search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karur"

    • மரங்கள் சூழ்ந்து வனப்புடன் எழில்மிகுந்து காணப்படும்.
    • இறைவனின் இருப்பிடமாக கோவில்களுடன் காட்சியளிக்கின்றன.

    பல்லுயிர்களின் வாழ்விடமாக விளங்குவது மலைகள். நிலத்தினின்றும் உயர்ந்து மரங்கள் சூழ்ந்து வனப்புடன் எழில்மிகுந்து காணப்படும் சில மலைகளை மேகங்கள் உச்சி முகர்ந்து செல்லும். இது ஒரு வகையென்றால் சில மலைகள் பாறை அடுக்குகளாக காட்சியளிக்கும்.

    இவை போன்று எத்தகையதாயினும் பல மலைகள் இறைவனின் இருப்பிடமாக கோவில்களுடன் காட்சியளிக்கின்றன என்றால் அது மிகையாகாது. அத்தகைய மலைகளுள் ஒன்றாக விளங்குவதுதான் கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோன்றிமலை. ஊரின் பெயரும் அதுவே.

    தாந்தோன்றிமலை என்பதற்கு நேராக பொருள் கொண்டால் தானாக தோன்றிய மலை என்றாகிறது. மேலும் தாமான் தோன்றிக்கோள் எனும் குறுநில மன்னன் இந்த மலையை தனது இருப்பிடமாக கொண்டு, சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டுவந்தான் என்பது புறநானூற்று பாடல் மூலம் அறியப்படும் செய்தியாகும்.

    இதனால் இந்த மன்னனின் நினைவாக இவ்வூர் இப்பெயரை பெற்றிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த மலை இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அடியார்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பல்வேறு கருத்துகளும் உள்ளன.

    இதேபோல் இந்த மலையை சம்பந்தப்படுத்தி ஒரு புராண கதையும் உள்ளது. அதாவது ஒரு சமயத்தில், திருப்பாற்கடலில் திருமால் தனது அந்தப்புரத்தில் திருமகளுடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். வாயிலின் வெளியே ஆதிசேஷன் காவல் புரிந்தார். அப்போது இறைவனை தரிசிப்பதற்காக அங்கு வந்த வாயுபகவான் உள்ளே நுழைய முயன்றார். ஆனால் ஆதிசேஷனோ, வாயுபகவானை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதமும், யார் பலசாலி என்பது பற்றிய சச்சரவும் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் வெளியே வந்த திருமால், 2 பேருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தார். அப்போது இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார். அதாவது ஆதிசேஷன் திருவேங்கட மலையை தனது உடலால் அழுத்தி பிடித்துக்கொள்ள வேண்டும். வாயுபகவான் அதை தனது பலத்தால் அசைத்து தன்வசப்படுத்த வேண்டும் என்பது அந்த போட்டியாகும். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள போட்டி தொடங்கியது.

    போட்டியின் விதிப்படி ஆதிசேஷன் திருவேங்கட மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான் தனது முழு பலமும் கொண்டு பெரும் புயலாக வீசியபோது அம்மலையின் சிறுசிறு பாகங்கள் சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன.

    அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தாந்தோன்றிமலை ஆகும், என்பதே அந்த கதையாகும். அதனால் திருவேங்கட மலைக்கு தெய்வீக சக்தி இருப்பது போன்று, அதனில் இருந்து சிதறிய குன்றுகளுக்கும் தெய்வீக சக்தி உண்டு என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மலை தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.

    குடைவரை கோவில்

    தென் திருப்பதி என்ற பெயருக்கு ஏற்ப இங்கு இறைவன் கல்யாண வெங்கடரமண சுவாமியாக கோவில் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பொதுவாக கோவில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இந்த கோவிலோ மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு குடைவரைக் கோவில் ஆகும். அதற்கேற்ப கருவறை விளங்குகிறது.

    இங்கு பாறையோடு ஒட்டிய நிலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி தன் மார்பில் லட்சுமியைத் தாங்கி நின்ற வண்ணம் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவர் நான்கு கைகளை கொண்டுள்ளார். கோவிலின் அர்த்த மண்டபம், நுழைவு மண்டபம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தம்.

    தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக-வினர் முற்றுகையிட முயன்றதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. முற்றுகையை தொடர்ந்து, அங்கு சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருமான வரித்துறை அதிகாரி திமுக பிரமுகரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அதிகாரிகளை திமுக-வினர் தாக்கினர். மேலும் அவர்களது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். அதிகாரிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் கரூர் காவல் நிலையம் விரைந்தனர். இதே போல் கரூரில் மற்ற இடங்களிலும் வருமான வரி சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனன் கூறியதாவது.,

    "கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினரையும் அழைத்து வரவில்லை. சோதனைக்கு வந்த அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்."

