என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prime Minister"

    • அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியாவின் திருமணம் மார்ச் 5, 2026 அன்று நடைபெற உள்ளது.
    • திருமணக் கொண்டாட்டங்கள் மார்ச் 3-ம் தேதியே தொடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஆகியோரின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.

    இந்த சந்திப்பில் சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜுன் மற்றும் மருமகள் சானியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த சந்திப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அர்ஜுன் - சானியா திருமணத்திற்கு அழைப்பதில் பெருமை கொள்கிறோம். இளம் தம்பதியினருக்கு வழங்கிய ஆசிகளுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.

    அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியாவின் திருமணம் மார்ச் 5, 2026 அன்று நடைபெற உள்ளது. திருமணக் கொண்டாட்டங்கள் மார்ச் 3-ம் தேதியே தொடங்கிவிடும் எனவும் இது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்கும் ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது நிச்சயதார்த்தம் 2025, ஆகஸ்ட் 13 அன்று மிகவும் ரகசியமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் விவசாய பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
    • இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும் ஒரு சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் கொடுத்துள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை செயலாளர் புரூக் ரோலின்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வழியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இதன் மூலம் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடையும்.

    2024 ஆம் ஆண்டில், இந்தியாவுடனான அமெரிக்காவின் விவசாய வர்த்தக பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகை அமெரிக்க விவசாய பொருட்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும், மேலும் இன்றைய ஒப்பந்தம் இந்தப் பற்றாக்குறை சரி செய்யப்படும்" என்று தெரிவித்தார். 

    • வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.

    Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற NDA நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கைக்காக பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.

    • திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.
    • திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.

    பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின்(சி.ஏ.ஜி.) தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதமரின் கவுஷல் விகாஸ் யோஜனா என்கிற திட்டம் மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம் மேற்பார்வை செய்து வருகிறது.

    அசாம், பீகார், ஜார்கண்ட், மராட்டியம், கேரளா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மோசமான நிதி மேலாண்மை, மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.

    95.90 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 90.66 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வங்கிக்கணக்குகளில் இந்த நிதி உதவி வரவு வைக்கப்படவில்லை. பலரின் வங்கி கணக்குகளில் 2 முறை மற்றும் அதற்கு மேலான தடவையும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு.
    • ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கீடு.

    வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர் நாளை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.

    இதுதொடர்பாக வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது," ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 9 மணிக்கு புறப்படும் நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது" என்றார்.

    இந்த விமானம், ஜெர்மனியை தளமாகக் கொண்ட எப்.ஏ.ஐ விமானக் குழுமத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார்.

    கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், கடம்ப மரக்கன்றை பரிசாக அனுப்பி வைத்தார்.

    கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார். இதற்கு பதிலாக கடம்ப மரக்கன்றை மன்னர் சார்லஸ் அனுப்பி வைத்ததாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்தது.

    காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்றும் பிரிட்டன் தூதரகம் கூறியது.

    இந்நிலையில் நேற்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ' 7 லோக் கல்யாண் மார்க்கில்' மோடி நட்டு வைத்தார்.

    இது தொடர்பாக வெளியாகி உள்ள 40 வினாடிகள் கொண்ட வீடியோவில் பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும். 

    • இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.
    • இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

    உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை இமாச்சல பிரதேசம் புறப்பட்டு சென்றார். துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பிறகு அவர் புறப்பட்டார்.

    இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு பிரதமர் மோடி ரூ.1500 கோடி நிதியுதவி அறிவித்தார்.

    மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

    இமாச்சல பிரதேச பயணத்தை முடித்த பிறகு இன்று மாலை பிரதமர் பஞ்சாப் செல்கிறார்.

    • மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
    • “நியாயம் – சமத்துவம் – சமூக நீதி” என்பதையே தங்கள் அரசியல் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

    ராகுல்காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது என்ற அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல்லையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய "ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது" என்ற கருத்து, உண்மையில் மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

    இந்த நாடு ஜனநாயக நாடாகும். பிரதமர் யார் ஆக வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களின் வாக்குகள் தான். ஒன்றிய உள்துறை அமைச்சர் அல்லது ஏதேனும் ஒருவரின் வாய்மொழிக் கட்டளையோ, தாழ்வான அரசியல் கருத்தோ அதைக் குறிக்கவில்லை.

    இன்று முழு இந்தியாவிலும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என கோடிக்கணக்கான மக்கள் "நியாயம் – சமத்துவம் – சமூக நீதி" என்பதையே தங்கள் அரசியல் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். அந்த இலட்சியங்களுக்காகத் தான் ராகுல் காந்தி அவர்கள் போராடுகிறார்.

    நீதி, அன்பு, சமத்துவம் ஆகியவற்றை குரலாக எடுத்துரைக்கும் ஒருவரை மக்கள் பிரதமராக கொண்டு வருவார்களா, இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் . வரலாறு கூறுவது ஒரே உண்மை – மக்களின் விருப்பத்தை யாராலும் தடுக்க முடியாது.

    உண்மையில், இந்த மாதிரியான ஆளும் கட்சியின் தோல்விப் பயத்தை வெளிப்படுத்தும் கூற்றுகளே, ராகுல்காந்தி அவர்கள் நாளைய பிரதமர் என்ற உண்மையை உறுதியாக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.
    • இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசியலமைப்பு திருத்த மசோதா உட்பட 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.

    ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.

    குறிப்பாக கடுமையான கிரிமினல் குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

    எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
    • செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்

    பிரதமர் மோடி தனது இல்லத்தில் இன்று மாலை பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.

    இதில், இந்தியாவின் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அனைத்து துறைகளிலும் விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மக்களின் வாழ்வாதாரததிற்காக வழிவகை, வாழ்க்கை முறை வணிகம், தொழில் செய்வதை எளிமைப்படுத்துவதற்கும் செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

     இந்தக் கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்களுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

    • பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    உலன்பட்டர்:

    மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் தலைமையிலான மங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவரது மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதற்கிடையே அவர் தனது காதலியுடன் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூகவ லைதளங்களில் வைரலாகின. இதில் விலை உயர்ந்த பேக் மற்றும் ஏராளமான பைகள் இருந்தன. இது பெரும் விவாத பொருளான நிலையில் பிரதமர் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.

    தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் போதிய பெரும்பான்மையை அவர் பெறவில்லை. எனவே தனது பதவியை லவ்சன்னம்ஸ்ரைன் ராஜினாமா செய்துள்ளார்.

    • அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.
    • இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தெரிவித்தார்.

     ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (58 வயது).

    ஆஸ்தில்டர் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது இள வயது அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது தனது 22 ஆவது வயதில், 16 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    ஆஸ்தில்டர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அந்நாட்டில் கடும் கண்டனங்களை குவித்தது. இதனால் ஆஸ்தில்டர் வகித்து வந்த அமைச்சர் பதவிக்கே நெருக்கடி வந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் கிறிஸ்ட்ரூன், நேற்று முன் தினம் இரவு ஆஸ்தில்டரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    தனது ராஜினாமாவுக்கு பின் பேசிய அவர், "அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. இன்று இந்தப் பிரச்சினைகளை நான் நிச்சயமாக வித்தியாசமாகக் கையாண்டிருப்பேன். அப்போது அதற்கான முதிர்ச்சி என்னிடம் இல்லை" என்று கூறினார்.

    இதற்கிடையே இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர், "இது மிகவும் தனிப்பட்ட விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த விஷயத்தில் நான் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.

    ×