என் மலர்
நீங்கள் தேடியது "முதலமைச்சர்"
- அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.
- நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
டிஜிபி நியமனம்
டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அடுத்த டிஜிபி குறித்து முடிவு செய்யாதது ஏன்?
நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாமல் திமுக அரசு தடுமாறுவது ஏன்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகே டிஜிபி தேர்வு பட்டியலை தமிழக அரசு தயாரித்தது.
பட்டியலில் உள்ள 3 பேரும் கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதால்தான் திமுக அரசு தடுமாறுகிறது.
இன்னும் டிஜிபி நியமனம் செய்யப்படாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஜிபி நியமனம் முறையாக நடைபெற்றது.
விவசாயிகள் பாதிப்பு
திமுக அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகளுக்கு துயரம் ஏற்பட்டுள்ளது.
அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.
கொள்முதல் செய்வதிலும் தாமதம் கொள்முதல் செய்த நெல்லை அனுப்புவதிலும் தாமதம். நெல்லை கொள்முதல் செய்யாததால்தான் மழையில் நனைந்து முளைத்து விட்டன.
நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அளவுக்கு லாரிகள் இல்லை. மதுரை சோழவந்தான் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டது.
நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார். இப்போதும் நான் விவசாயிதான். முக ஸ்டாலின் விவசாயிகளுக்கு விரோதி.
முதலமைச்சர் விவசாயிகளை பார்க்க செல்லாமல் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டார்.
நெல் கொள்முதல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய அரசு என்ன கூறியது என்பதை தெரிவிக்க வேண்டும்.
மத்திய வேளாண் சட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் குறித்து முதல்வருக்கு தெரியுமா?.
3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதால்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம்.
ஆளுங்கட்சி செய்வதை நாங்கள் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
விவசாயிகள் பாதிக்கப்படும் போது திமுக எம்பிக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
காவிரி நதிநீர் பிரச்சனையில் 22 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
- கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை.
- இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம் என கூறினார்.
- ஒன்றிய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
- அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையினைத் திரும்ப பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவால் 08.09.2025 அன்று (எண். IA-Z-11013/136/2025-IA-I) வெளியிடப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அந்தக் குறிப்பாணையின் மூலம், பகுதி B-ல் அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி D-ல் அறிவிக்கப்பட்ட முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும், அத்தகைய அனைத்துத் திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகைப் பகுதியின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் கடற்கரை மணல் அமைப்புகளில் படிந்துள்ள அரிய மண் கனிம கூறுகளின் படிவுகளைக் கொண்டுள்ளன என்றும், இந்தக் கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் மணல் கடற்கரைகள் அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளன என்றும், அவை கடலரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிராக இயற்கைக் கேடயங்களாகச் செயல்படுகின்றன என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மேலும், இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிரியலை நிலைநிறுத்துகின்றன கரையோரங்களை உறுதிப்படுத்துகின்றன: கார்பனை பிரித்தெடுக்கின்றன மற்றும் கடல் அரிப்பிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய பகுதிகளில் சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கொண்டது என்றும், எனவே, உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கடுமையான ஆய்வு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1997-ம் ஆண்டு திருத்தப்பட்ட 1994-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பு, கட்டாய பொது மக்கள் கருத்துக் கேட்புகளை அறிமுகப்படுத்தியது என்பதை நினைவு கூர்ந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தப் பங்கேற்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பாதுகாப்பு 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பில் வலுப்படுத்தப்பட்டது என்றும், பொது மக்கள் கருத்துக் கேட்பிருந்து திட்டங்களுக்கு விலக்கு அளிப்பது என்பது, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும் உள்ளூர் சமூகங்களின் உரிமையைப் பறிக்கும் என்றும், இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும் என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் குறிப்பாணை, கடுமையான சட்டரீதியான கவலைகளையும் எழுப்புகிறது என்றும், மாண்புமிகு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த