    "சோதனை நடக்கும் இடங்களில் 150-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும். ," என்று தெரிவித்தார். 

    • பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • தேவையான இடத்தில் 1 மணி நேரம் முறைப்படுத்தி இயக்கப்படும்.

    திருப்பூர் :

    பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பாலக்காடு-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாலக்காடு-திருச்சி ரெயில் (எண்.16844) கரூர்-திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதுபோல் திருச்சி-பாலக்காடு ரெயில் (எண்.16843) நாளை தேவையான இடத்தில் 1 மணி நேரம் முறைப்படுத்தி இயக்கப்படும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கரூர் மாவட்டத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்த 19 பேர் மீட்பு
    • கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு, தனியார் காப்பகங்களில் சேர்க்க ப்பட்டனர்.

    கரூர்,

    கரூர், குளித்தலை பகுதிகளில் வசிப்பிடம், ஆதரவின்றி கோவில், பஸ் நிலையத்தில் , சாலையோரம் தங்கி யாசகம் பெற்று சுற்றிக்கொண்டிருந்த, 19 பேரை போலீசார் மீட்டு விசாரணை செய்தனர். அவரில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு, தனியார் காப்பகங்களில் சேர்க்க ப்பட்டனர்.

    இது போன்று ஆதரவின்றி உள்ள நபர்களை பிச்சை எடுக்க வைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், யாராவது செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தட்டார்மடம், மணிநகர் உள்ளிட்ட 24 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பட்டதாரிகள் உள்ளிட்டோர் கரூருக்கு சென்று வர சாத்தான்குளத்தில் இருந்து விரைவு பேருந்து வசதி இல்லை.
    • இப்பகுதி பொதுமக்கள் கரூர் பகுதியில் வியாபார கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான தோப்பு வளம், சுப்பிரமணியபுரம், முதலூர், போலையர்புரம், பொத்தகாளான் விலை, பண்டாரபுரம், புதுக்குளம், தட்டார்மடம், மணிநகர் உள்ளிட்ட 24 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பட்டதாரிகள் உள்ளிட்டோர் கரூருக்கு சென்று வர சாத்தான்குளத்தில் இருந்து விரைவு பேருந்து வசதி இல்லை.

    இதனால் இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் பட்டதாரிகளும் பொதுமக்களும் கரூருக்கு சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. எனவே சாத்தான்குளத்தில் இருந்து கரூருக்கு நேரடியாக விரைவு பேருந்து இயக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், இப்பகுதி வியாபாரிகளும், பட்டதாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இது குறித்து முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சதாசிவன் கூறுகையில், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கரூர் பகுதியில் வியாபார கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    மேலும் படித்த பட்டதாரிகள் வேலை பணி நிமித்தமாக அடிக்கடி கரூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் சாத்தான்குளத்தில் இருந்து கரூருக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி, வள்ளியூர் போன்ற நகரங்களுக்கு சென்று, அங்கிருந்து மதுரை, திண்டுக்கல் சென்று கரூருக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    எனவே சாத்தான் குளத்திலிருந்து கரூருக்கு பொதுமக்கள் நலம் கருதியும் வியாபாரிகள் நலன் கருதியும் நேரடியாக அரசு விரைவு பஸ் இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    மேலும் இது குறித்து முதல்-அமைச்சர் , மாவட்ட கலெக்டர், மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும், நகர காங்கிரஸ் கட்சி சார்பிலும், நகர ம.தி.மு.க. கட்சி சார்பிலும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    கோரிக்கை மனுக்களில் மதுரை, திண்டுக்கல் சுற்றி செல்லும் நிலையில் உள்ள சாத்தான்குளம் பகுதி மக்களின் நலம் கருதி சாத்தான்குளத்தில் இருந்து நேரடியாக கரூருக்கு அரசு விரைவு பஸ் இயக்கிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

    கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி அருகில் நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #FireinAmbulance
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி அருகில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக சென்றுகொண்டிருந்தது. 

    அப்போது திடீரென ஆம்புலன்சின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த, ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளே இருந்தவர்களை எச்சரித்து அதிலிருந்து வெளியேறினார். 

    இதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி, அவருடன் வந்தவர்கள் மற்றும் 2 நர்ஸ்கள் கீழே இறங்கினர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

    தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் ஆம்புலன்சில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் சாலையின் நடுவில் ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #FireinAmbulance
    கரூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #LSPolls
    கரூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு கடந்த 10-ந்தேதி வெளியானது. அப்போது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அதையும் மீறி தினந்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதில் ஏராளமான வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி நகைகள், மின் சாதன பொருட்களும் சிக்கியுள்ளன.

