என் மலர்
நீங்கள் தேடியது "விஷம்"
- பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
- அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது30). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். நாளடைவில் கீர்த்திவாசனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கீர்த்திவாசன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த கீர்த்திவாசன் அப்பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அப்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
இதையடுத்து கீர்த்திவாசனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டினார்.
இதனிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே கீர்த்திவாசன் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கீர்த்திவாசன் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
- விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- முஸ்லிம் தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற இந்த கொடும் செயலை இந்துத்துவ கும்பல் செய்துள்ளது.
கர்நாடகா மாநில பெலகாவி மாவட்டம் ஹுல்லிகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த கன்னட அரசு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளனர். இந்த விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர். அதில், இந்து வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் அப்பகுதி தலைவரும் அடக்கம்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக தான் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக" தெரிவித்தனர்.
முஸ்லிம் தலைமை ஆசிரியர் மீதான மத வெறுப்பால் பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்து வலதுசாரி கும்பல் விஷம் கலந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்" என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்
- சைத்ராவுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
- முதலில் இது புட் பாய்சன் ஆக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், தனது கள்ளக்காதலைத் தொடர்வதற்காக கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரின் உணவு மற்றும் காபியில் தூக்கமாத்திரை கலந்து கொல்ல முயன்ற சைத்ரா என்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஜேந்திரா என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த சைத்ராவுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சைத்ராவுக்கு ஷிவு என்ற நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த உறவுக்கு குடும்பத்தினர் தடையாக இருப்பார்கள் என்று அஞ்சிய சைத்ரா, அவர்களை விஷம் வைத்து கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
உணவு மற்றும் காபியில் நச்சு மாத்திரைகள் மற்றும் பிற பொருட்களைக் கலந்து கொடுத்ததால், குடும்பத்தினருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் இது புட் பாய்சன் ஆக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
கணவர் கஜேந்திராவுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பெலூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் சைத்ரா வேண்டுமென்றே உணவில் தூக்கமாத்திரை கலந்தது உறுதி செய்யப்பட்டது.
சைத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கள்ளக்காதலன் ஷிவு தலைமறைவாக உள்ளார்.
- இருவருக்கிடையேயும் சதா வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.
- சம்பவத்தின் பின் தலைமறைவான பிங்கியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகரின் பகேலா கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் சர்மா (30 வயது). இரண்டு வருடங்களுக்கு முன்பு பிங்கி (26 வயது) என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில் வேறொரு ஆணுடன் பிங்கி பேசுவதற்கு கணவர் அனுஜ் சர்மா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கிடையேயும் சதா வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிங்கி அனுஜின் காபியில் விஷம் கலந்ததாகக் கூறப்படுகிறது.
அதைக்குடித்ததும் அனுஜின் உடல்நிலை மோசடமைந்தது. அவர் கட்டௌலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் வேறொரு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் அனுஜின் சகோதரி கொடுத்த புகாரின்பேரில் பிங்கி மீது காலவத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தின் பின் தலைமறைவான பிங்கியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பிங்கிக்கு திருமணத்தின் முன்பே வெவேறு ஆணுடன் பழக்கம் இருந்ததாகவும் அவரின் விருப்பத்துக்கு மாறாக அனுஜ் உடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.
- ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர்பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார்.
- போலீசார் இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்ததினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23).
இவரது சொந்த ஊர் தமிழக- கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங்கரை ஆகும். அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார்.
கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார்.
சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.
அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாறசாலை போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது. அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பானத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகார் தொடர்பாக பாறசாலைபோலீசார் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர்பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார்.
இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக - கேரள எல்லையில் கல்லூரி மாணவன் ஷரோன் ராஜ் உயிரிழந்த விவகாரத்தில் காதலியே விஷம் கொடுத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக காதலி கிரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
- திடீர் உடல் நலக்குறைவால் கேரள ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த 25-ந் தேதி இறந்தார்.
