என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீவிரவாத எதிர்ப்புப் பணி: தமிழ்நாடு காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
- 2023-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் Anti Terrorism Squad புதிதாக உருவாக்கப்பட்டது.
- அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை ATS படையினர் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், Anti Terrorism Squad புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல்துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலக் காவல்துறையினருக்கும் எமது நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.