    இந்த நிலையில் கரூர் அருகே நள்ளிரவில் நடந்த வாகன சோதனையில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மதுரை அய்யர்பங்களா சரோஜினி காலனியில் தனியார் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்கம், வெள்ளி நகைகள் வியாபாரிகள், நகை செய்வோர்களிடம் இருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள 13 நகைக்கடைகளில் ஒப்படைப்பதற்காக நகைகளை எடுத்துக்கொண்டு ஆம்னி வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வேனை டிரைவர் கிருபாகரன் ஓட்டிச் சென்றார். மேலும் கூரியர் நிறுவன மேலாளர் மற்றும் துப்பாக்கியுடன் 2 பாதுகாவலர்களும் அந்த வேனில் வந்தனர்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி பட்டிக்கோட்டை சோதனைச்சாவடி அருகே நள்ளிரவில் அந்த வேன் வந்தபோது அங்கு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் மறித்தனர். நிலையான ஆய்வுக்குழு அதிகாரி குழந்தைவேலு வேனில் எடுத்து வரப்பட்ட பொருட்கள் குறித்து கேட்டபோது அதில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

    ஆனால் அதில் பெரும்பாலான நகைகளுக்கு உரிய ஆவணம் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகைகளுடன் அந்த வேன் இன்று அதிகாலை கரூர் கலெக்டர் அலுவலக வளாத்திற்கு கொண்டு வரப்பட்டது. வேனில் வந்தவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதில் 94 கிலோ 894 கிராம் தங்க நகைகள் கொண்டு வரப்பட்டது தெரிந்தது.

    அதன் மதிப்பு ரூ.5 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி வேனில் எடுத்து வரப்பட்ட நகைகளை ஆய்வு செய்து, உரிய ஆவணங்கள் இருந்தால் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும், இல்லையேல் அவை அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். கரூரில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #LSPolls

    திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
    குளித்தலை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழகுறப்பாளையத்தில் உள்ள திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அதில் வெளிநாட்டு பணம் 36 யூரோ நோட்டுகள் இருந்தது (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 832) கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதால் காரில் வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், காரில் வந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலஞ்சோ (வயது 35) என்பதும், இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. தற்போது வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்திருக்கும் அலஞ்சோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

    வெளிநாட்டு பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்திற்கு உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் அவற்றை திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சி குழுமணி சாலை லிங்கநகர் சோதனைச்சாவடியில் பறக்கும் படையை சேர்ந்த தாசில்தார் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஏகிரிமங்கலம் என்ற இடத்தில் வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அந்த காரில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், அவரது மனைவி பிரசன்ன குமாரி ஆகியோர் இருந்தனர். அவர்கள் ரூ.1 லட்சம் வைத்து இருந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்காததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைத்தனர்.

    சுந்தர்ராஜ்-பிரசன்னகுமாரி தம்பதி, அதிகாரிகளிடம் தங்களுடைய மகளுக்கு வருகிற 31-ந்தேதி காதணி விழா நடத்த இருப்பதால் துணிமணிகள் எடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினர். காதணி விழா அழைப்பிதழையும் அதிகாரிகளிடம் காட்டினர். ஆனாலும் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் அந்த தம்பதியினர் காதணி விழாவுக்காக வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டார்களே? என்ற வேதனையுடன் புலம்பியபடி சென்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக பணத்தை எடுத்து செல்பவர்கள் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்களை கையில் வைத்து இருக்க வேண்டும். அப்படி வைத்து இருந்தால் தான் பணம் பறிமுதல் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும் என்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கூழையன்விடுதியில் பறக்கும் படையை சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி நடராஜன் தலைமையில் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஒரு காரில் இருந்த ஒரு பொருளை, லாரிக்கு மாற்றினர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். லாரியில் சோதனையிட்டபோது அதில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெல் வியாபார பணத்தை வைத்திருந்ததாக லாரி டிரைவர் தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #ParliamentElection


    கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
    கரூர்:

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, காதப்பாறை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, கோயம்பள்ளி, சேமூர், வாங்கல் குப்புச்சிபாளையம், மண்மங்கலம், நெரூர் தெற்கு மற்றும் வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலை மேம்பாடு செய்தல், சாக்கடை வசதி செய்தல், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் என ரூ.2 கோடியே 56 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி அரசு காலணி-சோமூர் கல்லூப்பாளையம்- அச்சமாபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.36 லட்சத்து 55 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 3 சமுதாய கூடங்களையும், கோயம்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தையும் திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதகிளில் இன்று 13 இடங்களில் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலப்பாளையம் புலியூர் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப்பாலத்தின் அணுகு சாலையை கரூரை சுற்றி அமையவுள்ள சுற்றுவட்டச்சாலையுடன் இணைத்து சாலை வசதி மேம்படுத்தப்படும். கோயம்பள்ளி, செல்லிபாளையம் ஊராட்சிகளில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையத்தில் ஆதார் எண் பதிய தவறியதால் அரிசி பெற இயலவில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையம் ஊராட்சியில் ஆதார் எண் பதியாமல் விடுபட்டுள்ள நபர்களின் குடும்ப அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்திட சிறப்பு முகாமினை நடத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோ, கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பரமேஸ்வரன், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, முன்னாள் மாணவரணி தலைவர் என். தானேஷ், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கரூரில் புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்ட தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலய கூட்டரங்கில் நடந்தது-. மாவட்ட அவை தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு:-

    வாங்கல் - மோகனூர் உயர்மட்ட பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டும் மின்இணைப்பு கொடுக்கப்படாததால் இருள் சூழ்ந்தபடி இருக்கிறது. எனவே அங்கு மின்விளக்குகள் எரிவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயர்மட்ட பாலப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வாங்கல் அல்லது தவுட்டுப்பாளையம் பகுதியில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். கரூருக்கு புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். அதுவரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கரூர் பஸ் நிலையத்தில் நகரும் படிகட்டுகள் அமைக்க வேண்டும்.

    மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற கருத்தினை முன்வைத்து அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை சுட்டி காட்டி ஊராட்சி சபை கூட்டம் நடத்த வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே. மணி, வக்கீல் மணிராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ரமேஷ்பாபு, எம்.எஸ்.கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் எம். ரகுநாதன், ஆர்.கந்தசாமி, எம்.எஸ்.மணியன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMK
    கரூர் பஸ் நிலையம் அருகே குக்கரை உடைத்து அ.தி.மு.க.வினர் நூதன போராட்டம் நடத்தினர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி அக்கட்சியில் இருந்து திடீரென விலகினார். பின்னர் சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தன்னை இணைத்துக்கொண்டார். இது கரூர் மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் செந்தில்பாலாஜிக்கு வழியனுப்புவிழா என நூதன போராட்டத்தினை நடத்தினர். கரூர் மனோகரா கார்னரில் திரண்ட அ.தி.மு.க.வினர், தி.மு.க, பிறகு ம.தி.மு.க, அதன்பின்னர் அ.தி.மு.க, பின்னர் அ.ம.மு.க என மாறிய செந்தில்பாலாஜி தற்போது, 5-வது முறையாக தி.மு.க.விற்கு தாவியுள்ளார். விரைவில் கட்சி தாவலில் அவர் சாதனை புரிவார் என கூறி அவரது கட்சி மாற்றத்தை கிண்டலடித்து பட்டாசு வெடித்தனர். மேலும் “5-வது முறையாக கட்சி மாறுபவருக்கு வழியனுப்பு விழா” என்கிற வாசகங்கள் எழுதிய அட்டையினை கையில் ஏந்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    மேலும் இனிப்பும் வழங்கினர். இதையடுத்து குக்கருக்கு விசில் அடித்த செந்தில்பாலாஜி, அதனை வெடித்து சிதற வைத்து விட்டாரே... என கூறி அ.தி.மு.கவினர் குரல் எழுப்பினர். இதனை வெளிப்படுத்தும் விதமாக கரூர் பஸ் நிலையம் அருகே அலுமினிய குக்கரை தரையில் போட்டும், சம்மட்டியால் அடித்தும் நொறுக்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடோடி வந்து நொறுங்கிய குக்கர் பாகங்களை அள்ளிச்சென்றனர்.

    கரூர் அருகே பல்நோக்கு மைய கட்டிடத்தில் ரேசன்கடை மற்றும் ஆவின் பால் நிலையத்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், பரமத்தி வட்டம், பவித்திரம் ஊராட்சி, பள்ளமருதப்பட்டி பகுதியில் பல்நோக்கு மைய கட்டடத்தில் பகுதிநேர நியாய விலைக்கடை மற்றும் ஆவின் பால் நிலையம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் த. அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அதனை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 583 நியாய விலைக் கடைகள் வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் 20 கிலோ விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. சிறு கனிம வள நிதி திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில் இப்பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் பகுதி நேர நியாய விலைக்கடை மற்றும் ஆவின் நிலையம் இன்று பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பகுதி நேர நியாயவிலைக்கடை தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. இங்கு 341 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மாவட்ட வழங்கல் அலுவ லர் மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன், தாசில்தார் பிரபு (அரவக்குறிச்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிக்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், மார்க்கண்டேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×