- கிரீஷ்மா-ஷாரோன்ராஜ் சுற்றித் திரிந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிரீஷ்மாவை இன்று குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவரது மகள் கிரீஷ்மா ( வயது 23).
இவருக்கும் குமரி மாவ ட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன் ராஜ் (25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கமே காதலாக மாறி உள்ளது.இந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் கேரள ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த 25-ந் தேதி இறந்தார்.
இது தொடர்பாக அவரது தந்தை ஜெயராஜ், பாற சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதில், காதலி கிரீஷ்மாவை வீட்டில் சந்தித்து விட்டு வந்த பிறகு தான், தனது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனதாக குறிப்பிட்டு இருந்தார். இது குறித்த வழக்கை திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, விஷம் கொடுத்து ஷாரோன்ராஜ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவரது காதலி கிரீஷ்மா தான் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது அவர், காதலன் ஷாரோன்ராஜிக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து விஷ பாட்டில் உள்ளிட்ட தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கிரீஷ்மா வுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சய தார்த்தம் நடந்திருப்பதும் அதனால் தான் காதலனை கொலை செய்ய திட்ட மிட்டதும் தெரிய வந்தது. இதற்கிடையில், கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் உள்ளதாகவும் அதனால் தான் காதலனை திருமணம் செய்து பின்னர் கொலை செய்ய அவர் திட்ட மிட்டதாகவும் கூறப்பட் டது.
அதன்படி அவரை திருமணம் செய்த கிரீஷ்மா, கடந்த சில மாதங்களாகவே ஷாரோன் ராஜை கொலை செய்ய முயற்சித்திருப்ப தும், இதற்காக அவரை பல சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கியதும் தெரிய வந்தது. மேலும் அங்கு 'ஜூஸ் சேலஞ்ச்' என்ற பெயரில் ஷாரோன்ராஜிக்கு குளிர்பானத்தில் மெல்ல கொல்லும் விஷம் கலந்து கொடுத்ததாகவும் போலீசாரிடம் கிரீஷ்மா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் போலீசார், கிரீஷ்மாவை அவர் காதலனுடன் சென்ற இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டனர். அதன்படி முதலில் கிரீஷ்மாவை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஷாரோன்ராஜிக்கு குளிர்பானம் கலந்து கொடுத்த பாத்திரம் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து கிரீஷ்மாவை கேரளா அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர் ஷாரோன்ராஜூடன் செல்போனில் பேசிய ஆடியோவை போலீசார் ஏற்கனவே கைப்பற்றி உள்ளனர். அதில் இருப்பது கிரீஷ்மாவின் குரல் தானா என்பதை உறுதி செய்ய நேற்று கிரீஷ்மாவுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் அவர், ஷாரோன் ராஜை திருமணம் செய்த தாக கூறப்படும் வெட்டுகாடு தேவலாயத்திற்குஅழைத்துச் சென்று விசாரணை நடத்தி னர். அப்போது திருமணம் செய்த இடத்தையும் செல்பி எடுத்துக் கொண்ட இடத்தையும் போலீசாரிடம் கிரீஷ்மா காட்டியுள்ளார்.
இன்று காலை குமரி மாவட்டத்தில் கிரீஷ்மா-ஷாரோன்ராஜ் சுற்றித் திரிந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிரீஷ்மாவை இன்று குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.
ஷாரோன்ராஜை அவர் சந்தித்தது, காதல் மலர்ந்தது போன்றவை குறித்து கிரீஷ்மாவிடம் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அவரை திற்பரப்பு, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று போலீ சார் விசாரணை நடத்த உள்ளனர்.
