என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு காவல்துறை"

    • காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு சிறப்புமிக்க குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காவல் ஆய்வாளர்கள் பாண்டி முத்துலட்சுமி, செந்தில் குமார், ஆனந்தி, சந்திரா, உதவி ஆய்வாளர் முருகனுக்கு விருது அறிவிப்பு.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு சிறப்புமிக்க குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காவல் துறை கண்காணிப்பாளர் குமரவேலு, துணை ஆணையர் அன்வர் பாஷா, ஐஜி மகேஸ்வரிக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகைசால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, டிஎஸ்பி தேவராஜன், கமாண்டன்ட் மணிவர்மன், உதவி ஆணையர் ஜான், கூடுதல் ஆணையர் அமுல்தாஸூக்கு மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிஎஸ்பி சீனிவாசன், ஆய்வாளர்கள் விஜய், கிருஷ்ணமூர்த்தி, ஜானகி, காளீஸ்வரி, இலக்குமணன், ரகுநாதன், மோகனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    காவல் ஆய்வாளர்கள் பாண்டி முத்துலட்சுமி, செந்தில் குமார், ஆனந்தி, சந்திரா, உதவி ஆய்வாளர் முருகனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புரிதலற்ற, தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது.
    • கர்நாடக மக்களிடம் இருந்து இன ஓர்மையையும், மாநிலக் கொடிக்கான மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை வெறுப்பதோ, அதற்காக தாக்குவதோ தேவையற்றதாகும்.

    திருப்பூர் அருகே, தங்கள் மாநிலக்கொடியை வாகனத்தில் பொருத்தி வந்ததால், கர்நாடகத்தினர்மீது தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள அவர்,  

    தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து, அதில், பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச்சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற புரிதலற்ற, தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது.

    கர்நாடக மாநில முதலமைச்சர் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றும் வேளையில், அருகிலேயே கர்நாடக மாநிலக் கொடியையும் ஏற்றுகின்றார். கர்நாடகாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரே தன்னுடைய அரசு வாகனத்தில் இந்திய கொடியுடன், கர்நாடக மாநிலக் கொடியையும் பொருத்தியுள்ளார். கோலார் தங்கவயல் சுரங்கங்களில் அணுக்கழிவை பாதுகாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டபோது இதே கன்னடக்கொடியை ஏந்தியே ஒற்றுமையுடன் தங்களின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அச்சதியை கன்னட மக்கள் முறியடித்தனர்.

    அண்டை மாநிலங்களுடனான எல்லைச்சிக்கல், நதிநீர் சிக்கல், இந்தி திணிப்பு எதிர்ப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு உள்ளிட்ட எந்தவொரு மாநில உரிமைச்சார்ந்த பிரச்சனைகளிலும் கர்நாடக கொடியை ஏந்தியே கன்னட மக்கள் உரிமை மீட்கின்றனர். கர்நாடக உரிமைப்போராட்டங்கள் யாவிலும் சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி கன்னட மக்கள் அனைவரும் கட்சி கொடிகளை விடுத்து, மஞ்சள் சிகப்பு வண்ணங்களுடனான கர்நாடக கொடியை தங்களின் ஒற்றை அடையாளமாக்கி போராடும் அளவிற்கு அக்கொடி மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும்.

    கன்னட மக்களின் உணர்வுடன் இரண்டற கலந்து, அவர்களது ஒற்றுமையின் அடையாளச் சின்னமாக திகழும் கர்நாடக மாநில கொடியை கன்னட மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெருமையோடு தங்கள் கைகளிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் பொருத்துகின்றனர். அது அவர்களின் அடிப்படை உரிமையுமாகும். கன்னட மக்களின் அத்தகு இன உணர்வை மதித்து நாம் போற்ற வேண்டும். அவர்களிடமிருந்து இன ஓர்மையையும், மாநிலக் கொடிக்கான மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை வெறுப்பதோ, அதற்காக தாக்குவதோ தேவையற்றதாகும்.

