என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sena"

    • விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • முஸ்லிம் தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற இந்த கொடும் செயலை இந்துத்துவ கும்பல் செய்துள்ளது.

    கர்நாடகா மாநில பெலகாவி மாவட்டம் ஹுல்லிகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த கன்னட அரசு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளனர். இந்த விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர். அதில், இந்து வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் அப்பகுதி தலைவரும் அடக்கம்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக தான் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக" தெரிவித்தனர்.

    முஸ்லிம் தலைமை ஆசிரியர் மீதான மத வெறுப்பால் பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்து வலதுசாரி கும்பல் விஷம் கலந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்" என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்

    • ஸ்ரீராம் சேனா தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும்.
    • தமிழகத்தில் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது.

    இந்துக்கள் 3 ஆவது குழந்தை பெற்றால் 1 லட்சமும் 4வது குழந்தை பெற்றால் ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.

    ஓசூரில் நடைபெற்ற ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரமோத் முத்தாலி இவ்வாறு தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் பேசிய பிரமோத் முத்தாலிக், "ஸ்ரீராம் சேனா அரசியல் செய்யாது. அனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும். தமிழகத்தில் ஜிகாதி மற்றும் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது. அதற்கு திமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கான நிதியை அளிப்பது யார்? என பாராளுமன்றத்தில் சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். #ShivSena
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் ஊழல் தடுப்பு மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த், பா.ஜ.க.வின் ஊழல் ஒழிப்பு கொள்கைக்கும், நடைமுறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் செய்த அதே தவறை நாமும் செய்ய வேண்டுமா எனவும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார்.

    பிரதமர் மோடி நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிக்குமான நிதியை வழங்குவது யார்? என கேள்வி எழுப்பிய எம்.பி அரவிந்த், ஒருவேளை அரசாங்கத்தின் நிதியில் இருந்து செலவு செய்யப்படுமானால், அது சரியா எனவும் வினவினார்.

    தொடர்ந்து பேசிய எம்.பி, தேர்தல் ஆணையம் அனுமதித்த அளவு தொகையினை மட்டும் பயன்படுத்தி தேர்தலில் வென்றோம் என தங்கள் மனதை தொட்டு எம்.பிக்கள் கூற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    மேலும், தேர்தலின்போது எம்.பிக்கள் மாநில அரசு விருந்தினர் மாளிகையில் அனுமதிக்கப்படாமல் இருப்பதுபோல், அனைத்து பிரதமர்களும் தேர்தலின்போது தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு எம்.பியாக தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும், சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் தெரிவித்துள்ளார். #ShivSena
    ராம ராஜ்ஜியம் எனக்கூறி பாஜக அரசியல் செய்து வருவதாகவும், தன் பெயரைச் சொல்லி அரசியல் செய்யுமாறு ராமர் கூறவில்லை எனவும் பாஜகவை சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. #ShivSena #BJP
    மும்பை:

    சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த சுரேந்திர சிங், நாட்டில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்களை ராமராலும் கூட தடுக்க முடியாது எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இது பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது.

    இந்நிலையில், இதுதொடர்பாக சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டது. அதில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நாட்டில் பாஜக எவ்வாறு ராம ராஜ்ஜியம் அமைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுக்காமல், ராமராலும் கூட இதனை தடுக்க முடியாது என பாஜக கூறி வருவதாக விமர்சித்துள்ளது. இதையடுத்து, பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடும், இப்போது மற்றொரு நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

    நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள் மீதான கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் மாறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கைமீறிப்போனதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.

    இதுபோன்ற நிலையில் ராம ராஜ்ஜியம் எவ்வாறு அமைக்கப்படும்? அதற்கான திட்டங்கள் குறித்து பாஜக விளக்க வேண்டும் எனவும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

    ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் எனக்கூறி பாஜக அரசியல் செய்வதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன் பெயரை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமர் கூறவில்லை எனவும் சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #BJP
    ×