என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATS"

    • 2023-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் Anti Terrorism Squad புதிதாக உருவாக்கப்பட்டது.
    • அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை ATS படையினர் கைது செய்துள்ளனர்.

    உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், Anti Terrorism Squad புதிதாக உருவாக்கப்பட்டது.

    கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல்துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலக் காவல்துறையினருக்கும் எமது நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுதொடர்பாக பாகிஸ்தானியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அகமதாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், குஜராத் எல்லையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    போர்பந்தர் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கிருந்த 6 பாகிஸ்தானியர்களை கைதுசெய்தனர்.

    இந்த ஆண்டு இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

    இந்துத்வ வலதுசாரி அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த அமைப்பு புனேவில் நடந்த இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். #SanatanSanstha #ATS
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள நல சோபாரா என்ற பகுதியில் இருந்து இம்மாத தொடக்கத்தில் சனாதன் சஸ்தா அமைப்பை சேர்ந்த வைபவ் ராவத், ஷரத் கலாஸ்கர், சுதான்வ கோந்தலேகர், ஷ்ரீகாந்த் பன்கர்கார், அவினாஷ் பவார் ஆகிய 5 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

    இதில், வைபவ் ராவத் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவர்களின் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், புனேவில் கடந்த ஆண்டு நடந்த இசைநிகழ்ச்சியில் சுதான்வ கோந்தலேகர், வைபவ் ராவத் ஆகிய இருவரும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும், இந்துத்துவத்தை எதிர்க்கும் தனி நபர் பிரபலங்களை கொல்லவும் அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
    ×