமார் (24) என்று தெரிய வந்தது. அவர்களை போலீ சார் கைது செய்தனர்.

    மதுரை போக்குவரத்து திட்ட பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜான்துரை (59). இவரது மகன் ஆரோக் கிய ஜெயமுத்து. இவர் திருமங்கலம் சியோன் நகர் 2-வது தெருவில் வசித்து வருகிறார். அவர் பழங்காநத்தம் ஆர்.சி. தெருவில் உள்ள பள்ளி ஒன்றில் தற்காலிக ஊழியராகவும் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களில் தந்தை, மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினையில் மனவருத்தம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மகனை பார்க்க அவர் வேலை செய்யும் பள்ளிக்கு தந்தை சென்றுள்ளார்.

    அங்கு தந்தை ஜான் துரையை ஆபாசமாக பேசிய மகன் அவரை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஜான்துரை சுப்பிரமணியபுரம் போலீ–சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தந்தையை தாக்கிய மகன் ஆரோக்கிய ஜெயமுத்துவை கைது செய்தனர்.

    மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு போலீஸ்காரர்கள் தாக்கப் பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மருகால்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). இவர் போலீஸ்காரராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார்.
    • தாக்குதல் தொடர்பாக டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). இவர் போலீஸ்காரராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார். நேற்று இவர் அங்குள்ள கல்மண்டபத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ராமையா மகன் குபேந்திரா, அவரது சகோதரர் வானுமாமலை, உறவினர் ஆனந்த் உள்பட 4 பேர், சரவணனிடம் இங்கு எப்படி படுக்கலாம் எனக் கேட்டு தகராறு செய்தனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த குபேந்திரா உள்பட 4 பேரும் சேர்ந்து, சரவணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குபேந்திரா உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
    • சோதனையில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு ஒரு பயணி நின்றார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வெளிப்பாளையம் போலீஸ் ஸ்டேசன் ஏட்டு கோடீஸ்வரன்(33) அந்த பயணியிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏட்டு கோடீஸ்வரன் அந்த பயணியை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் அந்த பயணியை லத்தியால் தாக்கி யது சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் பயணியை தாக்கியது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்கிற்கு தகவல் தெரிந்தது. உடனே இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜிடம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய எஸ்பி உத்தரவிட்டார். இதன்பே ரில் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் போலீஸ் காரர் பயணியை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு கோடீஸ்வரனை சோதனை செய்ய நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் குழுவினர் சோதனை செய்ததில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் மது அருந்தி ஒழூங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஏட்டு கோடீஸ்வரனை சஸ்பெ ண்ட் செய்து எஸ்பி ஹர்ஷ்சிங் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

    • சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர். கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார்.
    • நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர். கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் 3 நாட்கள் விடுமுறையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சரவணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சரவிஷம் குடித்த போலீஸ் ஏட்டுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    • போலீஸ்காரர் சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றார்.
    • போலீஸ்காரரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கோவை,

    கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், பிரசவத்திற்காக பெண்களும், குழந்தைகள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற ஏராளமான குழந்தைகளும் வந்து செல்கின்றனர்.

    கோவை சங்கனூரை சேர்ந்த ருக்மணி என்ற பெண் தனது 2-வது பிரசவத்திற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ருக்மணியுடன் அவரது மகன் 4 வயது சிறுவனும் வந்திருந்தான்.

    நேற்று மாலை அந்த சிறுவன் திடீரென மாயமானன். சிறுவனை அவரது தந்தை மணிகண்டன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி அலைந்தனர்.அப்போது மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஸ்ரீதர், மருத்துவமனையின் வெளிப்பகுதியில் திருச்சி சாலையில் ஒரு குழந்தை நிற்பதை பார்த்து அந்த குழந்தையிடம் பேசினார். 4 வயதே ஆன அந்த சிறுவனால் தன்னை முறையாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றார். அப்போது அந்த சிறுவன் தனது தாய் இருக்கும் வார்டை அடையாளம் காட்டினான். தொடர்ந்து விசாரித்ததில் சிறுவன் ருக்மணி மற்றும் மணிகண்டன் ஆகியோரது மகன் என்பது தெரியவந்தது.

    பின்னர் போலீஸ்காரர் ஸ்ரீதர் அந்த சிறுவனை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்துச் சென்றார். போலீஸ்காரரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • போலீஸ்காரர் சாவு சம்பவத்தில் வர்ம மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
    • திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). ஆயுதப்படை காவலரான இவருக்கு கண்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலியால் அவதிப்பட்ட காவலர் ராஜபாண்டி வில்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அவருக்கு அளித்த வர்ம சிகிச்சையில் தவறு ஏற்பட்டு தான் இறந்ததாக காவலர் ராஜபாண்டியின் மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில் இன்று காவலரின் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வந்ததை அடுத்து வர்ம மருத்துவமனை மருத்துவர் சிவசுப்பிரமணியத்தை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

    • தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற போலீஸ்காரர் திடீரென இறந்தார்.
    • பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவனியாபுரம்

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). இவரது மனைவி கண்மணி (30) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ராஜபாண்டி மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றினார். சில நாட்களாக இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து ராஜபாண்டி வில்லாபுரம் வீரபத்திரப்பிள்ளை காம்பவுண்டு பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று சிகிச்சை அளிக்கும் போது ராஜ பாண்டிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் ராஜபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி கண்மணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதில், கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள வெங்கட்ரங்கபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விஜயநாராயணம் போலீசார் தேடி வருகின்றனர்.
    • வெங்கட்ராயபுரம்-செட்டிகுளம் சாலையில் சிதம்பரபுரம் விலக்கு அருகே சென்ற போது எதிரில் சுடலைமுத்து வருவதை கண்ட போலீசார் அவரை பிடித்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வெங்கட்ரங்கபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விஜயநாராயணம் போலீசார் தேடி வருகின்றனர். சம்பவத்தன்று விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் போலீசாராக பணிபுரியும், அந்தோணி பிரபு, சரவணக்குமார் ஆகியோர் தலைமறைவான சுடலைமுத்துவை கைது செய்ய அவரை தேடி சென்றனர்.

    வெங்கட்ராயபுரம்-செட்டிகுளம் சாலையில் சிதம்பரபுரம் விலக்கு அருகே சென்ற போது எதிரில் சுடலைமுத்து வருவதை கண்ட போலீசார் அவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்து கொண்டிருந்த போது அங்கு வந்த சுடலைமுத்துவின் தாயார் சீதாலெட்சுமி, மனைவி பேச்சியம்மாள், அதே ஊரைச் சேர்ந்த சேர்மதுரை ஆகியோர் போலீஸ்காரர் அந்தோணிபிரபுவை கீழே தள்ளி தாக்கினர்.

    மேலும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். அத்துடன் போலீஸ்காரர்கள் பிடித்து வைத்திருந்த சுடலைமுத்துவுடன் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    இதுபற்றி போலீஸ்காரர் அந்தோணி பிரபு விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுடலைமுத்து உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்.

    ×