என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Seeman"
- லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாக உருவெடுத்தது.
- அவரது கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.
சென்னை:
லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மன்சூர் அலிகானின் இந்தக் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் சொன்ன ஸ்டேட்மெண்ட்டு, தமிழிசை செளந்தரராஜன் அம்மா வரைக்கும் போயிருச்சி. அது மட்டுமா.. குஷ்பூ மேடம் உடனே, மகளிர் ஆணையத்திடம் சொல்லி ஆக்சன் எடுக்க வைப்பேனு சொல்றாங்க. அடேங்கப்பா.. பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பா இருக்காங்கப்பா.
ஆனால் ஒரு விஷயம் எனக்கு புரியல. ஆகஸ்டில் நானும் வீரலட்சுமியும் வந்து சீமான் மேல கம்ப்ளெய்ன்ட் பண்ணோம் இல்லையா.. அப்போ சீமானும், நாம் தமிழர் கட்சிக்காரங்களும் என்னையும், வீரலட்சுமியையும் ரொம்ப கொச்சையா பேசுனாங்க. ரொம்ப ஆபாசமா பேசுனாங்க.
இதனால எனக்கு மன அழுத்தம் அதிகமாகி குஷ்பு மேடமுக்கு வீடியோ போட்டே சீமான் மீது நடவடிக்கை எடுக்க சொன்னேன். ஆனால் மேடம் கண்டுக்காமயே விட்டுட்டாங்க. ஏன்? ஒருவேளை, பா.ஜ.க.வுக்கு ஒரு பிரச்சினைனா சீமான் வந்து குரல் கொடுக்குறாரே.. அந்த நன்றியா இருக்குமோ என தெரிவித்துள்ளார்.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
- இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீமான் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்!
அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரு கதாநாயகர்களாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு களித்தேன்.
உலகெங்கும் பூர்வகுடி மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் மிக முக்கிய வாழ்வியல் சிக்கலை கதைக்களமாக கொண்டு, தற்காலச் சூழலில் சொல்லப்பட வேண்டிய மிக அழுத்தமான கருத்தினை மிக அழகாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் தம்பி கார்த்திக் சுப்புராஜ்.
'நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவப் பெருந்தகை கூறியது எந்த அளவிற்கு உண்மையோ, காடின்றி அமையாது நாடு என்பதும் அதே அளவிற்கு உண்மை. அதனாலேயே மற்றொரு குறளில் "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்" என்கிறார். அந்த வகையில் காடு மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கியமானது என்பதனை இத்திரைப்படம் வலியுறுத்துகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலை அழுத்தமான உரையாடல்களோடு இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிகச்சிறப்பானது.
யானைகள் இல்லாமல் காடு இல்லை! காடு இல்லாமல் நாடு இல்லை! என்பவை போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற செய்தியல்ல; மிகப்பெரிய புவியியல் உண்மையாகும். நாம் வாழும் பூமி 70 விழுக்காடு நீரால் சூழப்பட்டுள்ளது. 30 விழுக்காடுதான் நிலத்தால் ஆனது. அதில் பெரும்பகுதி காடுகள்தான். மனிதர்கள் நாம்தான் சமூக விலங்காக மாறிவிட்டோம். ஆனால் கோடிக்கணக்கான உயிரினங்கள் இன்றளவும் காடுகளை நம்பியே வாழ்கின்றன. அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர்ப் பெருக்க வாழ்விடமாக விளங்கக்கூடிய வனங்களையும், அதன் வளங்களையும் அழித்தொழிப்பதென்பது எத்தகைய பேராபத்தினை ஏற்படுத்தும் என்பதை மிக ஆழமாக பதிவுசெய்யுள்ளர் தம்பி கார்த்திக் சுப்புராஜ்.