    இத்தகு வன்முறையில் ஈடுபடுவோர்கள், கன்னட மக்கள் மீதும், கர்நாடக கொடியின் மீதும், உங்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் காட்டுவதற்கு பதிலாக இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் போற்றிய மூவேந்தர் இலட்சனை பொருந்திய தமிழ்நாட்டு கொடியை அங்கீகரிக்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் மீது உங்கள் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

    60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டும், தமிழ்நாட்டிற்கென்று தனித்த கொடி உரிமையை வாங்கி தராத திமுக, அதிமுக கட்சிகள் மீது உங்கள் கோபம் இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமையை பறித்த பாஜக, காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும், அதற்கு துணைநின்றவர்கள் மீதும் உங்கள் வெறுப்பும், எதிர்ப்பும் இருந்திருக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ்நாட்டிற்கு வரும் அப்பாவி கன்னட மக்களை வெற்று வெறுப்புணர்வு கொண்டு தாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    ஒரு சிலரின் இதுபோன்ற தேவையற்ற அடாவடிச் செயல்களால் கர்நாடகாவில் எழுந்துள்ள பதற்றமும், இதை சாதகமாக பயன்படுத்தி கன்னட அமைப்புகள் சில, அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக செய்யும் வெறுப்பு பரப்புரைகளும் பெருங்கவலையைத் தருகிறது. எனவே, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும், எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தும் இதுபோன்ற இழிசெயல்களில் இனிமேல் எவரும் ஈடுபட வேண்டாமென வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 


    • புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன?
    • கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால், நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

    யூடியூபர் சவுக்கு சங்கர் தான் பேசும் வீடியோக்களில் தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும், திமுகவையும் விமர்சித்து வருகிறார். அதற்காக அவ்வப்போது அவதூறு வழக்குகள் போடப்பட்டு, கைது செய்யப்பட்டு, பின் வெளிவருவது என்பதை வாடிக்கையாக வைத்துவருகிறார்.

    இந்நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக சவுக்கு சங்கர்மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் கடந்தவாரம் போலீசார் சவுக்கு சங்கரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

    இதனையடுத்து சவுக்கு சங்கரின் தாயார், சவுக்கின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கருக்கு 2025 டிசம்பர் 26 முதல் 2026 மார்ச் 25 வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் சவுக்கு சங்கர் தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கும் நோக்கில் சவுக்கு சங்கர் செயல்படக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.

    இதனிடையே தீர்ப்பின் போது பேசிய நீதிபதிகள், யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? நீங்கள் ஏன் செய்தியாளர்களுக்கு பின்னால் ஓடுகிறீர்கள்? கருத்து வேறுபாடு என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். சட்டமன்றத்தில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது. கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால், நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் அவதூறு வழக்கு மூலம் சிவில் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெறலாம். அதற்கு உங்களை யாரும் தடுக்க முடியாது. தனி நபர் சுதந்திரம் என்ற விஷயத்தைத் தொட்டால் அது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் தலையிடுவதாக அமைந்துவிடும்.

    அதிகாரிகளின் நன்மதிப்பை இழந்த குறிப்பிட்ட நபர்களைக் குறிவைக்க சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. தனிநபருக்கு எதிராக தொடர்ச்சியாகக் காட்டப்படும் கடுமையான நடவடிக்கைகள், நாட்டின் குடிமக்களுக்கு சரியான செய்தியை அனுப்பாது. அதிகாரிகளின் துஷ்பிரயோகம் மூலம் சவுக்கு சங்கரை துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். அனைத்து காரணிகையும் கருத்தில் கொண்டு சவுக்கு சங்கர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தனர்.

    • 2023-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் Anti Terrorism Squad புதிதாக உருவாக்கப்பட்டது.
    • அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை ATS படையினர் கைது செய்துள்ளனர்.

    உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், Anti Terrorism Squad புதிதாக உருவாக்கப்பட்டது.

    கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல்துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலக் காவல்துறையினருக்கும் எமது நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா ஈரோடு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • ஈரோடு எஸ்.பி.யாக பணியாற்றிய ஜவகர் சிபிசிஐடி சென்னை வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் 10 காவல் அதிகாரிகள் பணியிட் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஜாகீர் உசேன் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமனம், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா ஈரோடு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஈரோடு எஸ்.பி.யாக பணியாற்றிய ஜவகர் சிபிசிஐடி சென்னை வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஹரிகிரணம் பிரசாத் மயிலாப்பூர் நலப்பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு அறிவுறுத்த கவர்னருக்கு அதிகாரம் உண்டு.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறையை மட்டுமல்ல அரசு வழக்கறிஞர்களையும் தவறாக வழி நடத்தியுள்ளனர்.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியினர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழக சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி, மாநில செயலாளர் பிரமிளா சம்பத் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கவர்னரிடம் மனு அளித்தனர்.