காலங்களில் சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய அலுவலகக் குறிப்பாணைகளை ரத்து செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு 5 , Alembic Pharmaceuticals Ltd. v. Rohit Prajapati & Ors. (2020) வழக்கில், மாண்புமிகு உச்சநீதிமன்றம், அலுவலகக் குறிப்பாணைகள் போன்ற நிர்வாக அறிவுறுத்தல்கள் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) கட்டமைப்பில் கணிசமான திருத்தங்களைக் கொண்டு வரமுடியாது என்றும், அத்தகைய கருவிகள் சட்டப்பூர்வ அறிவிப்புகளை மீற முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய அலுவலகக் குறிப்பாணை பொது மக்கள் கருத்துக் கேட்பிற்கு வழிவகுக்காமல், அனுமதிக்க முடியாத நிர்வாகச் சட்டத் திருத்தத்திற்குச் சமமாக உள்ளது என்றும், எனவே இது நிலைக்கத்தக்கதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும், மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கும், நமது நாட்டின் மக்களாட்சி நெறிமுறைகளுக்கும் எதிரானதாக இது அமையும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு. 08.09.2025 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணைமய உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை தான் வலியுறுத்துவதாகவும். கடந்த காலங்களில் எப்போதும் செய்யப்பட்டது போல. நாட்டின் முன்னேற்றத்திற்கு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு பங்களிப்பதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை இத்தருளணத்தில் மீண்டும் தான் வலியுறுத்த விரும்புவதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- முதலீடுகளின் அளவு மிகக்குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும்.
- தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
முதலீடுகளின் அளவு மிகக்குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும். இயல்பாக வரக்கூடிய சிறிதளவு முதலீடுகளையும், வருவதற்கு வழியில்லாத பெருமளவு முதலீடுகளையும் தாம் ஈர்த்து வந்ததாக முதலமைச்சர் நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது.
ஜெர்மனியில் திரட்டப்பட்ட ரூ.7020 கோடி முதலீடுகளில் குறைந்தது ரூ.5319 கோடி முதலீடு விரிவாக்கத் திட்டங்களுக்கானவை தான். இங்கிலாந்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.8496 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் அனைத்துமே விரிவாக்கத் திட்டங்களுக்கானவை தான்.
மொத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டு பயணத்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் 89 சதவீதம், அதாவது ரூ.13,815 கோடிக்கான முதலீடுகள் விரிவாக்கத் திட்டங்களுக்கானவை. இவற்றை தமிழ்நாட்டில் இருந்தே ஈர்த்திருக்க முடியும். இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டு இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கு முதலமைச்சர் சென்றிருக்கத் தேவையில்லை.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் இத்தகைய நாடகங்களை தி.மு.க. அரசு நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார்.
சென்னை:
'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
பின்னர் அவர், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 2-ந் தேதி லண்டன் சென்றார். அங்கு அந்நாட்டு மந்திரியும், நாடாளுமன்ற துணை செயலாளருமான (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடும், இங்கிலாந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு வால்டன் தெருவில் அமைந்துள்ள தமிழின் பெருமையை உலகறிய செய்த மேலைநாட்டு தமிழறிஞர் ஜி.யு.போப்பின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
'சட்ட மேதை' அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார். 'தத்துவ ஞானி' என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.
தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, அயலக தமிழர்களுடன் சந்திப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.
துபாய் வழியாக அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 8.05 மணியளவில் சென்னை விமானம் நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் வாயில் அருகே அவரை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்கிறார்கள். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
வரவேற்பு நிகழ்வுக்கு பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து, 'ஜெர்மனி, லண்டனில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை பட்டியலிடுவார் என்று தெரிகிறது.
- 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.
- இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்பு திருத்த மசோதா உட்பட 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.
குறிப்பாக கடுமையான கிரிமினல் குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கேளிக்கை வரி 8%-ல் இருந்து 4%-ல் ஆக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- இந்த கேளிக்கை வரியை குறைத்தது உண்மையிலேயே இது திரைத்துறையின் வளர்ச்சிக்கு பயனாற்றக்கூடியதாகும்.
தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%-ல் இருந்து 4%-ல் ஆக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சியான வரவேற்கத்தக்க செய்தி. தமிழ்நாடு முதல்வர் முகஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த கேளிக்கை வரியை குறைத்தது உண்மையிலேயே இது திரைத்துறையின் வளர்ச்சிக்கு பயனாற்றக்கூடியதாகும்.
ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரிகளால் சில ஆண்டுகளாக தமிழ்த் திரைத்துறை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால் தமிழ்த்திரையுலகம் நன்மைபெறும். நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது அந்த கோரிக்கை வெற்றிபெற்றிருக்கிறது.
தமிழ்த் திரைத்துறை சமீபகாலமாக எதிர்கொண்டு வரும் மிக கடினமான சூழலில், இந்த வரிக்குறைப்பு தயாரிப்பாளர்களுக்கு பெரும் கமை குறைப்பாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டுகளிலேயே அமர்ந்து திரைப்படம் பார்ப்பவர்களுக்கும், அலைபேசி வாயிலாக செயலிகளில் திரைப்படங்களை காணப்பழகி வரும் ரசிகர்களையும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மீண்டும் அழைத்து வரும் ஒரு நல்ல மாற்றமாகவும் இந்த கேளிக்கை வரி குறைப்பு அமையும் என்று நம்புகிறேன் என அவர் அறிக்கையில் கூறினார்.
- சூப்பர் பெட் கிளாசிக் செஸ் போட்டி ருமேனியா நாட்டில் நடைபெற்றது.
- இந்த தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
புகரெஸ்ட்:
சூப்பர் பெட் கிளாசிக் செஸ் போட்டி ருமேனியா நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா,பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா பிரூஸ்ஜா ஆகியோருடன் சமநிலையில் இருந்தார்.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் 2 டை பிரேக்கர் போட்டிகள் சமனில் முடிவடைந்த நிலையில் 3-வது டை பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ருமேனியா சூப்பர் பெட் செஸ் கிளாசிக் தொடரில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அவரது அசாத்திய திறமை வெளிப்பட்டது. செஸ் போட்டிகளில் இந்த அற்புதமான தருணத்தை தமிழ்நாடு கொண்டாடுகிறது என முதலமைச்சர் கூறினார்.
- சபாநாயகர் அப்பாவு பேச்சு
- காவலர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட ஓய்வு பெற்ற போலீஸ் துறை அலுவலர் சங்கத்தின் 42-வது பொதுக்குழு கூட்டம் இன்று நாகர்கோவில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சாம் நெல்சன் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கிருஷ்ணபிள்ளை மாணிக்க ராவ், செல்வின் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு சட்ட பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் கிருஷ்ண ரேகா போலீஸ் துறை சார்பாக வெளிநாட்டில் நடந்த விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்றதை பாராட்டி அவருக்கு சபாநாயகர் அப்பாவு பொன்னாடை அணிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஒய்வுபெற்ற போலீசார் பல ஆட்சியை, அரசை, பல அதிகாரிகளை பார்த்தி ருப்பீர்கள். நீங்கள் பல அனுபவங்களை பெற்றி ருப்பீர்கள். 1981-ம் ஆண்டு தான் குமரி மாவட்டத்தில் தமிழகத்திலேயே ஓய்வு பெற்றவர்களுக்கு என சங்கம் உருவாக்கப்பட்டது.தி.மு.க. ஆட்சியில் தான் போலீசாருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.
ஊதிய முரண்பாடுகளை கலைந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பதை நீங்கள் மறந்தி ருக்க முடியாது. பெண் போலீசாரை பணியில் அமர்த்தியதும் அவர் தான்.போலீசாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தி உள்ளார்.
தற்பொழுது முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து துறை ஊழி யர்களின் பிரச்சினைகளை அறிந்து சிறப்பாக செயல் பட்டு வருகிறார். கேட்ட திட்டங்களை மட்டும் இன்றி கேட்காமல் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருவது தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி.
போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க ஆணை பிறப்பித்தவர் அவர் தான் என்பதை நீங்கள் மறந்துவிட முடியாது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் தமிழகத்தில் டி.ஜி.பி. யாக இருப்பது மாவட்டத்திற்கு பெருமை ஆகும்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, போலீசார் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 24 மணி நேரமும் போலீசார் உழைத்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற போலீசாரின் கோரிக்கைகள் முதல மைச்சரின் கவன த்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் மற்றும் செயலாளருமான ராஜாசிங் ஆண்டறிக்கை வாசித்தார். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி பேரா சிரியர் ஸ்ரீ லதா மருத்துவ விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், சங்க மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் கிறிஸ் டோபர், மாவட்ட செயலா ளர் ஐவின், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஓய்வு பெற்ற காவலர் நல வாரியம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதை விரைந்து செயல்படு த்திட தமிழக அரசும், காவல் துறையும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறையில் உள்ள தேர்வுகளில் போலீசா ரின் வாரிசுகளுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.
காவலர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.
- கல்லூரி கட்டிடமானது 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.82.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை பண்ணைக்கி ணற்றை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்பு. பால்வளம். மற்றும் மீன்வளத்துறை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலைய புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். கல்லூரி கட்டிடமானது 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 82.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 15 துறைகள் கால்நடை உடற்கூறியல்,உடற்செயலியல்,கால்நடை உற்பத்தி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மருத்துவ பண்ணை வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்கும் விடுதி, உணவகம் ஆகிய வசதிகள் மற்றும் கால்நடைகள். கோழிவளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் அ குமரவேல், பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் பா.குமரவேல் பேராசிரியர் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம்,உதவி செயற்பொறியாளர்கள் முத்துப்பாண்டியன்,முருகன்,பொறியாளர்கள் ரஜினிகாந்த்,கண்ணன்,ஆர். கே ஆர் .கல்வி நிறுவனத் தலைவர் ஆர். கே. ராமசாமி, நிர்வாகப் பொறியாளர் பொதுப்பணித்துறை தியாகராஜன்,கால்நடை உற்பத்தி மேலாண்மை துறை மருத்துவக் கல்லூரி,ஆராய்ச்சி நிலையம்,பேராசிரியர் மற்றும் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாற்றுக்கட்சியினர் 10,000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
- திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் மாற்றுக்கட்சியினர் 10,000பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிமன்ற 4வது கவுன்சிலர் மைதிலி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 9வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி, சாமளாபுரம் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் பாலசந்தர் உள்பட பலர் திமுகவில் இணைந்தனர்.
- தமிழகத்தில் இரண்டு கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
- மாற்றுத்தி றனாளிகள் மத்தியில் தமிழக அரசின் மீது மிகுந்த நம்பிக்கையும், வரவேற்பும் கிடைத்துள்ளது.
திருப்பூர் :
ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வருக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நன்றிதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழகத்தில் இரண்டு கால்கள் இழந்த மாற்றுத்தி றனாளிகளுக்கு அரசு நிதியில் இருந்து மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளும், தங்களுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட வேண்டுமென அதிகப்ப டியான கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. அதனடி ப்படையில் ஒரு கால் இழந்த மாற்றுத்திற னாளிகளுக்கும், அரசு நிதியிலிருந்தோ, அல்லது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தோ வழங்கிட வழிவகை செய்து தர வேண்டுமென கடந்த 2.7.2022 தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் , அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.
எனது கோரிக்கையினை ஏற்று தற்போது நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கையின் போது, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். இந்த அறிவிப்பினால் மாற்றுத்தி றனாளிகள் மத்தியில் தமிழக அரசின் மீது மிகுந்த நம்பிக்கையும், வரவேற்பும் கிடைத்துள்ளது.
எனது கோரிக்கையினை தாயுள்ளத்துடன் பரிசீலித்து, மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் சட்டப்பேரவையில் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் , அமைச்சர் , துறை சார் அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு செல்வராஜ் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.