இதை வெறும் படம் என்று கூறிவிட முடியாது. நம் அனைவருக்குமான பாடம். நாம் காட்டுவாசி, ஆதிவாசி என்றெல்லாம் வாய்மொழியாக கூறிவிடுகிறோம். உண்மையில் அவர்கள் மலைவாழ் மக்கள். நம் மண்ணின் தொல்குடி மக்கள். காடும், காடு சார்ந்த நிலத்திற்கும் பாதுகாப்பு அரணே அவர்கள்தான். ஆனால் இன்றைக்கு வளவேட்டைக்காக முதலில் பலியிடப்படுவதும் அம்மக்கள்தான். தண்டகாரண்யத்தில் பச்சை வேட்டை என்றொரு திட்டத்தைத் தொடங்கி அங்கு இருக்கும் 250 இலட்சம் கோடி மதிப்பிலான வளங்களை எடுப்பதற்காக அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்த முனைந்தபோது, உங்களுக்கு இது காடு, எங்களுக்கு இது வீடு இதை விட்டு செல்லமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். அந்த கருத்தைத்தான் இத்திரைப்படமும் வலியுறுத்துகிறது.
என் மண், என் நிலம், என்னுடைய வாழ்விடம் அதைவிட்டு ஒருபோதும் செல்ல முடியாது, உயிர் போனாலும் இந்த மண்ணில்தான் என்று படம் பேசும் கருத்தில்தான் ஒவ்வொரு தேசிய இனங்களின் போராட்டமும் தொடங்கியது. அதுதான் நேற்று ஈழத்தில் நடந்தது; இன்று பாலஸ்தீனத்திலும் நடைபெறுகிறது. 'சூழலியலின் தாய்' வங்காரி மாதாய் உலகெங்கிலும் போர் என்பதே வள வேட்டைக்காகத்தான் நடைபெறுகிறது என்கிறார். அப்பேருண்மையை குறிப்பிட்ட நேரத்திற்குள் திரைமொழியில் அழுத்தமாக சொல்ல முடிந்தது என்பதே இத்திரைப்படத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.
தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் மிகுந்த சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். நான் தரையில் பேசுவதை தம்பிகள் திரையில் நேர்த்தியாக மொழிப்பெயர்த்துள்ளதைக் கண்டபோது, இத்திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமாக நேரடித் தொடர்பினை ஏற்படுத்திவிட்டது.

சீமான் அறிக்கை
இத்திரைப்படத்தில் என்னுடைய தம்பி எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இதுவரை இல்லாத வகையில் நடிப்பில் புதியதொரு பாய்ச்சலை வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் கதையின் நாயகனாக வேறு ஒரு பரிணாமத்தில் தோன்றி அசத்தியுள்ளார். அதைப்போன்று தம்பி ராகவா லாரன்சு அவர்களுக்கும் இது முற்றிலும் மாறுதலான படமாக அமைந்துள்ளது. இரு நாயகர்களுமே போட்டி போட்டு நடித்து படத்தினை வெற்றிப்பெறச்செய்துள்ளனர். புதுமுகம் தம்பி விது அவர்களின் நடிப்பு வியக்க வைக்கிறது. மாமா இளவரசு மற்றும் கதையின் நாயகிகளான நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்தினை மேலும் மெருகேற்றியுள்ளது. யானைகள் வரும் சண்டைக் காட்சிகள் வரைகலையில் எடுக்கப்பட்டதுதானா என்று சந்தேகிக்கும் அளவிற்கு மிகவும் உயிரோட்டமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அமைந்துள்ளது.
தம்பி திருநாவுக்கரசுவின் மிகச்சிறப்பான ஒளிப்பதிவும், தம்பி சபீக் முகமதுவின் படத்தொகுப்பும் காடுகளில் பயணித்த அனுபவத்தை தருகிறது. தம்பி சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது. கலை இயக்குநர் சந்தானத்தின் கலைப் பணிகள் உண்மையின் நெருக்கத்திற்கு கொண்டு சென்று நம்மை படத்தோடு ஒன்றச் செய்கிறது. படத்தில் பல விதமான சண்டை காட்சிகள் இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்துவமாக செய்திருக்கின்ற தம்பி திலீப் சுப்புராயனின் பணி பாராட்டத்தக்கது. அதேபோன்று, படத்தில் நடித்துள்ள அனைத்து புது முகங்களின் தேர்வும், அவர்களின் இயல்பான நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
இப்படியொரு அழுத்தமான கதையினை திரைப்படமாக எடுக்க முன்வந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், படம் மிகச்சிறப்பாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளமைக்குக் காரணமான திரைக்கதை, கதைக்களம், திரை உருவாக்கம் என அனைத்திலும் தனக்கென்று தனிவழியைப் பின்பற்றி ஆகச்சிறந்த படைப்புகளை அளித்து வரும் இயக்குநர் தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கும், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்சு ஆகியோருக்கும், கதை மாந்தர்களாக நடித்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பழங்குடி மக்களின் வாழ்வியலை, அவர்களின் உரிமைப்போராட்டத்தை பேசும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை இதுவரை காணத் தவறிய உலகெங்கும் பரவிவாழும் என் பேரன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவரும், நம் உள்ளத்து உணர்வினைப் பேசும் இத்திரைக்காவியத்தைத் திரையரங்குகளுக்குச் சென்று கண்டு களித்து படத்திற்கு மிகப்பெரிய ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) November 20, 2023
பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்!
அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரு கதாநாயகர்களாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின்… pic.twitter.com/s4xe0OlG6D
- சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- சீமான் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந்தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதி ர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.
ஆனால் அன்று சீமான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வந்தது. இதை அடுத்து இன்று காலை சீமான் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கோர்ட்டுக்கு வந்து ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) வழக்கை வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக சீமான் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- தம்பி விஜய் அரசியலுக்கு முதலில் வரட்டும். அவரது கொள்கைகளை கூறட்டும்.
- விஜயகாந்த் வலுவாக வந்தார். மாற்றம் என்று கூறியவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால் பின்னடைவை சந்தித்தார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வர தயாராவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-
தம்பி விஜய் அரசியலுக்கு முதலில் வரட்டும். அவரது கொள்கைகளை கூறட்டும். எம்.ஜி.ஆரே அரசியலுக்கு வருவதற்கு முதலில் தயங்கினார். ஜெயலலிதா புதிதாக கட்சி தொடங்கி இருந்தால் வென்றிருப்பாரா என்பது தெரியாது. விஜயகாந்த் வலுவாக வந்தார். மாற்றம் என்று கூறியவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால் பின்னடைவை சந்தித்தார்.
சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்றவர்களாலும் வெல்ல முடியவில்லை. எனவே விஜய் அரசியலுக்கு வந்தால் நின்று சண்டை போடவேண்டும். விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவோம். விஜய் கனவு வெல்ல எனது வாழ்த்துக்கள். கட்சி தொடங்கி உடனே வென்றால் அது புரட்சிதான்.
இவ்வாறு சீமான் கூறினார்.
- பொருளாதார ரீதியாக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு கொண்ட சீமான் மகளிர் உரிமை பாதுகாவலரா?
- 100 நாள் வேலை திட்டத்தை இழிவாக பேசுவதை ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது.
சென்னை:
நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இதுபோல் 100 நாள் வேலை திட்டத்தையும் இழிவாக பேசுவது ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது.
பொருளாதார ரீதியாக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு கொண்ட சீமான் மகளிர் உரிமை பாதுகாவலரா? எதற்கு எடுத்தாலும் தகுதி பற்றி பேசும் சீமான், 60 ஆண்டுகளாக காங்கிரஸ், 15 ஆண்டுகளாக பா.ஜ.க., 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் என்ன கிழித்தது என விமர்சனம் செய்வதற்கு முன் 60 வயதுடைய சீமான், வீட்டுக்கு வாடகை கொடுக்க பிச்சை எடுக்கிறேன் என அவரே கூறியுள்ளார்.
மொழியை கேடயமாக பயன்படுத்தும் நேர்மையற்ற வறண்ட பாலைவனம் சீமான். ஓநாயின் சூழ்ச்சியை தமிழ் தேசியவாதிகள் ஏற்க மாட்டார்கள். நமதுரிமை காக்கும் கட்சியும் ஏற்காது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் உள்ளது
- மனித கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது.