    கவர்னரை சந்தித்த பிறகு அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளச்சாராய உயிரிழப்பு உள்ளிட்டவை குறித்து கவர்னரிடம் 2 மனுக்களை அளித்துள்ளோம். கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

    தமிழகத்தில் டாஸ்மாக்கின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதை கவர்னரிடம் எடுத்து கூறி உள்ளோம். அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இன்னும் 15 நாட்களுக்குள் டாஸ்மாக்கை குறைத்து அதே வருமானத்தை கொண்டு வர முடியும் என்கிற வெள்ளை அறிக்கையையும் முதலமைச்சரிடம் கொடுப்பதாக நாங்கள் கவர்னரிடம் கூறியுள்ளோம்.

    காவல் துறைக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று மகளிர் அணியுடன் வந்து கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்.

    இதற்கான அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது என்று நம்புகிறோம். அரசியலமைப்பு சட்டத்தை அமைச்சர் மீறும்போது அதை காக்கும் பொறுப்பு கவர்னருக்கு உண்டு.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு அறிவுறுத்த கவர்னருக்கு அதிகாரம் உண்டு.

    தமிழகத்தில் காவல் துறைக்கு சுதந்திரம் இல்லை. தி.மு.க. ஒன்றிய செயலாளர் அனுமதி இல்லாமல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முடியுமா? கடந்த 2 வருடங்களாகவே நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு காவல் துறைக்கு சுதந்திரம் இல்லை என்பது தான். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறையை மட்டுமல்ல அரசு வழக்கறிஞர்களையும் தவறாக வழி நடத்தியுள்ளனர்.

    இதே போல் அமைச்சர் செஞ்சி மஸ்தானையும் நீக்க கவர்னர் முதலமைச்சருக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

    பனை தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மீண்டும் கள்ளை கொண்டு வருவதற்கு தமிழக பா.ஜனதா கட்சி உறுதுணையாக நிற்கும். 15 நாளில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம். அடுத்த 5 நாளில் விழுப்புரத்தில் மாநாடு நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    • விழாவில் 159 மத்திய அரசு பதக்கங்களும் 301 முதலமைச்சர் பதக்கங்களும் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர், சென்னை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இங்கு, காவல்துறையினர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து, காவல்துறையினருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பதக்கங்களை வழங்கி கவுரவித்து வருகிறார்.

    அதன்படி, காவல், ஊழல் தடுப்பு, தீயணைப்பு, சிறை, சீர்திருத்த பணி, ஊர்க்காவல், தடய அறிவியல் துறையினருக்கு பதங்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவில் 159 மத்திய அரசு பதக்கங்களும் 301 முதலமைச்சர் பதக்கங்களும் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.

    சோமரசம்பேட்டை காவல் நிலைய காவலர் பி.செந்தில் குமாருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

    • சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
    • சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

    பிறகு, நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காவல்துறை என்னுடைய துறை என்பதால் இந்த நிகழ்ச்சி கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

    நானே பதக்கம் வாங்கியது போன்று மகிழ்ச்சியாக உள்ளது. பதக்கம் வென்ற காவலர்களுக்கு வாழ்த்துகள்.

    பதக்கங்களுக்கு பின்னால் உள்ள உங்கள் உழைப்பு தலை வணங்கத்தக்கது. அமைதியான மாநிலத்தில் தான் வளமும், வளர்ச்சியும் இருக்கும்.

    இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் பெருமைமிகு மாநிலமாக திகழ, காவல்துறையின் பங்கு முக்கியமானது.

    சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது.

    காவல்துறையினரின் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது. மக்களை பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

    காவல் துறையை மேலும் நவீனப்படுத்தி வருகிறோம்.

    காவல்துறையை நவீனமயமாக்கியவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. காவல் துறையில் மகளிருக்கு வாயப்பு அளித்தது கருணாநிதி தான்.

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடங்களில் பணி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

    • கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம்
    • சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

    புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் பதவியில் இருந்த ரவி கடந்த 31ம் தேதி பணி ஓய்வு பெறறார். அந்த பதவி காலியாக உள்ளது. ஆவடி ஆணையர் அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிலையில், தற்போது, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராக இருந்த அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தாம்பரம் இரண்டாவது காவல் ஆணையராக பதவியேற்கிறார்.

    இதேபோல் அண்மையில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படையின் ஐஜியாக அவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி வடக்கு மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புததாக உருவாக்கப்பட்ட சைபர் கிரைம் செல் போன்ற பதவிகளுக்கும் கண்காணிப்பாளர்கள் நிமியக்கப்பட்டுள்ளனர்.

    ×