- சம்பவத்தன்று வில்லுக்குறி 4 வழி சாலை அருகே சுஜித் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
- இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சுஜித் (வயது24). இவர் இரணியல் அருகே உள்ள ஒரு பேண்ட் செட் குழுவில் சிங்காரி மேளம் இசைத்து வந்தார். சம்பவத்தன்று வில்லுக்குறி 4 வழி சாலை அருகே சுஜித் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சுஜித் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வாழைக்கு தெளிப்பதற்கு வைத்திருந்த விஷத்தை குடித்து விட்டு தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
- பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள பூம்பள்ளி கோணம் மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் வினுகுமார்(வயது46), விவசாயி.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் சரிவர வேலைக்கு செல்வ தில்லை. சம்பவத்தன்று வினுகுமார் வீட்டில் இருந்து மது குடித்து உள்ளார்.
இதனை அவரது மனைவி கண்டித்து உள்ளார். ஆனால் அதனை வினுகுமார் கேட்கவில்லை. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.
இதனால் மனமுடைந்த வினுகுமார் வாழைக்கு தெளிப்பதற்கு வைத்திருந்த விஷத்தை குடித்து விட்டு தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் விரைந்து வந்து கார் மூலம் வினுகுமாரை காரக்கோணம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினு குமார் இன்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வினுகுமாரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
- மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி காந்தாரிவிளையை சேர்ந்தவர் மாகீன் (வயது 60). கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கும் உடைய இவர் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். கட்டிலில் படுத்த அவர் விஷம் குடித்து வாந்தி எடுத்தார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாகீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி பதர்நிஷா (55) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்
- அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது
நாகர்கோவில்:
நாகர்கோவில் புத்தன் பங்களா ரோடு அரசமூடு ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த வர் ராதா (வயது 56), ஆட்டோ டிரைவர். இவரது மகன் வினோத் (26).
இவர், நாகர்கோவிலில் உள்ள வணிக வளாகத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். நேற்று வினோத் மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வாந்தி எடுத்து உள்ளார்.உடனே அவரது தந்தை ராதா சென்று பார்த்த போது விஷ வாடை அடித்தது.
இதுகுறித்து வினோத்தி டம் கேட்டபோது விஷம் குடித்து இருப்பதாக தெரி வித்தார். அதிர்ச்சி அடைந்த வர் உடனடியாக மகனை மீட்டு சிகிச்சைக்காக நாகர் கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றிவினோத் பரிதாபமாக இறந் தார்.
இது குறித்து வடசேரி போலீசில் ராதா புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன், ஏட்டு சிவக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வினோத் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
அவர் காதல் தோல்வி யால் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பலியான வினோத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவி னர்கள் ஏராள மானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
- தீராத வயிற்று வலி இருந்து வந்ததால், மன வருத்தத்தில் எலி மருந்தை தின்றதாக கூறியுள்ளார்.
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வடக்கு தெரு மேல குளத்தைச் சேர்ந்தவர் பாபு.
இவரது 2-வது மகள் அபிஷா (வயது 19). இவர் இரவு வீட்டின் அறையில் தூங்கினார். இன்று காலை யில் அவர் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் சென்று பார்த்தனர்.
அப்போது அவர் தீராத வயிற்று வலி இருந்து வந்ததால், மன வருத்தத்தில் எலி மருந்தை தின்றதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிஷா பரிதாப மாக இறந்தார்.
இதுகுறித்து மார்த்தாண் டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் அக்ரகாரத் தெருவில் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
- உடல்நிலை சரியாகாததால், விரக்தி யில் இருந்த விஜயலட்சுமி, கடந்த 20-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் அக்ரகாரத் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). இவரது மனைவி விஜயலட்சுமி (38). இவர்கள் வெற்றிலை கொடிகாலுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் விஜயலட்சுமிக்கு கடந்த 3 வருடங்களாக உடல்நிலை பாதித்து இருந்தது. இதன் காரணமாக பல்வேறு மருத்து வமனைகளுக்கு சென்று விஜயலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல்நிலை சரியாகாததால், விரக்தி யில் இருந்த விஜயலட்சுமி, கடந்த 20-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த கணவரிடம் விஷம் அருந்தியதை கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக விஜயலட்சுமியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