கிருஷ்ணகிரி:
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறி இருக்க வேண்டும். கர்நாடகா அரசு அம்மாநில மக்களுக்கு உண்மையாக இருக்கும் போது, தமிழக மக்களுக்கு முதலஅமைச்சர் உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் தமிழக மக்கள் நலனைவிட இந்தியாவை காப்பாற்ற போகிறேன் என முடிவெடுத்துவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சீமான் முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாதி வாரிய கணக்கெடுப்பு வேண்டும் என முதலில் தமிழ்பெருங்குடி ஆனந்தம் தான் பேசி, 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தார். அதன் பின் சாதிவாரியாக கணக்கெடுப்பு வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் நான் ஆகியோர் போராடி வருகிறோம். அன்று முதல் இன்று வரை சாதிவாரிய கணக்கெடுப்பு பேசப்பட்டு வருகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரை இது குறித்து பேசுவார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோத நிறைவேற்றப்பட்டது. முதலில் ஆட்சியில் வேண்டாம், பாஜக தனது கட்சியில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தருமா. தேர்தல் வரும் போது மட்டும் நம் மீது பாசம், அக்கறை, பற்று, விலைவாசி உயர்வு போன்றவை ஞாபகம் வருகிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் 1947ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1967ல் தான் ஆட்சியை பிடித்தது. அப்படித்தான் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தனது அடித்தளத்தை வளர்த்தி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வரும் போது, பிற கட்சியை சார்ந்தவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள். காவிரி பிரச்சனையில் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் போன்றவற்றில் உள்ள அதிகாரிகள் முறையாக இல்லை. இரு மாநில அதிகாரிகள் சமமாக இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் உள்ளது. அதற்காக ஏன் பல ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்த வேண்டும்.
பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறிய பிறகு, அ.தி.மு.கவில் இருந்து உங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுத்ததாக என்ற கேள்விக்கு, அழைப்பார்கள், நாங்கள் தேர்தலுக்கான வேட்பாளர்கள் முன் பணிகளில் உள்ளோம். கூட்டணிக்கு அழைப்பார்கள் இன்னும் நாள் உள்ளது. பிறகு தான் பேச வேண்டும். ககல்யான் விண்கலம் கடைசி நிமிடம் நிறுத்தம் தொடர்பான கேள்விக்கு, இந்தியா மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சியால் நமக்கு என்ன பயன். 28 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் இருப்பதாக பாஜகவினர் தான் சொன்னார்கள்.
கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு வழங்கியதாக நிதி அமைச்சர் பேசுகிறார். சாலையை முறையாக போடுங்கள். நாட்டில் பிச்சை எடுப்பது வளர்ச்சி இல்லை. பிச்சைக்காரன் இல்லாமல் இருப்பது தான் வளர்ச்சி. ஜி20 மாநாடு, காமன்வெல்த் போட்டிகள் நடந்த போது, பதாகைகள் வைத்து குடிசைகளை மறைத்தனர். ஒரே நாளில் 13 ஆயிரம் பிச்சைக்காரர்களை லாரியில் ஏற்றி வேறு மாநிலத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். இவர்கள் பேச்சு எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. சந்திர மண்டலத்தில் குடியேறலாம் என்றால், முதலில் இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் என யாரை முதலில் குடியேற்றுவீர்கள். உங்களை குடி அமர்த்த விட்டுவிட்டு, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அமைதியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி எல்லாம் வீண் செலவு. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் வாக்கை இயந்திரத்தில் போட்டுவிட்டு, மனித கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் நாள் விரைவில் வரும்.
- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி.
சேலம்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கைக்கு கப்பல் பயணம் அறிவித்த அன்றே தெரியும், அந்த கப்பல் பயணிக்க போவதில்லை என்று. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இலங்கை ராணுவமே தமிழக மீனவர்கள் மீது சுடுகிறது, வலைகளை அறுத்து எறிகிறது. சொல்ல முடியாத சித்ரவதைகளை செய்து வருகிறது. இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் எதுவும் கண்டுகொள்வதில்லை.
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் நாள் விரைவில் வரும். அப்போது மீனவர்கள் மீது கை வைக்க சொல்லுங்கள் பார்ப்போம். ஏனென்றால் அவர்களுக்கே தெரியும், கொன்று விடுவார்கள் என பயம் ஏற்படும். கர்நாடகம் தண்ணீர் கொடுக்க மறுப்பதால் தி.மு.க. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட்டு கூட இல்லை என்று கூறி கூட்டணியை விட்டு விலக்கி இருக்க வேண்டும்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அந்த பயத்திலேயே தி.மு.க. அரசு லியோ படத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளது. மத்தியில் பா.ஜனதா கட்சி இருப்பதால் அண்ணாமலையின் பேச்சு மதிக்கப்படுகிறது. இல்லாவிடில் அவரது பேச்சு எடுபடாது. நாம் தமிழர் கட்சி மக்களுடன் தான் மிகப்பெரிய கூட்டணி வைத்துள்ளது. மக்களை நம்பி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.
கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. அழைத்து பேசும்போது கூட, இரு கட்சிகளுக்கும் கொள்கை முடிவு வெவ்வேறாக இருப்பதால் முடியாது என்று கூறிவிட்டோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட மாட்டார். அப்படி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் களம் இறங்குவேன். அவரிடம் நிறைய கேள்விகள் கேட்பேன். ஓட்டுக்காக பணம் கொடுப்பதை ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது.
- 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வரவில்லை.
நாமக்கல்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாமக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது. மக்களை நம்பி தான் நான் இருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். வெற்றி பெறுவோம். கல்வி, மருத்துவம், தண்ணீர் என எல்லாற்றையும் விற்றுவிட்ட நிலையில், தற்போது குழந்தைகளை விற்று வருகின்றனர். மூளைச்சாவு என்ற நோயை உருவாக்கி, மனிதனின் உடல் உறுப்புகளை விற்கின்றனர்.
ஒழுகும் பள்ளிகளை சீரமைக்க முடியாத அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து சமாதி கட்டுகிறது. தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் எனக் கூறி வருகிறார். ஆனால் ஆசிரியர்கள், செவிலியர்கள் எதற்காக போராட்டம் நடத்துகின்றனர்?. மகளிர் உரிமை தொகைக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி தமிழக அரசு செலவு செய்கிறது. யாருடைய பணத்தை செலவு செய்கிறார்கள்?. 60 ஆண்டுகளாக, திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன.
'ஜெயிலர்' திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வரவில்லை. நடிகர் விஜய் நடித்த 'லியோ' படத்திற்கு, இசை வெளியீட்டு விழாவில் இருந்தே பிரச்சனைதான். காரணம், நடிகர் விஜய் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வருவார் என்பதால் தான் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். அவர் நடிப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்ய முடியும். தேவையில்லாமல் நடிகர் விஜயை சீண்டி விட்டீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாம் தமிழர் கட்சி சீமானால் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது.
- கூட்டணி விஷயத்தில் சீமான் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக இருக்கும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்க அதிரடியாக காய் நகர்த்தி வருகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த தோழமை கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு புதிதாக மெகா கூட்டணியை அமைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடைபெற்று வருகின்றன.
இந்த கூட்டணியில் புதிய கட்சியாக சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சீமானிடம் விரைவில் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு இழுக்க அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளன.
இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் ஆர்வமாக உள்ளன. அந்த வகையில் சீமானின் நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.
இதுபற்றி நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது, "எங்களுக்கு கூட்டணி அழைப்பு வந்தது உண்மை தான் என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில் தனித்து போட்டியிடும் முடிவில் உறுதியாகவே இருக்கிறோம். ஆனால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி சீமானால் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலுமே அந்த கட்சி தனித்தே போட்டியிட்டுள்ளது. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குகளை பெற்றுள்ளனர்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 3-வது இடம் கிடைத்தது. 170-க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதித்திருந்தனர். உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வெற்றியும் பெற்றிருந்தனர்.
நாம் தமிழர் கட்சயின் இந்த வாக்கு சதவீதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 10 சதவீதத்தை தாண்ட வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இதை மனதில் வைத்துதான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமானை அ.தி.மு.க. கூட்டணிக்கு இழுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் நாம் தமிழர் கட்சிகள் கூட்டணி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு பிரிவினர் கூட்டணி அமைக்கலாம் என்றும், இன்னொரு பிரிவினர் கூட்டணி வேண்டாம் என்கிற கருத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கூட்டணி விஷயத்தில் சீமான் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக இருக்கும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்த்து ஜெயலலிதா வெற்றி பெற்றார். அதே பாணியில் தற்போது சீமானை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வெற்றி பெற்று விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டிருப்பதாக அ.தி.மு.க.வின் தெரிவித்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் பலன் அளிக்குமா? அ.தி.மு.க. கூட்டணியில் சீமான் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.