என் மலர்
நீங்கள் தேடியது "poisoned"
- வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
- இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.
4 மாணவிகள்
இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு தகவல்
இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 4 மாணவிகளும் விஷம் குடித்தது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சொந்த ஊருக்கு செல்லாமல் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனிடையே 4 மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த 22-ந்தேதி விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மாணவி இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் விசாரித்தபோது மாணவி, சக மாணவிகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரிவிக்காமல் ஏத்தாபூரில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் விடுமுறை நாளில் நேராக வீட்டிற்கு வராமல் தங்களின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் நீண்ட நேரம் விடுதியில் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.
விஷம் குடித்தனர்
இந்த நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பிய மாணவிகள், விடுதிக்கு பெற்றோர் வந்து விட்டு சென்றதை கேள்விப்பட்டனர். பெற்றோர், தங்களை அடித்து விடுவார்கள் என பயந்து நேற்று முன்தினம் மாலை எலிபேஸ்ட் வாங்கிக்கொண்டு விடுதிக்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது
விடுதி ஊழியர்களிடம் விசாரணை
மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் வாய்க்கால் பட்டறை அருகே உள்ள வால்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கலையரசி (வயது 34). இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.
- கடலூர் அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
- குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் பாவாடை. அவரது மனைவி ராஜலட்சுமி. இந்த பாவாடைக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவர் பாவாடை மது அருந்தி வீட்டுக்கு வந்த போது மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தார்.
இதனை பார்த்த அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செஞ்சி அருகே விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
- புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே நல்லாண் பிள்ளை பெற்றால் கிராமத்மை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மகள் லட்சுமி (வயது 26) இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுக்குக்ஷ முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த லட்சுமி வயிற்று வலி அதிகமாக இருந்ததால் திருவண்ணாமலைக்கு சிகிச்சைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாமியார் வீட்டில் சென்று அங்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.இதைப் பார்த்த கணவர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ் பென்னாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- பவானிசாகர் அருகே கணவர் இறந்த சோகத்தில் விஷம் குடித்த இளம் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி வளர்மதி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விபத்தில் தர்மராஜ் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் வளர்மதி சோகத்தில் இருந்து வந்தார். மேலும் கணவரை நினைத்து கொண்டு அவரின் படத்தை பார்த்து வளர்மதி அழுது கொண்டே இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சமாதானம் படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் வளர்மதி வீட்டில் சானி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை பார்த்து அவரது மகன் அழுது கொண்டு இருந்தார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர்.
அப்போது வளர்மதி மயங்கி கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.